கண்ணனின் #தாலாட்டு

கிருஷ்ணா முகுந்தா முராரே!! ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!!

கமலநயன வாசுதேவ கரிவரத மாம்பாகி…..அமல ம்ருதுல நளினசரண அச்சுதா முதம் தேகீ…. என்கிற பத்ராசலராமதாசர் பாடல் பாட ……

சின்னஞ்சிறு குழந்தைகளைத் தாலாட்டி, பாட்டுப்பாடி உறங்க வைப்பதென்பது மிகவும் இன்ப மயமான அனுபவம். அக்குழந்தை ‘இவ்வாறு வளர வேண்டும், பெரிய பெயர் பெற வேண்டும், அருஞ்செயல்கள் செய்ய வேண்டும்’ எனவெல்லாம் தாய் தன் குழந்தையைப் பற்றிக் காணும் கனவுகளைப் பாட்டாக ‘தாலேலோ’ என்று நாவினை அசைத்துப் பாடி மகிழ்கிறாள். குழந்தையும் இவையனைத்தையும் கேட்ட வண்ணம் உறங்குகிறது.

தாயின் பாடல்கள் அப்பிஞ்சு மனதில் பதிந்து எழுச்சியை உண்டு பண்ணும் எனத் தாயுள்ளம் எண்ணுகிறது. அன்பினை வளர்க்கும்; வளர்ந்தபின் அவள் ஆசையை நிறைவேற்ற முனையும் எனெவெல்லாம் நினைக்கிறாள் தாய். பாடுகின்ற தாயின் உள்ளக் கனவுகள், அவள் வளர்க்கும் மதலையின் செயல்கள் மூலமாக ஒரு நல்லதொரு மகனையோ மகளையோ உலகிற்கு அளிக்க அஸ்திவாரமிடுகின்றன எனலாம். இது மானிடக் குழந்தைகளுக்குப் பொருந்தும்.

தெய்வத்தைக் குழந்தையாக்கித் தாலாட்டுப் பாடினால்…..?

அதன் குறும்புகளை ரசிக்கலாம். அழகினைப் போற்றலாம். அவன் கடவுளாகச் செய்த, செய்கின்ற, செய்யப் போகின்ற நிகழ்வுகளைப் பற்றிப் பாடிக் களிக்கலாம். இவ்வாறு தான், பெருமை பெருமை பொங்கும் ஒரு தாயின் நிலையில் நின்று பெரியாழ்வார், குழந்தை கிருஷ்ணனைக் கண்வளரச் செய்யப் பாடுகின்றார்.

“கிருஷ்ணா, உனக்கு எப்பேர்ப்பட்ட தொட்டிலை பிரம்மன் அனுப்பி வைத்திருக்கிறான் என்று பார்த்தாயா? மாணிக்கம் கட்டி, அதன் இடையில் வைரத்தினை இழைத்து மாற்றுக் குறையாத ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறு தொட்டிலை, உனக்கென்றே செய்து அனுப்பி வைத்திருக்கிறான். மழித்த தலையுடன் சிறுவன் வாமனனாக வந்தவனே! தாலேலோ! இந்த வையத்தையே உன் திருவடிகளால் அளந்தவனே தாலேலோ!”

மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

(பெரியாழ்வார் திருமொழி-4)

ஏனோ குழந்தை கிருஷ்ணன் உறங்காமல் சிணுங்கி அழுகின்றான். அவனைச் சமாதானம் செய்விக்கத் தாய், “உனக்காக யார் யார் என்னவெல்லாம் அனுப்பியிருக்கிறர்கள் பார் கண்ணே! தேன் நிறைந்த பூவில் வாழும் திருமகள், காட்டில் விளைந்த நறுமணம் மிகுந்த திருத்துழாயினை அழகிய மாலையாகக் கட்டியும், கற்பகப் பூக்களாலான நெற்றி மாலையையும் உனக்காகவே, திருக்குடந்தையில் பள்ளி கொண்ட என் பெருமானுக்காகவே கொடுத்து அனுப்பியிருக்கிறாள் பார்! என் கோவே! அழாதே குழந்தாய்! கண்ணுறங்குவாயாக! தாலேலோ!” என்கிறாள்.

கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே அழேல்அழேல் தாலேலோ!
குடந்தைக் கிடந்தானே! தாலேலோ!

(பெரியாழ்வார் திருமொழி-4)

“நீ உறங்கி எழுந்திருந்த பின் உன்னை, என் குட்டிக் கண்ணனை நான் நீராட்டுவேனே! அடடே! அதற்காகவே மான் வாகனம் கொண்ட துர்க்கை, உனது திருமேனிக்கு ஏற்றவிதத்தில் நல்ல வாசனைப்பொடி, மஞ்சள்பொடி, சிவந்த கண்களில் தீட்ட கருநிற மை, சிந்தூரப்பொடி எல்லாம் கொண்டு வந்திருக்கிறாள் பார்! ஐயனே! அழாதே அப்பா! திருவரங்கத்தில் பள்ளி கொண்டவனே, நீ இப்போது உறங்குவாயாக, தாலேலோ!” எனக் கூறுகிறாள்.

மெய்திமிரும் நாணப் பொடியோடு மஞ்சளும்
செய்யதடங் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்தூரமும்
வெய்யகலைப் பாகிக்கொண்டு உவளாய் நின்றாள்
ஐயா! அழேல்அழேல் தாலேலோ!
அரங்கத்து அணையானே தாலேலோ!

(பெரியாழ்வார் திருமொழி-4)

தாலாட்டிற்கென்றே ஏற்பட்ட ராகங்கள் சில- நீலாம்பரி, குறிஞ்சி முதலியன. இருப்பினும் தாயன்பு பலவித ராகங்களிலும் தாலாட்டைப் பாடுகின்றது. எல்லா அன்னையருக்குமா அழகுற இசைபாடத் தெரியும்? குழந்தைக்குத் தாயின் குரலொலியே தாலாட்டு தானே? அவள் நாவினை (தால்- நாக்கு) அசைத்து ‘ருலு லுலு லுலு வாயீ…’ எனும்போது அதில் என்ன அமைதியைக் காண்கிறதோ குழவி, கண்ணயர ஆரம்பித்து விடுகின்றதே!

இப்படிப்பட்ட தாலாட்டின் இனிமையில் உறங்கும் குழந்தைகள் ஒரு ரகம்; இன்னொரு ரகம், தாயாரைக் கதை சொல்லச் சொல்லிக் கேட்கும் ரகம். காக்கை குருவி கதைகளிலிருந்து, புராணக் கதைகள் வரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்! கதை சொல்லும் தாயின் இனிய குரலின் ஏற்றத் தாழ்வுகளில் கிறங்கிக் கண்ணயரும் சில குழந்தைகள்; மேலும் சில குழந்தைகள் கதைகளைக் கேட்டவாறு உறங்காது கதையில் ஒன்றிக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தாயைத் துளைத்தெடுக்கும்!

கிருஷ்ணன் செய்த குறும்பைப் பாருங்கள்!

ஆயர்பாடியில் நந்தகோபன் இல்லத்தில் குழந்தை கிருஷ்ணனை உறங்க வைக்க முயன்று கொண்டிருக்கிறாள் தாய் யசோதை.

“கதை சொல்லு அம்மா!” எனத் தொல்லை செய்த தனது குழந்தைக்கு ஒரு கதை சொல்கிறாள் அவள்:

“ராமன் என்று ஒரு ராஜா இருந்தாராம்,” என்பாள் யசோதை; “ஊம்”.

“அவருக்கு சீதை என்று ஒரு அழகான மனைவி இருந்தாளாம்.” “ஊம்.”

“ராமனுடைய தகப்பனார் சொல்படி அவர்கள் இருவரும் காட்டுக்குப் போனார்கள்; அங்கே பஞ்சவடி என்னும் இடத்தில் வசித்து வந்தார்கள். அப்போது ராவணன் என்கிற ஒரு ராக்ஷஸன் வந்து தந்திரமாக சீதையைத் தூக்கிக் கொண்டு போய்விட்டானாம்,” என்று யசோதை சொன்னது தான் தாமதம் ….

கதை கேட்டுக் கொண்டிருந்த குழந்தைக்குத் தன் முற்பிறப்பின் (ராம அவதாரத்தின்) நினைவு வந்து விட்டதோ என்னவோ; தடாலென்று தொட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொள்கிறான் கிருஷ்ணன்.

“ஹே! சௌமித்ரே! (லக்ஷ்மணா!) எங்கே என்னுடைய வில்? அதை எடு, என்னிடம் கொடு (நான் ராவணனை வதம் செய்ய வேண்டும்),” என்று பரபரப்பாகக் கூறுகிறானாம்.

பில்வமங்களர் எனப்படும் லீலாசுகர் தாம் இயற்றிய ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் இதனை ஒரு அழகான ஸ்லோகத்தில் கூறுகிறார்.

ராமோ நாம பபூவ ஹூம் ததபலா
ஸீதேதி ஹூம் தௌ பிதுர்-
வாசா பஞ்சவடீதடே விஹரதஸ்
தாமாஹரத் ராவண:
நித்ரார்த்தம் ஜனனீ கதாமிதி ஹரேர்-
ஹூங்காரத: ச்ருண்வத:
ஸௌமித்ரே க்வதனுர்-தனுர்-
தனுரிதி வ்யக்ரா கிர: பாது ந:

ராமனென்ற ஒருவனும் சீதையான மனையளும்
ராஜனான தந்தைசொல் ஏற்றுமே வனம்புகுந்து
சேமமாகப் பஞ்சவடியைச் சேர்ந்திருந்த நாளிலே
சோரனான ஓரரக்கன் இராவணன் வஞ்சமாய்
தாமரைசேர் மாதவளைத் தான்கவர்ந்தான்’ எனத்தாய்
கூறிடும்சொற் கேட்டபோதில் கீதையின் நாயகன்
‘சௌமித்ரா லட்சுமணா வில்லையெடு’ என்றெழுந்தான்
சீறியெழும் கிருஷ்ணன் சொல்செவ்வியதோர் காப்பன்றோ?

(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் 2.71)

இவ்வாறெல்லாம் கதை கேட்டபடி உறங்க முயலும் கிருஷ்ணனை, “ஜோ அச்சுதானந்தா, ஜோ ஜோ முகுந்தா,” எனக் கொஞ்சிச் சீராட்டுகிறாள் யசோதை. “என் குழந்தை எவ்வளவு புத்திசாலி, சமர்த்து, நந்தகோபன் வீட்டு முற்றத்தில் அழகாக விளையாடும் உன்னைப் போய், ‘வெண்ணெய்த் திருடன்,’ என்கிறார்களே! நான் உனக்குத் தங்கக் கிண்ணத்தில் பால் தருவேன். என் அருமைக் குழந்தையே, திருப்பதியில் வளர் மதனகோபாலனே,”என்று யசோதை கொஞ்சித் தாலாட்டுவதாக தாளப்பாக்கம் அன்னமாச்சாரியர் ஒரு அழகான பாடலை இயற்றியுள்ளார்.

ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ முகுந்தா
ராவே பரமானந்த ராம கோவிந்தா (ஜோ ஜோ)

நந்தனிந்தனு சேரி நயமு மீரங்கா
சந்த்ரவதனலு நீகு சேவ சேயங்கா
அந்தமுகவரி இண்ட்ல ஆடுசூடங்கா
மந்தலகு தொங்கமா முத்து ரங்கா (ஜோ ஜோ)

அங்கஜுனி கன்ன மாயன்ன இடு ராரா
பங்காரு கிண்ணலோ பாலு போசேரா
தொங்க நீவனிசதுலு பொண்டுசுன்னாரா
முங்கிதானாதாரா மோஹனாகாரா (ஜோ ஜோ)

கிருஷ்ணனைக் குழந்தையாக்கி அவனுடைய பால லீலைகளில் ஆழ்ந்து விடுவது பக்தி செலுத்துவதில் ஒரு அழகான வகை. பக்தி செய்ய வேண்டும் என்பதற்காக யாரும் இறைவனைக் குழந்தையாக எண்ணிக் கொஞ்சுவதில்லை. குழந்தையாகக் கொஞ்சும் போது இறைவன்- அடியார் என்ற நிலையைக் கடந்து, இவன், இந்தக் குழந்தை என்னுடையவன், என அவனிடம், இறைவனிடம் (அவனை இறைவன் என்று உணர்ந்தும் உணராத நிலையில்) எல்லையற்ற அன்பும் பாசமும் பிணைப்பும் ஏற்படுகிறதே, இது பக்திக்கும் மேல் ஒருபடி உயர்ந்த உறவல்லவா?

குழந்தைக்கு அன்னை மட்டுமே தான் தாலாட்டுப் பாட முடியுமா? அடியாருமே பாடலாம் அல்லவா? நாராயண தீர்த்தர் அந்த யதுகுலத் திலகனுக்கு நீலாம்பரி ராகத்தில் அழகான பொருள்செறிந்த ஒரு தாலாட்டினைப் பாடியுள்ளார்.

நாராயணதீர்த்தர் என்ற மகான் நாரயணீயம் இயற்றிய பட்டத்ரியைப் போல் கிருஷ்ணனைப் பலவிதங்களில் பாடிக் கொண்டாடியவர். இந்தத் தாலாட்டில் கூறுகிறார்:

“யாதவரிடையே, யதுகுலத்தில் அவதரித்த கிருஷ்ணனே! சாதுக்களான பற்றற்றவர்க்குப் பற்றானவனே! உயரிய எண்ணங்களின் பிறப்பிடமே! தாமரைக் கண்ணனே! அழகான சங்கு போன்ற கழுத்தினை உடையவனே! பிம்பா பழம் போன்ற சிவந்த உதடுகளையும் சந்திரன் போலும் முகத்தினையும் கொண்டவனே!”

இது கண்ணனின் அவதார மகிமையை முற்றும் உணர்ந்து யோகநிலையில் நிற்கும் ஒரு அடியவர் பாடிவைத்த தாலாட்டு; அவரும் குழந்தையின் அழகில் தன்னை இழந்து பாடுவதை உணரலாம்.

மாதவ மாமவ தேவா கிருஷ்ணா
யாதவ கிருஷ்ண! யதுகுல கிருஷ்ண (மாதவ)

சாதுஜனாதார சர்வபௌம
மாதவ மாமவ தேவா (மாதவ)

அம்புஜலோசன கம்புசுபக்ரீவ
பிம்பாதரா சந்த்ரபிம்பானனா
சாம்பேயநாஸக்ர லக்னசுமௌக்திக
சாரதசந்த்ர ஜனிதமதனா (மாதவ)
(நாராயண தீர்த்தர்)

குழந்தை கிருஷ்ணன் உறங்கிவிட்டான். யசோதைக்கு அவன் அருகாமையை விட்டு நீங்க மனமேயில்லை. உறங்கும் அந்த அழகனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கிறாள். ‘அட! யார் இந்தக் குழந்தைக்கு அழகாகத் தலைக்கொண்டையிட்டு, பூச்சூடியிருக்கிறார்கள்?’ கோகுலத்தில் எல்லாப் பெண்களுக்குமே அவன் செல்லக் குழந்தையல்லவோ? அவரவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனுக்கு அலங்காரம் பண்ணுவதும், இன்னொன்றும்… எனத் தனக்குள் மகிழ்ந்து கொள்ளும் யசோதைக்கு திடீரென நினைவு வருகின்றது. ‘எத்தனை அழகாக இருக்கிறான் இவன்; என் கண்மணிக்குக் கண்ணேறு பட்டு விடப் போகின்றதே; ஆரத்தி எடுக்க வேண்டும்,’ என எண்ணிக் கொள்கிறாளாம்.

அற்புதமே உந்தன் அழகான கொண்டைக்கு
அரும்பு முடிந்தது யாரு?

அரும்பு முடிந்ததாரு விரும்பி உனக்கே கிருஷ்ணா
புலம்புவார் உன்னைக் கண்டால் பொல்லாத கோபிமார்கள் (அற்புதமே)

முத்துக் கொண்டைக்கு முல்லை மலர்வைத்து முடிந்தாற்போல்
நெற்றியில் ரத்னச் சுட்டி நேராய்ப் பதித்தாற்போல்
அற்புதமான கிருஷ்ணா திருஷ்டி வைத்தூரார் உன்னை பார்த்தால் என்னடா செய்வேன் பாலகோபால கிருஷ்ணா (அற்புதமே)

காணாமலே தேடி கமலமுகத்தை நாடி
கோபியர் எல்லாம் வாடி கோபருடனே கூடி
வாடா என் கண்மணியே தாடா எனக்கோர் முத்தம்
வாடா என் குஞ்சலமே ஆரத்தி எடுக்குறேன் (அற்புதமே)

இது ஒரு அழகான பாரம்பரியத் தாலாட்டுப் பாடல். எனது பாட்டியார், அத்தை முதலானவர்கள் பாடிக்கேட்டிருக்கிறேன். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இருப்பினும், நமது வீடுகளில் ஒரு பாட்டியோ, அத்தையோதான் இயற்றி இருக்க வேண்டும் என்பது பாடலின் வரிகளிலிருந்து உணர முடிகின்றது.

பெரியாழ்வார் கிருஷ்ணனைக் குழந்தையாகக்கண்டு பாடிய பாசுரங்கள் பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்திற்கு முன்னோடி எனத் தமிழ்மொழி வல்லுனர்கள் கூறுகின்றனர். இருப்பினும் ‘பிள்ளைத்தமிழ்’ பெரிதாக வளர்ச்சியுற்ற காலத்தில், ஆண்பால் பிள்ளைத்தமிழில் முருகப்பெருமானே பெரிதும் பாடப்பட்டவன். விநாயகர் மீது ஒரு பிள்ளைத்தமிழ் உள்ளது.

அழகான, வியத்தற்கரிய நிகழ்வுகள் கொண்ட குழவிப்பருவத்தினை உடைய கிருஷ்ணன் மீது (திருமால், விஷ்ணு) பிள்ளைத்தமிழ் நூல்களே இல்லை என்பது ஆச்சரியத்திற்குரியது. சமீபத்தில் திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. கவி காளருத்திரர் என்பவர் இயற்றியது என அறிகிறோம். அதிலிருந்து மூன்றாம் பருவமான தாலாட்டுப் பருவத்திலுள்ள ஒரு பாடலையும் கண்டு இக்கட்டுரையை நிறைவு செய்யலாமே!

பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர்கள், தாயின்நிலையில் நின்று பாடுவர்.

குழந்தையை உறங்கவைக்கத் தாலாட்டுப்பாடும் தாய் இங்கு அவனுடைய அருமை பெருமைகளைக் கூறி அவனைக் கண்வளர்த்துகிறாள்:

“அடியவர்கள்பால் அளவில்லாத கருணை கொண்ட ஆசாபாசங்கள் மிக்கவனே! தாமரை மலரில் அமர்ந்த பிரம்மனைத் தன் வயிற்றில் சூல்கொண்டவனே!

(நாபிக்கமலத்தில் பிரம்மனைக் கொண்டவன் திருமால்).

“தேன்இதழ்களை விரிக்கும் தாமரையில் உறையும் வனிதையான திருமகளின் கொண்கனே!

“எதிர்கொண்டுவரும் சகடம் (சகடாசுரன்) உடையுமாறு நீட்டிய சிறுதாளினை உடையவனே!

“உனது தாளினை வணங்காத அசுரர் (இராவணாதியர்) ஓடுமாறு (அழியுமாறு) சேனைநடத்தியவனே!

“இசையை ஒலிக்கும் வண்டினம் மொய்க்கின்றதும் தேனும் வாசமும் மிகுந்ததுமான துளப மாலைகளை அணிந்தமையால் துளபமணம் கமழ் தோள் உடையவனே!

“தாரகைகளின் தலைவனான சந்திரன் இடறிக்கொள்ளும் அளவுக்கு வானளாவ உயர்ந்த திருமாலிருஞ்சோலைமலையில் உறை அழகனே! தாலோ! தாலேலோ!

“அலைகள்கொண்டுகொழிக்கும் கடலை அமளியாகக் (படுக்கையாக) கொண்டு அதன்மேல் துயில்பவனே! தாலோ! தாலேலோ!” எனவெல்லாம் பாடிப்பூரிக்கிறாள் தாய்.

அடியவரளவி னோக்கியகருணை யாசாபாசாபூ
வயனொடுவயிறு சூற்கொளுமுதிய லோகாலோகாதே
மடழவிழ்கமல வீட்டுறைவனிதை லீலாகாராநேர்
வருசகடுடைய நீட்டியசிறிய தாளாதாள்சூடா
முடியுடையவுண ரோட்டெழநடவு சேனாரூடாபாண்
முரலளிநறவு வாக்கியதுளவு தோடோயாமோதர
உடுபதியிடறு காக்கிரியழக தாலேதாலேலோ
உடைதிரையமளி மேற்றுயிலழக தாலேதாலேலோ.
(திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ்)

கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் பாமரரிலிருந்து பெரும்புலவர் வரை அனைவரின் கற்பனைக்கும், சிந்தனைக்கும், பாடற்பொருளாக விளங்கியதை எண்ணி வியந்து மகிழாமலிருக்க இயலவில்லை அன்றோ?

குழந்தையின் விளையாட்டு தொடரும்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Guru

GURU’s ONE GLANCE

Guru Dhattathriya

Who is Guru??

My friend, in Hinduism, a Guru (Sanskrit: गुरु) is a spiritual teacher, mentor, or guide who helps a seeker (disciple) attain spiritual growth, self-realization, and liberation (Moksha). A Guru is considered a revered figure, embodying wisdom, compassion, and spiritual authority.

Qualities of a Guru:

  1. Spiritual wisdom and knowledge
  2. Direct experience of the divine
  3. Compassion and empathy
  4. Ability to guide and mentor
  5. Selflessness and humility
  6. Spiritual power and energy (Shakti)
  7. Connection to a lineage or tradition

Roles of a Guru:

  1. Teach spiritual principles and practices
  2. Guide seekers on their spiritual journey
  3. Initiate disciples into spiritual practices (Diksha)
  4. Offer guidance and counseling
  5. Help seekers overcome spiritual obstacles
  6. Embody and transmit spiritual energy (Shaktipat)

Types of Gurus:

  1. Satguru (True Guru): A fully enlightened being
  2. Jnanaguru (Knowledge Guru): A teacher of spiritual knowledge
  3. Yogaguru (Yoga Guru): A teacher of yogic practices
  4. Bhaktiguru (Devotional Guru): A teacher of devotional practices

Remember, a Guru is not just a teacher but a spiritual guide who helps seekers navigate the path to self-realization and liberation.

Who can be Guru??

Paramatha Shri.Guru Sri.Krishna.

In Hinduism, a Guru can be:

  1. A spiritual master or enlightened being (Satguru)
  2. A learned scholar or pandit (Jnanaguru)
  3. A yogic master or yoga teacher (Yogaguru)
  4. A devotional teacher or bhakta (Bhaktiguru)
  5. A swami or sannyasi (renunciate)
  6. A priest or pujari (temple priest)
  7. A spiritual leader or acharya (head of a spiritual institution)
  8. A family elder or respected community member (in some traditions)

Qualifications to be a Guru:

  1. Spiritual wisdom and knowledge
  2. Direct experience of the divine
  3. Compassion and empathy
  4. Ability to guide and mentor
  5. Selflessness and humility
  6. Spiritual power and energy (Shakti)
  7. Connection to a lineage or tradition

In some cases, a Guru can also be:

  1. A deity or divine being (e.g., Krishna, Shiva)
  2. A sacred text or scripture (e.g., Bhagavad Gita, Upanishads)
  3. A spiritual practice or discipline (e.g., yoga, meditation)

Ultimately, a Guru is someone who has attained spiritual realization and can guide others on their own path to self-discovery and liberation.

What is the relation between Guru and shisya??

In Hinduism, the relationship between a Guru (spiritual teacher) and Shishya (disciple) is considered sacred and essential for spiritual growth. Here are key aspects of their relationship:

  1. Trust and surrender: Shishya trusts and surrenders to the Guru’s guidance.
  2. Guidance and mentorship: Guru provides spiritual guidance, wisdom, and mentorship.
  3. Knowledge transmission: Guru shares spiritual knowledge, teachings, and practices with Shishya.
  4. Spiritual growth: Shishya learns, grows, and evolves spiritually under Guru’s guidance.
  5. Devotion and loyalty: Shishya shows devotion, loyalty, and respect to the Guru.
  6. Support and encouragement: Guru offers support, encouragement, and correction when needed.
  7. Selfless service: Guru serves Shishya selflessly, without expectation of reward or recognition.
  8. Lineage and tradition: Guru passes on spiritual lineage and tradition to Shishya.
  9. Mutual respect: Both Guru and Shishya maintain mutual respect, humility, and gratitude.
  10. Spiritual bond: A deep, spiritual bond forms between Guru and Shishya, transcending worldly relationships.

This relationship is built on:

  • Guru’s expertise and experience
  • Shishya’s willingness to learn and grow
  • Mutual commitment to spiritual growth
  • Trust, respect, and open communication

The Guru-Shishya relationship is essential in Hinduism, as it facilitates spiritual growth, self-realization, and liberation.

In the context of the Guru-Shishya relationship, authentication refers to the process of verifying the legitimacy and qualifications of a Guru. This is important to ensure that the Guru is genuine, knowledgeable, and capable of guiding the Shishya on their spiritual journey.

Authentication of a Guru can be done through:

  1. Lineage: Verifying the Guru’s lineage and connection to a recognized spiritual tradition.
  2. Qualifications: Checking the Guru’s qualifications, such as their spiritual experience, knowledge, and achievements.
  3. Reputation: Researching the Guru’s reputation among peers, students, and the spiritual community.
  4. Personal experience: Experiencing the Guru’s teachings, guidance, and energy firsthand.
  5. Divine guidance: Seeking guidance from within, through prayer or meditation, to confirm the Guru’s authenticity.
  6. Scriptural reference: Verifying the Guru’s teachings and practices against scriptural references and traditional guidelines.
  7. Community recognition: Recognizing the Guru’s status and respect within the spiritual community.

Authenticating a Guru is crucial to ensure that the Shishya receives genuine guidance and avoids potential pitfalls or misguidance.

Hope above Article may help you to identify the Guru who take you towards Wisdom.

Namodevyai.
Kumar Ramanathan.

கோத்ரம் & ப்ரவரம் – ஒர் அறிமுகம்……

சமீபத்தில் உபநயனம் செய்வித்த ஒரு சிறுவன் தனது பெற்றோரிடத்தில் ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் என்னிடம் கேட்கப்பட்டது. இது பலருக்கும் உபயோகம் ஆகும் என்று தோன்றியதால் அங்கு டைப் செய்ததை இங்கும் இடுகிறேன். முதலில் கேள்விக்கான பதில் பிறகு அறிமுகம்.

அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாத்தா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும்படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.

அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.

சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.

நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.

“ரிஷி” என்ற சொல்லுக்கு ‘பார்ப்பவர்’ என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.

அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.

ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.

‘அபிவாதயே’ என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம், அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.

ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.

கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.

திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் ‘இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.

இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;

  1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது – திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.
  2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது
  3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.
  4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
  5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.

எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;

  1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்
  2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.
  3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.
  4. தம்பதிகளில் பெண்களுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.
  5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்.

கண்ணன் திவ்ய நாம பஜனை- ஒரு கற்பனை.

நவரசம் பொருந்திய கண்ணன் திவ்ய நாம பஜனை ஒரு கற்பனை (நிஜமும் ) பதிவு :-

அன்பின் மூலம் கிடைத்ததையும், எல்லோருக்கும் வேண்டியவர்களாக ஒரு சிநேகக் கூட்டம் கிடைத்ததையும், ஒரு கனவாக எண்ணமிடும் அளவிற்கு காலங்கள் கடந்து ஓடிவிட்டாலும் பசுமையான நினைவுகளை உங்களுடன் அசை போடுவதில் ஒரு மன நிறைவு ஏற்படும் என்ற எண்ணத்தில் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.கேளுங்கள்.

கிருஷ்ண ஜெயந்தி வருகின்றது. ஒரு திவ்ய நாம பஜனை (கற்பனை ) ஆனால் இன்னும் எங்கள் ஊரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. .

எல்லோரும் சேர்ந்து திவ்ய நாம பஜனை செய்து பக்திக்கடலில் மூழ்குவோம் வாருங்கள் !!!

ஜானகீ காந்தஸ்மரணம்.ஜெய்ஜெய் ராம ராம

நமப் பார்வதி பதயே–ஹரஹர மகாதேவா

கோபிகா ஜீவன ஸ்மரணம். கோவிந்தா கோவிந்தா…….

வரிசையாகச் சொல்லி ஹரி நாராயணவும் பாடியாயிற்று.

சுக்லாம்பரதரம் முதல் ஸ்லோகங்கள் சொல்லி ஆரம்பமாகிவிட்டது பஜனை.( ஒரு கற்பனை தான் )

கணபதி படம் உள்ளது

கணபதி த்யானம் :-

மூஷிக வாஹன மோதக ஹஸ்தா சாமரகர்ண விளம்பிதசூத்ரா வாமனரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே

கிருஷ்ணபரமாத்மா படம் :-

ஜயஜானகீ ரமண ஜய விபீஷண சரண ஜயஸரோருஹ சரண
ஜயதீன கருணா ஜயஜய

தொடர்ந்து

சரணு சரணு ஸுரேந்திர ஸன்னுத சரணு ச்ரீஸதி வல்லபா தேவ

சரணு ராக்ஷஸ கர்வ ஸம்ஹார சரணு வேங்கட நாயகா ஸ்வாமி ச்ரீ ரகு நாயகா சரணு சரணு ஹரே

தோடய மங்களங்கள் காதில் ஒலிக்கிறது.

அடிக்கடி நாமாவளிகள் மனது பறக்கிறது.

பஜனைக்கு வரும் பக்தர்களின் கூட்டம்.தம்பதிகள்,குழந்தையுடன், குடும்பத்தை விட்டு கருமமே கண்ணாயினார்கள்,சற்றுப் பெரியவர்கள், இளைஞர்கள், என எல்லோரும் கலந்த பக்தராகிப் போனவர்கள். ஒவ்வொருவராக மெல்ல கூட்டம் களைகட்டும் நேரம். H.A.L. இல் வேலை பார்ப்பவர்.

பஜனை நடக்கும் அடுத்த போர்ஷனில் எங்கள் குடும்பம். எங்களைப்போல் 5,6 குடும்பத்தினர்.

ஆறு மணிவாக்கில் மாமி வேலையெல்லாம் ஆச்சா? ஏதாவது செய்யணுமா? ஒவ்வொருவரின் விசாரணை.

பஜனை அறை கோலத்துடன் காட்சி அளித்தது பூமாலை. ஊதுவத்தி மணம், கற்பூர தீபம் ஏற்பாடு , ப்ரஸாதத்திற்கு பெரிது பெரிதாக வாழை இலை நறுக்குதல்,நடுவே மிளகு,கல்கண்டுதட்டு, என பரபரவென்று ஆளுக்கொன்றாய் அவரவர்கள் பரபரப்பாய் ஏற்பாடு செய்ய பஜனை மண்டலி களை கட்டுகிறது.

வெளித்தாழ்வாரத்தில் பாய், ஜமக்காளங்கள் விரிக்கத் தயாராகிறது.

மாமி இப்போதே வாஸனை வந்துண்டே இருக்கே,????

என்னையும் கொஞ்சம் கவனிச்சுங்கோங்கோ.

எதுவும் சமையல் செய்துவிட்டு வரலே. இம்மாதிரி தனியாயிருக்கிறவர்
எல்லோரும் வைக்கும் அன்பு கோரிக்கைகள்.

எல்லோரும் அட்வான்ஸ் நோட்டீஸ். இன்னிக்கு யார்து பஜனை?

நடுவில் வேறொருவர் நன்நே ஸொல்ப சன்னாஹி நோட்கோப்பா. அவரிடம் தனிப்பட்ட கோரிக்கை. என்ன ப்ரஸாதம்ன்னு கேட்காது சொல்ல வைக்கும் கேள்வி.

ஒரு தம்பதி திடீர் பிரவேசம் இருவரின் பக்திப்ரவாகம்.

அது அவர்கள் தலைமையில் பிரதி சனிக்கிழமை நடக்கும் பஜனை.

அப்படி ஒரு கட்டுப்பாடு.ஒழுங்கு ஒருமித்தல். அது எப்படிதான் வருமோ?

நம்கெல்லா ஆகாதில .. எப்படி இவ்வளவு பேருக்கு பண்றா , தைரியமா பண்றா

பஜனை பண்றவா எப்படி அக்கறை எடுத்து பண்றாளோ அதே மாதிரி ப்ரஸாதமும் நன்னா பண்றா என்று இப்படி புதுசா பார்க்கின்றது போல் சிலபேர் பேச எதோ வரவாளிடம் மற்றவர்கள் சொல்லும் விமரிசனங்கள்.அதிகம் எழுதினால் சுய புராணமாகிவிடும்.

எனக்கு கன்னடம், ஹிந்தி அவ்வளவாக வராதுன்னு எண்ணம்.

நன்னா எனக்கு புரியறது. மாமிக்கே வெண்ணெய் வெச்சு பேசரிங்களா? ஸக வயது. சிரிப்பும் குஷியுமாக பேச்சு.

பஜனை ரூம் ஜெகஜ்ஜொலியாக ஜொலிக்கிறது.

மாலைகள் அலங்காரம்

பெரியமாமா மாமி வந்தாச்சு.

என்ன ஆரம்பிக்கலாமா? ஆரம்பிச்சாச்சு.

போதேந்ரம் ஜெகதாம்குருமாச்ரயே–

பஜேஸத்குரும்—-மருதாநல்லூர்

ச்ருதி,ச்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம். சங்கரர்

கலய யசோதே தவபாலம், க்ஷேமம் குரு கோபாலா தரங்கப்

பாடல்கள்.தொடர்ந்து நாமாவளி.

பாலயமாம் ச்ரீ பத்ராசல ராமதாஸர்

ஹரிநாராயண ஹரிநாராயண புரந்தரதாஸர்

கேலதிமம ஹ்ருதயே ஸதாசிவ ப்ரமேந்ராள்

ஆடாது அசங்காது வா ஊத்துக்காடு

கபீர்தாஸ் பாட்டு

மோரிலாகி லடககுரு சரண நஹி மீராபாய்

இன்னிக்கி எல்லாம் சீக்கிரம் சீக்கிரம் முடியரது.வீட்டுக்கு

சுருக்கப் போகலாம். இந்த நாள் வர இன்னும் ஒரு வாரம்

காக்கணும். ஒரு பெறிய போஸ்ட்லே இருக்கிற இவா நல்ல

காரியம் செஞ்சு மனுஷாளை எப்படி கட்டிப் போடரா பாருங்கோ.

ஒரு ஃபேக்டரி நடத்ரவர் பெண்டாட்டியோடு இவ்வளவு ச்ரத்தையா நடத்றது

ரொம்ப அபூர்வம்.அந்த தம்பதிகளை நிரைய பாராட்டும் வார்த்தை போன வாரம் பெரியவர் வீட்டிலே திவ்யநாமம் நடந்ததே………

அப்பப்பா அந்த தீபத்தே யெடுத்திண்டு, பேகபாரோ,பேகபாரோ,

என்னமா உருக்கமா பாடிண்டு வந்தார் பார்த்தேளா ஒரு குரல் ?

பின்னாடி எல்லாரும் பாட கண்கொள்ளா காட்சி.

அது மட்டுமா ராமபத்ர ராரா ச்ரீ ராமச்சந்திர ராரா

நான் அப்படியே உருகி விட்டேன்னா பாத்துகோங்கோ.

சட்டென்று எல்லார் வீட்டு சின்ன பசங்களும் ஒரு பெரிய ஹிமாலயாபொக்கே பவுடர் டப்பாவை வீட்டில் வைத்துக்

கொண்டு ஆடிப் பாடும் காட்சிகள் நினைவிற்கு வருகின்றது..

மாமி குழந்தைங்களை இங்கே விடறேன். எழுந்தா சொல்லுங்கோ. பெறிய தாழ்வாரம். நானும் இன்னிக்கு பாடப்

போறேன்னு முதலில் போய் உட்காரும் சுட்டிப் பெண்.ஆச்சு அப்படி இப்படி என்று அஷ்டபதி வந்தாச்சு.

திரும்ப கணேசத்யானம், கஜானனா ஓம் கஜவதனா

முருகன் பேர்லே பாடுங்கோ. தமிழர்களுக்கு சான்ஸ்.

வாணி ஸரஸ்வதி வாழ்க என் தாயே வாழ்க வாழ்க உனதருளே.

கோஷ்டி கானம். தொடர்ந்து அம்பாள் பேர்லே பாடுங்கோ

ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி ஜெயாமாமி பாடரார்.

மகாவிஷ்ணு எஸுர்லே நீவுஹேளி.. கன்னட அன்பர்க்கு சான்ஸ்.

நாநேனுமாடிதெனோ வெங்கடரமணா பாட்டு

பாக்யத லக்ஷ்மி பாரம்மா தெறியாதவாளே இல்லை.

எல்லாம் எல்லாரும் பாட

எல்லா கடவுளையும் பாடி முடித்து ஆஞ்சநேயரையும் கூப்பிட்டு

மாருதிராயா பலபீமா பஜனேலாகே தேப்ரேமா.முடித்து

பாரோ முராரே பாலக சௌரே ஸதாவிசார ஸந்தோஷதீரா

ஊடக யேளோ மையல்ல தூளோ ஆடஸக யேளோ ச்ரி

கிருஷ்ம க்ருபாலோ . ஸாமிக்கு சாப்பாடு

மாமி நைவேத்ய கொட்ரீ கிருஷ்ண ராவ் எழுந்து வருவார்.

வயதில் மூத்தவர். ஹஜ்ஜி க்ருஷ்ணராவ்ன்னு கூப்பிடுவோம்.

பக்தர்களின் பழ வகைகள் தட்டில் அணிவகுக்கும்

ஜயஜயதேவாதி தேவவிபோஜய கோபால கிருஷ்ண க்ருபா

ஜலதே. சந்தனம்,தூபம்,தீபம், மாலைகள் எல்லாவற்றிற்குமாக

பாடிதீபாரதனையும் காட்டியாயிற்று.

வழி விடுங்கோ

வாத்தியார் வரார் ஹஜ்ஜி (பட்ஜி ) . ப்ரஸாதம் கொண்டுவரார். ஒரு குரல்
சால்யான்னம் மது க்ருத ஸுபான்வித

சாக பாகவித ஸூ ஸம்ருத்தம்

சாரு பஞ்சபக்ஷ்ய பரமான்நம்ததி

ஸ்வீகுரு மாதவ மது ஸூதனா—-தேவா

பக்ஷணம்,பால் ,ப்ரஸாதம் எல்லாம்

நிவேதநமாகிறது.

பசங்களை எல்லோரும் எழுப்பி விடரா.

ஜயஜயஹாரதி பாடி மங்கள ஹாரதி எடுத்து ஸ்லோகங்கள்

சொல்லி நமஸ்கரித்து எல்லாம் விதரணையாக நடக்கிறது.

உச்சஸ்தாயியில் நாமாவளிகள்.

உபசாரமுலனுவும் ஆயிற்று.

பிரஸாதத்தை எடுத்துபோய் மொத்தத்தில் கலந்து வினியோககிப்பட்டது .

ஒவ்வொருவரும் ஒருத்தரை …..ஒருவர் என்று போட்டி போட்டுக்கொண்டு

பஜனை செலவு எவ்வளவு ஆயிருக்கும் என்று ஒருவரை ஒருவரை கடிக்க . இது இல்லாமல் பஜனை எப்படி ???

உப்பெல்லாம் சரியா பாத்தூட்டு கொடுங்கோ. எல்லாம் சரியாய் இருக்கு

யாருக்கு வேணுமோ கேட்டு வாங்கிப் சாப்பிடுங்கள் ஒரு குரல் உபசாரம் செய்து இரண்டு பேர் வினியோகம்.

இன்னும் நிறைய சொல்லலாம். என்னெல்லாம் ப்ரஸாதம், எப்படி ரஸித்து சாப்பிட்டார்கள். ஒரு ஆன்மீக கெட்டுகெதர்.எப்படி செய்தோம்.

எல்லாம் எழுதட்டுமா? யாராவது பதில் கொடுங்கோ.

ஸந்தோஷமாக எழுதுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.

இதெல்லாம் எப்பொழுது தெரியுமா? நீங்கள் நினைக்காதீர்கள் ஏதோ 1980க்கு முன்னும் பின்னுமாக இருக்கும் என்று ……… இப்பொழுதும் எங்கள் மும்பையில் இது மாதிரி கெட்டு கெதர் எல்லாம் தடபுடல் தான்….. நீங்கள் எல்லோரும் வாங்கோ……ஜாலியாக சந்தோஷமாக இருக்கலாம் எந்த கவலையும் இல்லாமல்

கோபிகா ஜிவன ஸ்மரணம் கோவிந்தா …கோவிந்தா

ஜானகி காந்த ஸ்மரணம்…..ஜெய் ஜெய் ராம …ராம

சத்குரு மகாராஜிகி ….ஜெய்

வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா

ஸ்வாமியே சரணம் அய்யப்பா ….

என்று முடிகின்றேன் .

குமார் ராமநாதன்

லலிதா சகஸ்ரநாமம் பிறந்த வரலாறு


ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம்.

Lalitha Mahatripurasundari

2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு 2-3 முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும், அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம்.

செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?. இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர். தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில், பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர், தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர், மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும், அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். அக்காலத்திலேயே வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார்.

சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும், பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார்

இவரது மனைவி பெயர் ஆனந்தி என்பதாகும். அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது.

காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர், தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார்.

பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அப்போது அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து, அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக, சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும், மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் “சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா” (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர், வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து, அந்தந்த யோகினிகளுக்கான பெயர், மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ, அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து, பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்பட்டுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க
ஸ்ரீ.லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்

ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீ.க்ஷோ சாக்ஷரீ – வித்யா த்ரிகூடா காமகோடிகா

தசமுத்ரா – ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி

என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.

தமிழ்த் தொகை அழகு

தெரிந்து கொள்வோமா!!தமிழ்த் தொகை அழகு

ஒருமை – இறையுணர்வு

மலைநாட்டு சிவாலயம் – திருவஞ்சைக்களம்

இரண்டு

அயனம் – தட்சணாயனம், உத்ராயனம்

அறம் – இல்லறம், துறவறம்

ஆன்மா – ஜீவான்மா, பரமான்மா

இடம் – செய்யுளிடம், வழக்கிடம்

இதிகாசம் – பாரதம், இராமாயணம்

முதுகுரவர் – தாய், தந்தை

இருமை – இம்மை, மருமை

உலகம் – இகலோகம், பரலோகம்

எச்சம் – பெயரெச்சம், வினையெச்சம்

எழுத்து – உயிரெழுத்து, மெய்யெழுத்து

கலை – சூரியகலை, சந்திரகலை

கந்தம் – நற்கந்தம், துர்கந்தம்

கிரகணம் – சூரிய கிரகணம், சந்திரகிரகணம்

சுடர் – சூரியன், சந்திரன்

திணை – உயர்திணை, அஃறிணை

போது – பகல், இரவு

மரபு – தாய் மரபு, தந்தை மரபு

வினை – நல்வினை, தீவினை

மூன்று

அரசர் – சேர, சோழ, பாண்டியர்

இடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை

உயிரிலுள்ள b – உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ

உலகம் – பூலோகம், பரலோகம், பாதாளம்

கடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி

காலம் – இறப்பு, நிகழ்வு, எதிர்வு

குணம் – சாத்வீகம், இராஜசகுணம், தாமச குணம்

குற்றம் – காமம், வெகுளி, மயக்கம்

சக்தி – இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி

சாத்திரம் – சாங்கியம், பதஞ்சலியம், வேதாந்தம்

சீவதேகம் – தூலம், சூக்குமம், காரணம்

சுடர் – சூரியன், சந்திரன், அக்கினி

தமிழ் – இயல், இசை, நாடகம்

b – அகவனீயம், தக்கிணாக்கிளீயம், காருகபத்யம்

தொழில் – ஆக்கல், காத்தல், அழித்தல்

நூல் – முதல், வழி, சார்பு

பொறி – மனம், வாக்கு, காயம்

மலம் – ஆணவம்மலம், கன்மமலம், மாயாமலம்

முக்கனி – மா, பலா, வாழை

பொருள் – பதி, பசு, பாசம்.

நான்கு

அரண் – மலை, காடு, மதில், கடல்

அளவு – எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்

அழகை – இளிவு, இழவு, அசைவு, வறுமை

ஆச்சிரமம் – பிரமசரியம், இல்வாழ்க்கை, வானப்பிரத்தம், சந்நியாசம்

இழிச்சொல் – குறளை, பொள், கடுஞ்சொல், பயனில் சொல்

உண்டி – உண்டல், தின்னல், நக்கல், பருகல்

உபாயம் – சாமம், தானம், பேதம், தண்டம்

உரை – கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை

கதி – தேவகதி, மக்கள்கதி, விலங்குகதி, நாகர்கதி

கணக்குவகை – தொகை, பிரிவு, பெருக்கு, கழிவு

கவிகள் – ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி

சதுரங்கம் – தேர், கரி, பரி, காலாள்

சொல்வகை – பெயர், வினை, இடை, உரி

தோற்றம் – பை, முட்டை, நிலம், வியர்வை

நிலம் – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

பண் – பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி

பதவி – சாலோகம், சாமீபம், சாருபம், சாயுச்சியம்

பா – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

பூ – கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதர்ப்பூ

பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு

பொன்வகை – ஆடகம், கிளிச்சிறை, சாதகம், சாம்பூநதம்

பெண் குணம் – அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

மார்க்கம் – சரியை, கிரியை, யோகம், ஞானம்

யுகங்கள் – கிரிதம், திரேதம், துவாபரம், கலியுகம்

ஐந்து

அகிற்கூட்டு – சந்தனம், கற்பூரம், எரிகாசு, தேன், ஏலம்

அங்கம் – FF, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்

அரசர்க்குழு – மந்திரி, புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்

அவத்தை – சாக்கிரம், சொப்பனம், துருத்தி, துரியம், துரியாதீதம்

இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

ஈஸ்வரன்முகம் – ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம்

உலோகம் – பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்

ஐங்காயம் – கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்

ஐம்புலநுகர்ச்சியில்

இறப்பன – மீன், வண்டு, யானை, அகணம், விட்டில்

கன்னிகை – அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி

குரவர் – அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன்

குற்றம் – கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, மூச்சிடல், அலமரல்

சத்தி – இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி, பராசத்தி, ஆதிசத்தி

திருமால் ஆயுதம் – சக்கரம், தனு, வாள், தண்டு, சங்கம்

தேவர் – பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்

புலன் – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

யாகம் – பிரமம், தெய்வம், பூதம், பிதிர், மானுடம்

வண்ணம் – வெண்மை, கருமை, செம்மை, பசுமை

வாசம் – இலவங்கம், ஏலம, கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம்

விரை – கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம்

சுத்தி – ஆன்மசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி

முடிஅழகு – கொண்டை, பனிச்சை, குழல், முடி, சுருள்

ஆறு

அங்கம் – படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்

அந்தணர் தொழில் – ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்

ஆதாரம் – மூலம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை

உட்பகை – காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்

சக்கரவர்த்திகள் – அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவன், கார்த்தவீரியன்

சுவை, – இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கைப்பு

தானை – தேர், பரி, கரி, ஆள், வேல், வில்

பருவகாலம் – கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

ஏழு

அகத்தினை – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை,

பெருந்திணை

இசை – குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

இடைஏழு

வள்ளல்கள் – அக்குறன், சந்திமான், அந்திமான், சிசுபாலன்,

தந்த வக்கிரன், கர்ணன், சந்தன்

உலகம் – பூலோகம், புவலோகம், மகாலோகம், சனலோகம்,

தவலோகம், சத்தியலோகம்

கடல் – உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்

கடைஏழு

வள்ளல்கள் – எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்

உலோகம் – செம்பொன், வெண்பொன், இரும்பு, ஈயம், வெங்கலம், தரா

முதல் ஏழு

வள்ளல்கள் – குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி

கீழ்ஏழ் உலகம் – அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்

சப்தவிடத்தலம் – திருவாரூர், நாகப்பட்டினணம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில் திருவாய்மூர், திருக்குவளை

சீரஞ்சீவியர் – அசுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், வீடணன், மார்க்கண்டன், பரசுராமன்

நதி – கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, குமரி, கோதாவரி

தாதுக்கள் – இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்

தாளம் – துருவம், மட்டியல், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம், ஏகதாளம்

பாதகம் – ஆங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப்பிரியம், காய்தல், சோம்பல்

பிறப்பு – தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, நிற்பன

மோட்ச புரி – காஞ்சி, காசி, அவந்திகை, துவாரகை, மதுரை, அயோத்தி,மாயை

பெண்கள் பருவம் – பேதை, பெதும்மை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்

மண்டலம் – வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்னி, திரிசங்கு

மாதர் – அபிராபி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி

முனிவர் – அத்திரி, குச்சன், கௌதமன், பிருகு, காசிபன், அங்கிரா, வசிட்டன்

வித்யா தத்துவம் – காலம், நியதிகலை, வித்தை, கிராகம், புருடன், மாயை

எட்டு

அட்டவீரட்டம் – கண்டியூர், திருக்கடவூர், திருஅதிகை, வழுவூர், திருப்பறியலூர், திருக்கோவலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி

அளவை – காட்சி, அனுமானம், ஆகமம், அருத்தாபத்தி, உபமானம்,

அபாவம், சம்பவம், ஐதீகம்

அஷ்டபந்தனம் – சுக்கான்கல், ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமைவெண்ணெய், குங்கிலியம், நற்காவி, கொம்பரக்கு

எட்டுத்தொகை – நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

எண்சுவைத்தமிழ் – சிங்காரம், வீரியம், பெருநகை, கருணை, ரவுத்திரம், குற்சை, அற்புதம், பயம்

எண்வகைவிடை – சுட்டு, மறை, நேர், ஏவல், வினா, உற்றுதுரைத்தல், உறுவதுகூறல், இனமொழி

ஐஸ்வரியம் – தனம், தானியம், GF, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம்

சித்தி – அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிராகமியம், வசித்துவம்

மெய்ப்பாடு – நகை, அழுகை, அச்சம், இளிவரல், மருட்கை, பெருமிதம்,

வெகுளி, உவகை

ஒன்பது

நவ GF – சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்

ராட்சதகணம் – கார்த்திகை, அயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டம்,

மூலம், அவிட்டம், சதயம்

நவமணி – கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம்,

ஒரெழுத்து ஒருமொழி

ஆ – பசு, கோ – தலைவன், ஈ – கொடு, பூ – மலர்,

நா – நாக்கு, கா – காப்பாற்று, மா – பெரிய, ஐ – சளி,

சா – மடி, சே – எருது, பா – பாடல், கை – கரம், தை – மாதம்

ஆதாரம் – அபிதான சிந்தாமணி

Skandagurunatha and Srividya!


Skandagurunatha and Srividya!(Lord Muruga and srividya worship)

Skandagurunatha.

Dear Kaumaras and kaumaaris,
aaras Kaumaaris,

The First-born Son of Shiva-Shakti grew from Rudra’s fiery seed that fell into Gangama, and was known as Skanda.He is Karttikeya: too intense for Shri Ganga to bear, he was consigned to the rushes on her bank (cf. Moses).

Rudra-Shiva is guardian of the Unmanifest, and the conception of Manifestation was accidental. That first conception was perfect and pure ~ a virgin birth of a perfect reality ~ and from the inert expanse of perfect Ideas (the Mind of God, and the very body of Lord Shiva) is born the perfect incarnation, the ideal form, the physical form of the Ideal, an Avatara.

Shiva and Shakti remain in eternal coitus; but in worldly legend, the device of Spilled (Skanda) Seed (Bija) preserves the maidenhood of the Devi. That fiery Bija is the Pranava, a product of Shiva’s great Tapasya, which was deposited into Shri Ganga.

Her immortal flow could not actually bear its intense heat; and to preserve Her own perfection, Skanda was driven to Her side, where he dwelled in the vegetation until his true nature was recognized by the six Karttikas, who kindled his light and raised the youthful spark up to a blazing reality.

The six Matrikas (recognized as Adityas and known as the Karttika sisters, whose constellation rules the harvest month of Karttika) were sent to kill infant Skanda; although, lactating at his sight, they nursed him, and named him Karttikeya, who became the six-headed commander of the legions of Rudra.

The Matsya-Purana (c. 1000 AD) lists some 190 bloodthirsty
Matrikas, created by Shiva to defeat the demon Andhaka. Karttikeya became the supreme commander of this hysterical host.

His emblem is the blue-necked peacock, and it is perhaps amalgamation with the Karttikeya-cult (which was presumably not achieved without conflict) that gave Shiva his blue throat (Nilakantha).The Adityas are generally counted as six or seven. Six is the number of spatial cardinals (East, West, North, South, Zenith, and Nadir); and, just as the Prime number 5 is reserved for Shiva.

The estoric seventh point at the heart of this six-fold symmetry came to be understood as the transcendent seat of Shakthi.

In Yoga, the Son becomes the equal of his Father, since their Light is ultimately One Light. Shiva and Skanda are but the source of light and the light itself; both the sacrificial fire and its essential nature, which are an effectively inseparable conjoined twin. And Shakti is Power ~ the Power of transformation, without which the Vision could not be made Flesh ~ so that all three of the Father, the Mother, and the Child, together frame the original nuclear family.

Karttikeya, just like his father, has a connexion with Keshin, and it is the action of the potent poison of all the worlds’ evil, which was churned from the primal ocean by Vayu (the Wind, father of the ancient storm-god Rudra) that is often given in explanation of Nilakantha Shiva, who held the venom in his throat and survived.

Shiva, Shakti, and Skanda, are but three forms of essential Fire, or Agni; and Agni is Rudra, and both Agni and Rudra are known as Tryambaka.

The Mahabharata mentions Rohitaka (modern Rohtak District, in Haryana) as the home of Karttikeya, who was tutelary deity of the
ferocious orgiastic Mattamayuraka tribe (Matta = Drunk).Although Karttikeya has received orthodox acceptance

அம்பிகையின் வேத வடிவங்கள்

அம்பிகையின் வேத வடிவங்கள்:-

ஆதி சக்தியான அம்மையின் வடிவம்

முதற்முதற் கடவுளாகிய பரம்பொருளின் அருள் ஆற்றலே சக்தியென வழங்கப்பெறுவது. அவற்றுள்ளும் அம்மையாகக் கருதி வழிபடுவது முற்பட்டது.

பிரபஞ்ச சக்திகளில் நான்குவித சக்திகள் இணைந்து இவ்வுலகத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான்.

ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன், மகாவிஷ்ணு,மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினார். இந்த நால்வர்களையே சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணங்களும் ஆவர்.

பராசக்தி – பிரம்மதேவன் – மகாவிஷ்ணு – மகேஸ்வரன் இவர்களின் சக்திகளைக் கொண்டு நிபுணர்கள் அறிவியல் நிபுணர்கள் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாகச் சுட்டியுள்ளானர்.

பராசக்தி – கார்பன்-டை -ஆக்ஸைட் (Carbon Di-Oxide).
மகாவிஷ்ணு – ஆக்சிஜென் [Oxygen]
பிரம்மதேவன் – நைட்ரஜன் [Nitrogen]
மகேஸ்வரன் – ஹைட்ரஜன் [Hydrogen]

Asrto Physic என்ற விஞ்ஞான ஆய்வுவின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துக் கொள்ளலாம்.

திரிமூர்த்திகள் என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் ”எலக்ட்ரான்” [Electron], ”நியூட்ரான்”[Neutron] ,

”புரோட்டான்”[Proton] என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே. எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்துவிட்ட நியூக்லேயஸ் ஆகிறார்.

புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் பிரம்மதேவன் சிருஷ்டிப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்வதற்கும் பொறுப்பாளர்களாகின்றார்கள்.

நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயகமாக அதிபாரசக்தியாகயே திகழ்கின்றாள். அவளுக்குத் துணையாக எலக்ட்ரான்[Electron] பிரம்மதேவனும், ‘நியூட்ரானாக [Neutron] விஷ்ணுவாகவும், ”புரோட்டானாக”[Proton] மகேஸ்வரனும் விளங்குகின்றனர். இதைக் கண்ணுறும் பொழுது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தில் ஆதியிலே வெளியான அரும்பெரும் தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரி¢ய பொருளாக விளங்குகின்றாள்.

மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். ”கார்பன்”தான் உலகில் சக்தி பெற்ற உலோகம். இந்த உலோகமே காந்த சக்தி பெற்று உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில்அதிகமாக இருப்பதால் மற்ற கிரகங்களையும் அதை சுற்றி வரச் செய்கிறது. பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடந்தபோதுதான் இரும்புச்சக்தி வெளியானது. இதிலிருந்து செம்பு,சொர்ணம்,கனகம்,வைரம் வெளியானது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால்தான் சங்க இலக்கியம் அம்மையைப் பழையோள் எனவும் குறிக்கிறது.

அம்மையின் உருவம் வெறும் பெண் உரு மட்டும் அன்று. முதற் பொருள் ஞாயிறும் அதன் ஒளியும் போலவும், மலரும் அதன் மணமும் போலவும்,தானும் தன் இயற்கை அருள் ஒளியும் என்று இரு திறப்பட்டு இணைந்து நிற்பது. இதனால் பரம்பொருளின் தொன்மைக் கோலம் அம்மையப்பர் உருவாகவும்,நீலச்செம்மேனி (கிருஷ்ணனின் நீல நிறம்) உடையதாகவும் மறைகளிற் கூறப்படும். அவ்விறைவனது அருள் ஒளியே பெண்ணுரு ஆகும்.

அருள் ஒளி அல்லது அருளாற்றல் பல வகை ஆற்றல்களும் கொண்டு வழிபடுவது பண்டைய மரபாயிற்று.

இயற்கையின் ஆற்றல்களுள் மழைப்பெய்யல் உலகம் உய்ய,வாழ இன்றியமையாதது.

நீர் இல்லாது உலகமில்லை. திருவள்ளுவர் கூட கடவுள் வாழ்த்தில் வான் சிறப்பை கூறியுள்ளார்.

இத்தகைய மழைக்கு அதி தெய்வமுள்ள அருளாற்றலே மகா மாரியம்மன் ஆகும்.[மாரி-மழை] உலகியல் நடைபெறுவதற்கு மழை மிக முக்கியதுணைக் காரணமாகும்.

இவ்வருட்சக்தியையே பெண்ணாக உருவகப்படுத்தி,மக்கள் வழிபாட்டிற்குரிய தெய்வமாக,நமது முன்னோர்களான அறிவுடைச் சான்றோர்களை அமைத்தனர் என்று உணரும்போது அவர்களின் மதிநுட்பம் எத்துணை சிறப்புடையது என்று நமக்கு புலப்படுகிறது.தாய் அன்பே தலையாய அன்பு என்பதை உணர்ந்த நமது முன்னோர்களும், அருளாளர்கள், ”அம்மை அப்பா” எனவும்,
”தாயிற் சிறந்த தயாவானத்தத்துவனே” எனவும்,
”தாயாயெனக்குத் தானெழுந்தருளி” எனவும்,
”பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” எனவும் அழைக்கலாயினர்.

தாயுமான அடிகள் செல்கின்றார்,

”பொல்லாத சேயெனில் தாய் தள்ளல் நீதமோ, புகலிடம் பிறிது முண்டோ” எனவும், ”அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னியென் மறை பேசும் ஆனந்த ரூப மயிலே” எனவும் பாடியிருப்பது நினைவிற் கொள்ளத்தக்கது.

தந்தையின் அன்பைவிட தாயன்பே தலை சிறந்தது என்பதை உலகியலறிவால் உணர்ந்த நமது முன்னோர்கள்,இறைவனின் அருளாற்றலை உலக நாயகியாக அகிலாண்டகோடி ஈன்ற அன்னையாக வழிபாடு செய்யலாயினர். பொல்லாத சேய்களின் பிழைகளைத் திருத்தி, ஜீவான்மாக்களைப் பரிபக்குவப்படுத்தி, இறைவன் திருவடிப் பேற்றுக்கு ஆளாக்குவதே அம்மை செய்யும் அருட்பணியென்று பணியென்று சித்தாந்த சாத்திரம் நமக்கு உணர்த்தும்

. இந்த நிலையைத திருமூலர் தமது திருமந்திரத்தில்:-

‘’வாயும் மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவுங் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுத் தாரமு மாமே…’’

— என்கின்றார். அதாவது, அளவிலா ஆற்றலும், அருளுமுடைய ஆதிசக்தியின் வரப்பிரசாதத்தால் வந்த திரிசக்திகளாகிய பராசக்தி, மனோன்மணி,திரிபுரசுந்தரி, ஆகியோர் பரமசிவத்தோடிணைவதால் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் நிறைவேறுகினறன. எனவே அந்த ஆதிபராசக்தியே எல்லாமாய் இருக்கிறாள்.

அருட் சக்தியாகிய அன்னை பல்வேறு நாமங்களில்,காசியிலிருந்து கன்னியாகுமரி வரை சிங்கப்பூரிலிருந்து மலேசியா வரை,அதனையும் தாண்டி தென்கிழக்கு ஆசிய வரை,ஏன் இன்றுஅமெரிக்கா, ஐரோப்பா வரை மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருகிறாள். சிறப்பாக தமிழ் நாட்டில், சிங்கப்பூரில், மலேசியாவில் ஆதிசக்தி அம்மன் ஆலயம் இல்லாத ஊரே இல்லை எனச் சொல்லலாம். மாரியெனத் தன்னருளை வாரி வழங்குவதால், மாரியெனப் பெயர் பெற்றாள் போலும். மக்கள் துயர் தீர்க்கும் புற்றாய் மாமருந்தாய், மகேஸ்வரியாய் விளங்குகிறாள்.ஏழாவது கர்ப்பமாக பிறக்கவேண்டிய கிருஷ்ணனின் கர்ப்பத்தினை எட்டாவது கர்ப்பமாக மாற்றி அமைந்தால் கருமாரியாக பெயர் பெற்றாள்.

சூரியன் மறைந்தாலும்,பிரிட்டீஸ் சாம்ராஜ்யம் மறையாது என்று எதற்கும் அஞ்சாது நாடு ஆண்ட வெள்ளையர்கள்,மாரியம்மனுக்கு மட்டும் மிகவும் அஞ்சி நடுங்கினார்கள்.அம்மை நோய் என்று கேள்விப்பட்டாலே இரு நூறு மைல் சென்று ஒளிந்து கொள்வர்.பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகாமாரி,தன்னைச் சரணடைந்த ஏழை மக்களின் வினையை வேப்பைலையால் நீக்கி வருவது கண்கூடு.

இந்தப் பிரபஞ்ச வாழ்க்கையில் விரும்புவார் விரும்புவதை எல்லாம் நல்கும் பரதேவதையாகிய தம் நிமித்தம் தனது மெய்யன்பர்கள் விரும்புவதையும் நிறைவுசெய்கிறாள்.

சிலந்திப் பூச்சியானது தன்னிலிருந்தே தமக்கு வீடு அமைத்துக் கொள்வது போலவே அம்மன் தமது அன்பர்கள், அடியார்கள் ஆகியோரை உறுதிமிக்க மனதகத்தே இருந்து அருள்பாலிக்கிறாள்.

அன்னை மனத்தகத்தே இருந்து நல்ல எண்ணங்களை,நல்ல உணர்வுகளை தன்மைகளை எழுப்புகிறாள்.அவர்கள் அதைச் சூழ்ந்து ஆழச் சிந்திக்கின்றனர். அப்பொழுது அவர்கள் எண்ணத்தில் உருவெழச் செய்கிறாள். அப்பொழுது தாமும் அவர்களின் மனதோடு இருந்து அருட்பிரசாதமாய் பொழிந்து மகிழ்கின்றாள்

அன்னை அஞ்சொல் மொழியாள், அருந்தவப் பெண்பிள்ளை,
செஞ்சொல் மடமொழி, சீருடைச் சேயிழை,
தஞ்சமென்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு,
இன்சொல் அளிக்கும் இறவி யென்றாரே.

இயங்குதற்கு சக்தி தேவை. உலகம் இயங்குவற்கு இறைவனது ஒரு பங்கிலுறைந்து இருக்கிறாள், ஆதி சக்தியான அம்மை இவள்

”கடவுளார் யாவர்க்கும் மேலையிறைவி” ஆவாள்;
”புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம்”;

”சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பராசக்தியாய் விளங்குபவள்”;

”இவள் எல்லா உலகங்களுக்கும் நாயகி”; ”நான்முகி,நாராயணி, சாம்பவி, சங்கரி, சாமளை,மாதங்கி” –என்றெல்லாம் துதிக்கப்படுவள்.

இவளுடைய ”தாமம் கடம்பு; படை பஞ்ச பாணம்;தனு -கரும்பு”. இவளை அடியார்கள் ”பயிரவி;பஞ்சமி; பாசாங்குசை; பஞ்சபாணி; சண்டி,காளி; வயிரவி; மண்டலி;சூலி; வாராகி; என்று ஏத்துவர்.

காரணம்,உலக வேதம் உலகமொழிகள் அனைத்திற்கும் அனாதியாயும், ஆதியாயும் அமைந்திருக்கின்ற ஓங்காரவடிவத்தோடுங் கூடிய எல்லாப் பிரபஞ்சங்களையும் ஈர்த்துக்கொண்டு அசைவறக்கிடப்பது சிவதத்துவம் என்னும் அற்புதம். அந்த அற்புதத்தினும் அதியற்புதமாக, ஹ்ரீங் கார வடிவத்தோடுங் கூடிய காந்த சக்தியாய் எல்லாவற்றிலும் ஊடுருவி உயிர்ப்பாய் நிற்பது ஆதி சக்தியாம் சக்தி தத்துவம்.

இந்த ஆதிசக்தி வடிவம் பரபிரம்மாகிய சிவனின்று பிரிக்க முடியாத்தாய் அக்கினியிற் சூடு போலும்,வெளியாகவும் மறைவாகவும் அதனோடு ஒடுங்கி உறைந்து நிற்பது. திரிபற்ற நிலையை இரண்டற்ற நிலை, அர்த்தநாகரீச்சுர நிலை சிவசக்தி என்பார்கள் சான்றோர்கள்.

தேவி மாஹாத்மியம்

#ஸ்ரீதேவி #மாஹாத்மியம் #ஓர் #அறிமுகம்:

“கலெள சண்டி வினாயகெள” அதாவது கலியுகத்தில் விரைவாக பலனை வழங்க கூடியவர்கள் சண்டி என்றழைக்கப்படும் சண்டிகா பரமேஸ்வரியும் விநாயகருமே ஆவார்கள்.

சண்டி

“குண்டலக்காதி கொலைவில் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமெனும் கோலத்தள்
கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கி நின்றாளே” – என்ற திருமந்திர வாக்கின் மூலம் திருமூலர் காலம் தொட்டே சண்டி உபாசனை இங்கு இருந்து வருவதை அறியலாம். மார்கண்டேய புராணம்,பத்ம புராணம் முதலியவற்றில் சண்டி பாராயணம் தெளிவாக வருகிறது, இதில் அம்பிகையானவள் சண்டிகா தேவியாக ஆராதிக்கப்படுகிறாள். இந்த ரூபத்திற்கு அப்படியென்ன சிறப்பு என இனி நாம் காணலாம்.

துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது.

இந்த ஸ்தோத்ரம் முழுவதுமே மூலமந்திர ரூபமானது, உதாரணமாக ஸாவர்ணிஸ்ஸூர்யதனயோ என்று துவங்கும் ஸ்லோகம் புவனேஸ்வரி மந்த்ரமாக அமைந்துள்ளது. அன்னையின் ஆராதனை முறையை விளக்கும் டாமர தந்திரம் மற்றும் யாமள தந்திரம் முதலியவற்றில் இதன் பாராயணமுறை விளக்கப்பட்டுள்ளது. இதன் படி தேவீ-மாகாத்மியம் கவசம்,அர்க்கம்,கீலகம் முடிவில் மூன்று ரகசியம் என்று கொண்டதாக இருக்கும்.

இதற்கு ஸப்தசதீ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் 700 ஸ்லோகங்கள்(ஸப்த என்றால் 7,ஸதம் என்றால் 100) ஆகும். 13 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ப்ரதம சரித்ரம், மத்யம சரித்ரம் மற்றும் உத்தம சரித்ரம் என 3 பகுதிகளாக உள்ளது. முதலில் மதுகைடப வதமும், இரண்டாவதில் மகிஷாசுர வதம் + அம்பாள் ஸ்துதியும், மூன்றாவதில் அரக்கர்களின் அழிவிற்கு முன்பும் பின்பும் தேவி ஸ்துதி காணப்படும்.

சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள்.

சண்டீ பாராயணத்தின் பெருமையை பற்றி பத்ம புராணம் மற்றும் ஸ்ரீதேவி பாகவதம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம்.

சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் போன்ற பல உரைகள் இந்நூலிற்கு உண்டு. இவற்றில் நீலகண்டர் எழுதிய துர்க்காப்ரதீபம், நாகேச பட்டர் எழுதிய நாகேசீ மற்றும் பாஸ்கர ராயர் எழுதிய குப்தவதீ தனிச்சிறப்பு பெற்றவைகளாகும்.

டாமர தந்த்ரம், காத்யாயனீ தந்த்ரம், க்ரோட தந்த்ரம், மேரு தந்த்ரம், மரீசி கல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மாஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.

யக்ஞங்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமர தந்திரம் கூறுகிறது. சிதம்பர ரஹசியத்தில் ஸ்ரீ பரமேஸ்வரர் ஸ்ரீதேவி மாஹாத்மியத்தின் பெருமையை பார்வதி தேவிக்கு எடுத்துரைக்கிறார்.

“யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா ” என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது.
அதாவது வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என்பது அதன் பொருளாகும்.

இந்த தேவீ மாஹாத்மியத்தை வேத வியாஸரின் சிஷ்யரான ஜைமினி முனிவருக்கு ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி உபதேசித்ததாக கூறுவர்.

தான் நம்பிய அமைச்சர்கள் மற்றும் உறவினர்களாலே ஏமாற்றப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்ட சைத்ரிய வம்ஸத்தை சேர்ந்த ஸுரதன் என்ற அரசனும், தன் சொந்த மனைவி மக்களாலேயே சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஸமாதி என்ற வைச்யனும் காட்டில் சந்திக்கின்றனர்

இருவரும் கானகத்தில் அலைந்து கடைசியாக ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகின்றனர். இருவரும் தாங்கள் இப்படி தங்கள் சுற்றத்தாராலே ஏமாற்றப்பட்டும் தங்கள் மனம் அவர்களின் பாலே செல்வதற்கு காரணம் யாது என வினவினர். அப்பொழுது தான் ஸுமேதஸ் நீங்கள் மாயையினால் கட்டுண்டு கிடப்பதாலே இவ்வாறு நிகழ்கிறது என்று கூறினார். மேலும் தேவர்கள் மற்றும் தேவர்களின் தலைவரான ஸ்ரீஹரியும் கூட அம்பிகையின் மாயைக்கு கட்டுப்பட்டவர்களே என்பதையும் விளக்கி கூறினார்.

ஒரு சமயம் இப்படி விஷ்ணு மாயையினால் பீடிக்கப்பட்ட மஹாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்து விட அவருடைய காதின் அழுக்கிலிருந்து மது, கைடபன் என இரு அசுரர்கள் தோன்றினர். பின்னர் க்லிம் என்ற ஸப்தத்தை கடலில் ஆடும் போது கேட்டு அது தேவி பீஜம் என்பதை அறியாமலேயே அதன் வசப்பட்டு அதை விடாது ஜபித்து தேவியின் தரிசனம் கண்டு தாங்கள் விரும்பும் போதே தங்கள் மரணம் நிகழ வேண்டுமென்ற வரத்தை பெற்றனர்.

பலம் கொண்ட அந்த அசுரர்கள் பிரம்மாவை துன்புறுத்த அவர் அம்பிகையை பிரார்த்தித்து விஷ்ணுவை யோக நித்திரையிலிருந்து எழுப்புகிறார். பின்பு விஷ்ணு அவ்விரு அரக்கர்களோடு ஐயாயிரம் ஆண்டுகள் போரிட்டும் வெல்ல முடியாமல் அம்பிகையை சரணடைய , தேவீ மோகினியாக தோன்றி அவ்வசுரர்களை தன் வசம் மயக்கி விஷ்ணுவிற்கு வரமளிக்க தூண்டுகிறாள். மஹாவிஷ்ணு நீங்களிருவரும் என்னாலே மரணமடைய வேண்டும் என வரம் பெற்று அவர்களை ஸம்ஹரிக்கிறார். இதனால் தேவி மதுகைடபஹந்தரி என்று விஷேச நாமம் பெற்ற சரிதத்திலிருந்து ஒவ்வொன்றாக கூறத் தொடங்குகிறார்.

இப்படி 13 அத்தியாயங்களில் மதுகைடப வதம், மஹிஷாசுர வதம் மற்றும் சும்ப நிசும்ப வதம் ஆகியவைகளை விவரிக்கிறார். இதில் சும்ப நிசும்ப வதத்தின் போது தேவி சிவனையே தூதராக சும்ப நிசும்பர்களிடம் அனுப்பி சிவதூதீ என்ற பெயரை பெற்ற சரிதமும் அடக்கமாகும். இவ்வாறு தேவியின் பெருமையை பலவாறு கூறி சுரதன் மற்றும் ஸமாதியை தேவியை உபாஸிக்கும் படி அறிவுறுத்துகிறார்.

அவரின் அறிவுரையை ஏற்று தேவியை உபாஸித்தன் பலனாக சுரதன் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்று மகிழ்வுடன் ஆட்சி நடத்தி அடுத்த பிறவியில் மனுவாக பிறந்தான், வைச்யனான ஸமாதி ஞானமடைந்து மோக்ஷ ப்ராப்தம் அடைந்தான் என்று தேவீ மாஹாத்மியம் சரிதம் முடிகிறது. இதில் சுரதன் ஆற்றுக் களிமண்ணால் அம்பிகையின் பிரதிபிம்பத்தை செய்து பூஜித்து இகபர சுகங்களை அடைந்ததால் களிமண்ணால் செய்த பொம்மைகளைக் கொண்டு நவராத்திரியின் போது தேவியை ஆராதிக்கிறோம்.

இவை வெறும் சரிதம் மட்டுமல்ல. இவை அனைத்தும் மந்திர பூர்வமானது. இந்த 700 ஸ்லோகங்களைக் கொண்டே சண்டீ மஹாயாகம் நடத்தப்படுகிறது.

முறையாக குருவிடம் நவாக்ஷரி உபதேசம் பெற்றவர்களே தேவீ மாஹாத்மியத்தை பாராயணம் செய்ய வேண்டும்.நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல் ஜபித்தல் சிறந்தது.

இவ்வாறு குரு உபதேசம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து ஸப்தாஹ முறைப்படி ஏழு நாட்களில் மேற்கூறிய கணக்கில் ஸமஸ்கிருத மந்திர மூலத்தை படிக்காமல் உரையை மட்டுமே சரிதமாக (கதையை போல) படித்து தூப தீப நைவேத்யத்தோடு பூஜை செய்யலாம். அம்பிகை பக்தியை மட்டும் தான் பார்ப்பாள், ஸமஸ்கிருதம் தெரியவில்லை, நவாக்ஷரி ஆகவில்லை என்றெல்லாம் பார்க்க மாட்டாள். இவ்வாறு படித்தாலும் கை மேல் பலனுண்டு. அசாத்தியமான நம்பிக்கையே அவசியம்.

ஸர்வ ரூபமயீ தேவீ ஸர்வம் தேவீ மயம் ஜகத்.

ஸ்ரீமேரு

Who is Lalitha Mahatripurasundari?

Who is Lalitha Mahatripurasundari?

ஸ்வயமேவ ஆத்மா லலிதா!!”

Lalitha Mahatripurasundari

Swayameva Atma Lalitha
That’s a beautiful phrase
in Sanskrit, which means “Lalitha is the Self” or “Lalitha is the ultimate reality“.

It’s a profound phrase that highlights the non-dual nature of reality, where the individual self (Atma) is not separate from the ultimate reality (Lalitha).

The Bhavanopanishad, a Hindu scripture, describes Lalitha Mahatripurasundari as the ultimate reality, the source of everything, and the embodiment of cosmic energy. Here are some key points:

  1. Ultimate Reality:
    Lalitha is described as the ultimate reality, beyond human comprehension, and the source of the universe.
  2. Cosmic Energy:
    She is identified as the cosmic energy that pervades everything, sustaining and destroying the universe.
  3. Tripura:
    Lalitha is referred to as Tripura, the three cities or worlds (heaven, earth, and underworld), symbolizing her omnipresence.
  4. Maha Kameshvari:
    She is called Maha Kameshvari, the great goddess of desire, representing her power to fulfill desires and bestow liberation.
  5. Parabrahman:
    Lalitha is equated with Parabrahman, the supreme Brahman, indicating her status as the ultimate reality.
  6. Beyond Duality:
    The Bhavanopanishad describes Lalitha as beyond duality, transcending human concepts of good and evil, male and female, and existence and non-existence.
  7. Embodiment of Knowledge:
    She is revered as the embodiment of knowledge, wisdom, and enlightenment.

The Bhavanopanishad presents Lalitha Mahatripurasundari as the supreme goddess, encompassing all aspects of existence, and offers a framework for spiritual growth, self-realization, and liberation.

In this context, Lalitha refers to the goddess Lalitha Mahatripurasundari, who is considered the supreme goddess in Hinduism. The phrase is often used to signify that the ultimate reality is not something external, but rather it is the Self, the consciousness within us.

Lalitha Mahatripurasundari is a revered goddess in Hinduism, particularly in the Shakta tradition. She is considered the supreme goddess, embodiment of cosmic energy, and the ultimate reality.

Lalitha is often depicted as a radiant, beautiful woman with four arms, seated on a throne, surrounded by gods and goddesses. Her name means:

  • “Lalitha” – playful, charming, or delightful
  • “Maha” – great
  • “Tripura” – three cities or worlds (heaven, earth, and underworld)
  • “Sundari” – beautiful woman

She is worshipped as the goddess of:

  • Cosmic energy and power
  • Creation, preservation, and destruction
  • Knowledge, wisdom, and enlightenment
  • Beauty, grace, and charm
  • Protection and liberation

Lalitha Mahatripurasundari is often invoked through the Lalitha Sahasranama, a sacred text containing 1,000 names and attributes of the goddess.

லலிதை தர்பார்