அம்மா என்று அழைத்தால் ஓடி வருவாள். நம் துயர் துடைத்திட, நம்மை காத்திட பல பல வடிவங்களில் அவதாரம் தரித்தாள் அன்னை பராசக்தி. அவள் நாமங்கள் பல பல கோடி. அவைகளை பதிவிட என் இந்த ஆயுட்காலம் போறாது. ஆனாலும் நான் படித்து மகிழ்ந்த சிலவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். சத்-சித்-ஆனந்தம் ‘ஸத் சித் ஆனந்த ரூபிணீ’ சச்சிதானந்த வடிவினள். அதாவது, உண்மை, அறிவு, மகிழ்ச்சி ஆகிய மூன்றின் வடிவினள். இறைவன் என்றும் அழியாத சத்தாக-உண்மையாக-மெய்ப்பொருளாக விளங்குகிறான். தேவி எப்போதும் பேரறிவு வடிவாகத் திகழ்பவள்.
லலிதை என்றால் லலிதம். பாலா என்றால் லலிதா. லலிதா என்றால் பாலத்திலிருந்து பராபட்டாரிக்கா ஸ்ரீ.லலிதா மஹா த்ரிபுரஸுந்தரி.
லலிதம் என்றால் அழகு.
லலிதம் என்றால் சாந்தம்.
லலிதம் என்றால் மென்மை. லலிதம் என்றால் அன்பு . லலிதம் என்றால் ஆனந்தம்.
பால த்ரிபுரஸுந்தரீ
லலிதம் என்ற வார்த்தையே அழகு. அழகே நிறைந்தவள் அழகு மட்டுமா ? அறிவும் நிறைந்தவள் . அறிவு என்றால் நம்மிடம் உள்ள அறிவா இல்லை . ஞானம்,எதையும் கணிக்கும் நுட்பம் ,ஆழ்ந்த அகன்ற நீண்ட நெடிய விசால பார்வை ,எதையும் அதன் நுனி ஆழம் வரை சென்று ,நீ யார் ? உனக்கு என்ன தேவை ? உன் மூலம் என்ன ?
உன் சூட்சும உடலில் உறைந்துகிடக்கும் தன்மை என்ன ? உமது இடரின் மூலகாரணமும் அதன் தீர்வும் ஷன பொழுதில் அறிந்தவள் !
உனக்கும் உனது நீண்ட நெடிய இறைக்கும் உள்ள ஆதி மூலம் நோக்கும் திறம் தெரிந்தவள் !
அதிநுட்பம் நிறைந்த எதையும் கணிக்கும் ஒரு ஞானப்பார்வை உடையவள்! . அன்பால் கருணையால் அகிலத்தையே ஆழ்ந்து ,யாவற்றையும் தம் சூட்சும பார்வையால் ஊடுறுவி அரசாட்சி செய்பவள்.!!! எம்பெருமானின் நாயகி !! எல்லையில்லா கருணை நிறைந்த ஸ்ரீ லலிதா எனும் நாமத்திற்கு சொந்தக்காரி !! அண்டசராசர ஜீவன்களையும் ஷன பொழுதில் அதன் நிலை அறியும் தன்மை நிறைந்த ஸ்ரீ மஹாராஜ்ஞீ.
அழகே முழுவதும் நிறைந்தவள் . தகதகவென ஜொலிக்கும் செந்தீ பிம்பம் போன்ற தேகம், செக்கச்செவேல் என சூரியனை மிஞ்சும் சிவப்பு நிறம் உடைவள்.
கண் கூசும் பிரகாசம் உடையவள்,என்றும் அழகிய புன்னகை முகத்துடன் அருள் ஆட்சி செய்பவள் .எந்தவித பாரபட்சமும் இன்றி ,யாவருக்கும் அருள் தந்து,அவர்களுக்கு முக்தி அளிப்பவள்.
அழகான முகம் ,அற்புதமான ஒளி நிறைந்த தேகம். புன்னகை என்றும் நிறைந்தவள். கருணா ஸாகரம் , கருணை கடல் போல நிறைந்து , அது அணு அளவு கூட குறையாமல் , தம்மை வணங்கும் யாவருக்கும் , எந்தவித பாரபட்சமும் இன்றி ,அவர் தம் சூட்சும தேகத்துள் உள்நோக்கி , இன்றைய மானுட ஜென்ம கர்ம வினையை மட்டும் நீக்காமல் , இன்னும் உட்சென்று அவருக்கு முக்தி அளிப்பவள் , பிறவா நிலை அருள்பவள். இப்படி ஒரு விக்ரஹம் ,ஒரு ஒளி உருவ தேகம் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்க்க முடியுமா உங்களால் ?
கற்பனை தான் செய்து பாருங்களேன் . அம்பாளின் அருள் அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ந்து ,மெல்ல மெல்ல ஒரு இனம் புரியா சாந்த அலைகள் நம்மை சூழ்ந்துகொள்ளும் ,இது போன்ற தெய்வீக கற்பனை, முதலில் மனதினை அதன் வெற்றிடங்களை அது தானே சாந்த அலைகளால் நிரப்பி நிறைவு செய்யும், நம்முள் இருக்கும் சின்ன சின்ன இடர் யாவும் ஏதோ எங்கோ மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக , அருள் அலைகள் நெஞ்சம் எங்கும் சூழ்ந்து ,ஆழ்ந்து ,இந்த ஆயிரம் ஆயிரம் சூரிய கோடி கதிர் அலைகள் நிறைந்த ஜோதியை நோக்கி அழைத்துச்சென்று அவள் அருள் ஆசிகள் பெற்றுத்தரும் என்பது அசைக்கமுடியா நம்பிக்கை.
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் என்பது மிகப்பெரிய ஸாகரம். எத்தனையோ கோடி கோடி நுணுக்கங்கள் ,நிகழ்வுகள்,சூட்சுமங்கள் நிறைந்தது .அதன் தாத்பர்யம் உணர்தல் என்பது ஒரு பிறவியில் முடியாது .அம்பாளின் அழகும் ,அவளின் ஒவ்வொரு நாமங்களுக்கு உண்டான அர்த்தங்களும் ,சரியான உச்சரிப்பும் அது நம் மனதுள் ,உடலுள்,சூட்சும தேகத்துள் ஏற்படுத்தும் அதிர்வுகளும் ,அதன் அற்புதமான விளைவுகளும் விவரிக்க இந்த மானுட ஜென்மம் போதாது.தந்தையின் அருள் ஆசியால் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பற்றிய சிந்தனையும்,அதை பாராயணம் செய்யும் பாக்கியமும் எமக்கு கிட்டியது .ஏதோ ஓரிரு முறை மட்டும் சொல்வோம் என ஆரம்பித்து தான் ,ஆனால் இதை இன்றுவரை எம்மால் முடிந்தவரை பாராயணம் செய்துகொண்டிருக்கிறோம்.இதை சொல்வதால் ,எமக்குள் உண்டான மாற்றங்கள் ஏராளம் ஏராளம்.எல்லாம் முக்தியை நோக்கியே அழைத்துச்செல்கிறது.இது வேண்டும் ,இந்த பிரச்சனை சரியாக வேண்டும்,இன்னும் இது போல வேண்டுகோள் நிறைய இருக்கிறது ,இவை எல்லாம் இந்த ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் சொல்வதால் வெகு விரைவில் அது சரியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இதை பாராயணம் செய்பவர்களுக்கு எதுவும் நடக்காது. எந்த பிரச்சனையும் தீர்க்க வரமாட்டாள்.அவர்கள் எல்லாம் சும்மா பேசாமல் இருப்பது நல்லது.ஏனெனில் முக்தியை ஏற்க அவ்வளவு எளிதில் யாரும் வர இயலாது,
எந்த எதிர்பார்ப்பும் இன்றி,என் கடன் பணி செய்து கிடப்பது போல ,பாராயணம் செய்ய செய்ய ,காரணமே இல்லாமல்,வந்து அருள் ஆசி வழங்குவாள்.தெளிந்த சிந்தனையோடு ஆராய அவளின் ஆசி அலைகள் நம்மை ஒரு பாதுகாப்பு வளையம் காப்பது போல காத்து,அரவணைத்து அருள் தந்து,நம்மை திவ்யமாக, ஆனந்தமாக வைத்து ,அவள் தம் சூட்சும பார்வையால் நம்மை திக்கு முக்காட செய்துவிடுவாள்.அணு ஷனமும் சிவனை விட்டு பிரியாத சிவாங்கினி .மூவுலகை ஆள்பவள் .தூய அன்பு அலைகள் சூழ்ந்து யாவற்றையும் ஈர்ப்பவள்.அளவிட முடியா சக்தி நிறைந்தவள்.
அடி மட்டநிலையில் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் இது போன்ற ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமங்களை சொல்வானேயானால் (அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ ) ,சொல்பனின் நிலை அடிமட்ட நிலையிலிருந்து ,அவன் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு உயரும்.அந்த அளவிற்கு அருள் அலைகளை தாண்டவம் ஆட செய்து அசரவைத்துவிடுவாள்.
குருவாயூரில் திருவிழாக் காலம். கண்ணக் கடவுள் உற்சவ மூர்த்தியாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். பக்தர்களோடு பக்தர்களாக நாராயண பட்டதிரியும் பூந்தானமும் முன்வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். இருவரும் பக்தியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர்.
பட்டதிரி மெத்தப் படித்த மேதாவி. நாராயணீயம் என்ற உன்னதக் காவியத்தை எழுதிய புலவர். பூந்தானம் படிப்பறிவற்றவர்.
“ஞானப்பானை’ என்ற தத்துவ பக்திக் கவிதைகளின் ஆசிரியர். பூந்தானத்திற்கு பட்டதிரியிடம் மிகுந்த மதிப்புண்டு. பட்டதிரி பெரும் கல்வியாளர் அல்லவா? கல்வியறிவற்ற தாம் அவரிடமிருந்து நல்லுரைகள் பெற்று அவற்றின்படி நடக்க வேண்டும் என்று அடக்கமே வடிவான பூந்தானம் நினைப்பதுண்டு.
பட்டதிரி பெரும் பக்தராக இருந்தாலும் பூந்தானத்தைக் குறித்து, படிப்பில்லாதவர் அவர் என்று பட்டதிரியிடம் இளக்காரம் தோன்றுவது உண்டு. கண்ணன் இரண்டு மாபெரும் பக்தர்களின் உன்னத பக்தியையும் ஏற்றான். என்றாலும் பட்டதிரியின் கல்விச் செருக்கைச் சற்றுத் தட்டிவைக்கத் திருவுளம் கொண்டான்.
உற்சவ மூர்த்தியைத் தோளில் சுமந்திருந்த அன்பர்கள் பல்லக்கை வெளியே கொண்டுவர முனைந்தார்கள். கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஏதோ இடித்தது. எங்கே எது இடித்துத் தடுக்கிறது என்று பல்லக்குத் தூக்கியவர்கள் ஆராய்ந்தார்கள். அவர்கள் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. அப்போது பட்டதிரியின் அருகே நின்றிருந்த பூந்தானம் பரபரப்படைந்தார். உற்சவ விக்கிரகத்தையே கூர்ந்து பார்த்த அவர் திடீரென்று ஒரு விந்தையான வாக்கியத்தைச் சொன்னார். அதைக் கேட்டு எல்லோரும் திகைத்தார்கள்.
பட்டதிரி பூந்தானத்தைப் பார்த்து ஏளனப் புன்முறுவல் பூத்தார். எதையும் கவனியாத பூந்தானம், மீண்டும் அதே வாக்கியத்தைச் சொன்னார். அவர் மறுபடி அந்த வாக்கியத்தைச் சொல்லி முடிப்பதற்குள் மூல விக்கிரகத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் கண்களில் கண்ணீர் வழிய, உற்சவ விக்கிரகத்தை நோக்கி ஓடி வந்தார்.
விம்மலுடன், பூந்தானம் சொன்ன வாக்கியத்திற்கு வலுச்சேர்க்கிற வகையில் தான் கண்ட காட்சியை அவரும் சொன்னார். கூட்டம் அளவற்ற திகைப்பில் ஆழ்ந்தது. ஒருசில நாட்கள் முன்பு… குருவாயூர் சன்னிதியில் நாராயணீயத்தைப் பிரவசனம் செய்து கொண்டிருந்தார் பட்டதிரி.
பக்தர்கள் அந்தக் கவிச்சுவை நிறைந்த சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைக் கேட்டுப் பரவசமடைந்தார்கள். அன்றைய பிரவசனம் முடிந்ததும் பட்டதிரி வீட்டிற்குப் புறப்பட்டார். அப்போது அவர் அருகே பவ்வியமாய் வந்து நின்றார் பூந்தானம். பட்டதிரி விழிகளில் ஏளனம்.
“”என்ன பூந்தானம்? என் நாராயணீயத்தைக் கேட்க வந்தாயா? உனக்கு அதெல்லாம் எங்கே புரியப் போகிறது? படித்தவர்களுக்கான நூல் அல்லவா அது?” “”புரிந்தால் என்ன, புரியாவிட்டால் என்ன சுவாமி? குருவாயூரப்பன் புகழைச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு என் காதெல்லாம் தித்திக்கிறது. நான் தங்களிடம் ஆன்மிக விஷயமாக ஒரு சந்தேகம் கேட்கவே இன்று காத்திருந்தேன்!” என்ன சந்தேகம்? கேள்! எதுவானாலும் நான் விளக்கம் தருகிறேன்! “”சுவாமி! நான் கண்ணை மூடிக் கண்ணனைத் தியானம் செய்கிறேன். சிலநேரம் அவனது மயில் பீலி அசைவது மனக் கண்ணில் தெரிகிறது. சிற்சில நேரம் அவனது புல்லாங்குழலின் காட்சி கிட்டுகிறது.
அவனுடைய அருள்பொங்கும் தாமரைக் கண்களை ஒருநாள் மனக்கண்ணால் பார்த்து உருகினேன். ஆனால், சுவாமி, என்னவோ, அவனது முழு உருவையும் சேர்த்துப் பார்க்கும் பாக்கியம் மட்டும் கிட்டுவதில்லை. என் கண்ணனை முழு உருவிலும் பார்க்க வேண்டுமானால் என்ன வடிவத்தில் அவனைத் தியானம் செய்வது நல்லது? தாங்கள் தான் அறிவுறுத்த வேண்டும்!” குழந்தைபோல் வெகுளியாக பூந்தானம் கேட்ட கேள்வியைப் பட்டதிரி உள்வாங்கிக் கொண்டார்.
குருவாயூரப்பனை முழு உருவில் தரிசிக்க விரும்புகிறானாமே படிப்பறிவில்லாத இந்தப் பாமரன்! இவனுக்கு என்ன உருவில் தியானம் செய் என்று நான் அறிவுறுத்துவது? இவனுக்கு பக்தி எதற்கு? கல்வியறிவற்ற இவனைப் போன்றவர்கள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு!” இப்படி நினைத்தார் பட்டதிரி. கண்ணனே மாடு மேய்த்தவன் தான் என்பதும் மாடுமேய்த்த கண்ணன் தான் பண்டிதர்கள் போற்றும் கீதையை உரைத்தவன் என்பதும் அந்த நேரத்தில் அவருக்கு மறந்து போயிற்று. நகைத்தவாறே அவர் பூந்தானத்திடம் சொன்னார்.
“”முழு உருவையும் தரிசிக்க வேண்டுமானால் உனக்கு அதிகம் பழக்கமான உருவில் குருவாயூரப்பனை தியானம் செய்யேன்! எருமை மாட்டு வடிவில் கூடக் கண்ணனை நீ தியானம் செய்யலாம்”. அலட்சியமாக இப்படிச் சொல்லிவிட்டு பட்டதிரி சென்றார். ஆனால் பூந்தானம் பட்டதிரியின் மேல் அளவற்ற மரியாதை கொண்டவராயிற்றே? தன்னைக் கிண்டல் செய்யும் விதத்தில் தான் பட்டதிரி அப்படிச் சொன்னார் என்ற உண்மை பூந்தானத்திற்கு உறைக்கவில்லை. அவர் பட்டதிரியின் வாக்கை வேதவாக்காக ஏற்றார். அன்று தொட்டுக் கண்ணனை எருமை மாட்டு வடிவில் தியானம் செய்யலானார்.
கண்ணனுக்கு அளவற்ற ஆனந்தம். இருக்காதா பின்னே! அவன் எடுத்த பத்து அவதாரங்களில் மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவுமெல்லாம் உருக் கொண்டானே தவிர எருமை மாடாக உருக் கொள்ள சந்தர்ப்பமே நேரவில்லையே! எருமை மாடும் அவன் சிருஷ்டியில் ஒன்று தானே! இதோ! ஓர் அபூர்வ வாய்ப்பு… தவற விடக் கூடாது இதை! பூந்தானத்தின் மனத்தில், சேற்றைப் பூசிக் கொண்டும் கொம்புகளை அசைத்துக் கொண்டும் வாலைச் சுழற்றிக் கொண்டும் கம்பீரமான எருமை மாடாகக் காட்சி தரலானான் கண்ணபிரான். ருக்மிணியும் சத்யபாமாவும் வேறுவழியின்றி அவசர அவசரமாக பெண் எருமைகளானார்கள்!
சேற்றிலும் சகதியிலும் கண்ணன் தன் சகதர்மிணிகளோடு ஆனந்தமாக விளையாடுவதை மனக் கண்ணால் கண்ட பூந்தானம் மெய்மறந்தார். எருமை வடிவில் கண்ணனை தரிசித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
உற்சவ மூர்த்தி நடைதாண்டி வெளியே வர இயலாமல் எது தடுக்கிறது? காரணம் தெரியாமல் பல்லக்குத் தூக்கியவர்கள் தவித்தபோது பூந்தானம் உரத்துக் குரல் கொடுத்தார். கொஞ்சம் சாய்த்துப் பல்லக்கை எடுங்கள். மேலே எருமை மாட்டின் வாலாலோ, உடலாலோ எந்தப் பிரச்னையுமில்லை. கொம்புதான் முட்டுகிறது. அதனால் தான் உற்சவ விக்ரகம் வெளியே வர இயலாதிருக்கிறது. சாய்த்து எடுத்தால் வெளியே கொண்டுவந்து விடலாம்!
“”இதென்ன பைத்தியக்காரத் தனமான பேச்சு! மயில் பீலியும் புல்லாங்குழலும் காதில் குண்டலங்களும் தலையில் மணி மகுடமுமாய் என்னப்பன் குருவாயூரப்பன் பல்லக்கில் எழிலோவியமாகக் காட்சி தருகிறான்! பூந்தானம் எருமை மாட்டை வர்ணிக்கிறாரே!”
பட்டதிரி நகைத்தபோது மூல விக்ரகத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஓடோடி வந்தார். உற்சவ விக்கிரகத்தைப் பார்த்துப் படபடவெனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். பிறகு சொல்லலானார்.
“”அன்பர்களே! நான் அர்ச்சனை செய்துகொண்டே இருந்தபோது குருவாயூரப்பனின் மூல விக்ரகம் திடீரென ஒரு மகிஷமாக (எருமை) மாறியது. தன் எருமைக் குரலில் “”என் பக்தன் பூந்தானம் என்னை, நாராயண பட்டதிரி சொன்ன அறிவுரைப்படி, எருமை வடிவில் தியானம் செய்கிறான். அதனால் தான் உனக்கு இந்தக் காட்சி கிட்டியிருக்கிறது. உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்பவர்களிடம் இதைத் தெரிவி என எனக்கு உத்தரவிட்டார்! பூந்தானம் சாதாரண பக்தரல்ல. அவர் கடவுளைக் கண்ட மகான்!” அர்ச்சகர் பூந்தானத்தின் கால்களில் கண்ணீர் பெருக விழுந்து வணங்கினார். இதொன்றையும் கவனியாத பூந்தானம், ஒரே ஒரு கொம்புதான் மேலே இடிக்கிறது. இன்னொரு கொம்பு இடிக்கவில்லை. விரைவில் உற்சவ மூர்த்தியை வெளியே கொண்டு வாருங்கள்!” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்! அவர் சொன்னபடியே சாய்த்து எடுத்துவந்தவுடன் பல்லக்கு எளிதாக வெளியே வந்துவிட்டது.மறுகணம் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எல்லோரும் கேட்கும் வகையில் உற்சவ விக்கிரகத்திலிருந்து “ம்மா!’ என்ற எருமை மாட்டின் கம்பீரக் குரல் எழுந்து அந்தப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது!
எருமை மாட்டு வடிவில் கண்ணனைக் காணாவிட்டாலும் அந்த சப்தத்தைக் கேட்ட பட்டதிரி மெய்சிலிர்த்தார். கண்களில் கண்ணீருடன் உற்சவ மூர்த்தியை வணங்கியவர், தான் சொன்னதை மனப்பூர்வமாக ஏற்று எருமை வடிவில் கண்ணனைக் கண்ட மகான் பூந்தானத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
“”படிப்பால் என்ன பயன்! பக்தியல்லவா முக்கியம்! ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டதற்காக பகவான் காட்சி கிடைத்துவிடுமா என்ன! உள்ளார்ந்த பக்திக்கல்லவோ என் கண்ணன் உருகுவான்! பஞ்சாங்கத்தில் என்றைக்கு மழைவரும் என்று போட்டிருக்கும். ஆனால், பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராதே! நான் படிப்பறிவுள்ள பஞ்சாங்கம் மட்டும்தான். பூந்தானமே! நீரல்வோ கண்ணனை நீராட்டிய பக்தி மழை!”
பட்டதிரியின் உருக்கமான பேச்சை பூந்தானம் கவனித்தாய்த் தெரியவில்லை. “”ஆகா! என் குருவாயூரப்பன் என்ன அழகாக வாலை அசைக்கிறார்! என மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
நவராத்திரியில், ஜகன்மாதாவான அம்பிகையின் பிரபாவத்தைப் புகழும் ‘ஸ்ரீ தேவி மஹாத்மியம்’ பாராயணம் செய்வது மிகப் பலரின் வழக்கம். தேவியின் அவதார மகிமை, யுத்த சரித்திரம் முழுவதும் அடங்கியதே ஸ்ரீ தேவி மஹாத்மியம். இது, நினைத்தவுடனே முக்தி அளிக்கும் மிக மகிமை வாய்ந்த நூலாகும்.
Sapthasringi
அந்த ஸ்ரீ தேவி மஹாத்மியத்தில் இருக்கும் எழுநூறு ஸ்லோகங்களின் சாரமே, ‘ஸ்ரீதுர்க்கா ஸப்த ஸ்லோகி”. இதை பாராயணம் செய்தால், ஸ்ரீ தேவிமஹாத்மியம் பாராயணம் செய்த முழுப் பலனும் அடையலாம்.
அஷ்டமி, சதுர்த்தசி, மற்றும் வெள்ளிக் கிழமைகளில், ஐந்து முக தீபத்தை ஏற்றி, தேவியைப் பூஜித்து, ஸ்ரீ துர்க்கா ஸ்ப்த ஸ்லோகியை மூன்று முறை சொல்லி நமஸ்கரிப்பது, எல்லா நலன்களையும் பெற்றுத் தரும். தீபத்தை கிழக்கு, அல்லது வடக்கு முகமாக வைத்துப் பூஜிக்க வேண்டும். வெள்ளிக் கிழமைகளில், சப்தஸ்லோகியுடன், லக்ஷ்மி அஷ்டோத்திர அர்ச்சனையும் சேர்த்து செய்து, தேங்காய், பழம் நிவேதனம் செய்ய, ஐஸ்வர்யம் பெருகி, சர்வ மங்களங்களும் உண்டாகும்.
ஸ்ரீ துர்கா ஸப்த ஸ்லோகீ
சிவ உவாச: தேவி த்வம் பக்தி ஸூலபே சர்வ கார்ம விதாயினி! கலௌ ஹிகார்ய ஸித்யர்த்தம் உபாயம் ப்ருஹியர்ந்த:
மகாமாயையான பகவதி தேவி ஞானியரின் சித்தங்களையும் பலவந்தமாக தன் மாயா சக்தியால் இழுத்து மோகத்தில் செலுத்துகிறாள். (1)
கடக்க முடியாத பெரும் துன்பத்தில் ஸ்மரிக்கப்பட்டால் ஸ்ரீ துர்க்கா தேவி,சகல பிராணிகளின் அச்சத்தையும் போக்குகிறாள் (அல்லது) துர்கே உனை ஸ்மரித்த மாத்திரத்தில் எல்லா உயிரினங்களின் பயத்தையும் போக்குகின்றாய்.
இன்ப நிலையில் இருந்து கொண்டு ஸ்மரிக்கப்பட்டால் பரம மங்களமான நல்லறிவை நல்குகிறாய். வறுமை, துன்பம், பயம் ஆகியவற்றை நீக்குபவளே ! ஸகலருக்கும் ஸர்வ உபகாரங்களையும் செய்வதற்காக ஸதாகாலமும் காத்திருக்கும், கருணையால் நிரம்பிய நெஞ்சுடையவர் உனையன்றி எவர் உண்டு? (2)
‘சரண்’ என வந்த தீனரையும் துன்புற்றோரையும் மிக அருமையாகக் காப்பதையே தொழிலாகக் கொண்ட தேவி ! அனைவரின் துன்பங்களையும் நீக்கும் நாராயணி!!! உனக்கு நமஸ்காரம். (4)
காணும் உருவனைத்தும் நீயே ! அனைத்தையும் ஆளும் தேவி நீயே ! சர்வ சக்தியும் ஒன்றிய இடம் நீயே ! தேவி துர்கே ! உனக்கு வந்தனம் ! எங்களை அச்சங்களினின்று ரட்சித்தருள்வாய்.! (5)
(பக்தியினால்) நீ திருப்தியடைந்தால், சகல ரோகங்களையும் அறவே அகற்றுகிறாய். கோரும் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்கிறாய். உனை அரண் போல பாதுகாப்பாகக் கொண்ட மனிதருக்கு இடர் என்பதே இல்லை. அவர்களே பிறருக்கு அரணாகின்றனர் அன்றோ ? (6)
அகிலாண்டேசுவரி ! உன்னால் எமது பகைவர்கள் அழிக்கப் பெற வேண்டும். இவ்வாறே மூவுலகிலும் உள்ளவர்களின் சகல துன்பங்களையும் நீ அடியோடு அகற்றி அருள வேண்டும்.
மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.
ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.
7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.
மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.
வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.
ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.
நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.
திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.
குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.
மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.
லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும்.
லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.
லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.
புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.
வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.
மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.
அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.
கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.
லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.
லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.
37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.
38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.
39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.
40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.
செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.
வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும்.
வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.
வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.
நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.
துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.
ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.
திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம்.
சாஞ்சி ஸ்தூபத்தில், ஒரு கம்பத்திலும் சாரநாத் தோரணத்திலும், யானைகள் உடைய திருமகள் உருவங்களைக் காணலாம்.
பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கஜலட்சுமியை காண முடியும். கஜலட்சுமியின் உருவங்கள் இரண்டு மாமல்லபுரத்தில் உள்ளது.
திருக் குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.
சீல கிரந்தம் எனும் புத்த நூல் மகாலட்சுமி வழிபாட்டினை விளக்குகிறது.
கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குஷானர்களின் சிற்ப ரீதியில் அமைந்த, செந்நிறக் கல்லால் ஆன, சற்றுச் சிதைந்த லட்சுமியின் உருவம் ஒன்று டில்லி காட்சிச் சாலையில் உள்ளது.
மகாலட்சுமி வடிவங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென லட்சண கிரந்தங்கள் உள்ளன. அம்சுபேதாகமத்தின் படி, திருமகள் தாமரையில் வீற்றிருப்பாள்.
வராக அவதாரத்தில் திருமால் பூமியை தோண்டி விட்டுத் தம் சிரமத்தை மறந்திருக்கத் திருமகளைத் தம் தொடை மீது நிறுத்தி இன்பமடைகிறார். மாமல்லபுரத்தில் இவ்வமைப்புடைய சிலை உள்ளது.
பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.
தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்துக் கும்பிடுகின்றனர்.
குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
மகாராஷ் டிரத்தில் உழவர்கள் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக கருதுகிறார்கள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர். மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அத்துடன் துணியில் மறைத்த ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.
ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக வழிபடுகின்றனர். தானியம் அளக்கும் காரி என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து அவர்கள் வழிபடுவது உண்டு.
இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம்.
கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.
லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.
எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
76.மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.
பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.
வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
நாம் செய்யும் பாவ, புண்ணியந்த்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.
மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள்.
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.
மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.
மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.
85.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.
வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.
வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.
வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.
மாதா,பிதா, குரு, தெய்வம் என்பது பழமொழி குழந்தைக்கு மாதா பிதாவை அடையாளம் காட்டுவார். மாதாவும் பிதாவும் குருவை அடையாளம் காடடுவார்கள்.
குரு தெய்வத்தைக் காட்டுவார். குருவின் அவசியம் தேவை. புலன் மயக்கத்திருந்து மனிதனை விடுவிக்க குரு ஒருவரால் தான் முடியும். குரு இல்லாத வித்தை பாழ் என்பார்கள்.
ஞானமார்க்கத்திற்க்கு குரு தேவை. அறியாமை என்ற இருளை அகற்றுபவர் குரு. ஒருவன் வேதங்கள் கற்றிருந்தாலும் ஆகமங்கள் உபநிடதங்கள் பயின்று இருந்தாலும் குருவின்றி மெய்ஞானம் அடைய முடியாது.
குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு இன்பத்தை அனுபவித்து ஞானத்தை தேடுதலே நலம்.
வாழ்க்கையின் வழிகளையும் ஆன்மீகப் பணிகளையும் குரு காட்டுவார். குருவே தெய்வம் குருவினிடத்தே நிழல் போன்று நின்று அவரது செயல்களுக்கெல்லாம் ஒத்துப் பழகி இருத்தல் வேண்டும்.
ஞானம் வேண்டும் என்று பல பேர் தப்பு தப்பா புரிந்து கொண்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் பாவம்.
முதலில் வாழ கத்துக்கங்கப்பா. மெசன்சரில் பதில் போட்டு கை வலிக்குது.
குருவிற்க்கு மேலானது ஏதுமில்லை. எவரைப் பார்த்த மாத்திரத்திலேயே மனதில் தானாகவே சாந்தியும் திடமும் மகிழ்ச்சியும் உண்டாகிறதோ அவரே பரம குரு என்கிறது குரு கீதை.
உங்கள் மனம் யாரிடம் ஒடுங்குகிறதோ அவரே உங்களுக்கு இந்த ஜென்மத்தில் குரு. எவரைக் கண்டால் மனம் தத்தளிக்காமல் ஓடுங்கி ஆனந்த்தை கொடுக்கிறதோ அவரே உங்கள் குரு.
அவா அவா குருவை கேட்டு சமத்தா அவர்கள் சொன்ன வழியில் வாழ்க்கை நடத்துவது நலம்.
ஊடகங்கள் உங்களை குழப்பலாம். குரு உங்களுக்கு தெளிவை கொடுத்து வழி நடத்துவார்.
குருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் மனதளவில் சாதனைகளுக்கு தயார் என்றால் உங்கள் உபதேசம் குரு உங்கள் முன் தோன்றுவார்.
குரு கிடைத்தவுடன் அவரிடம் இந்த மந்திரம் எனக்கு வேண்டும் என்று கேட்க அவசியமில்லை. நமது தகுதிக்கு ஏற்ப(நமது உடலில் எத்தனை மின்சாரத்தை செலுத்தி அதை தாங்க முடியும் என்கிற அளவுகோல் நமது குருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்) கிடைக்கும்.
குரங்குக் குட்டியானது குரங்கைப் பிடித்துக் கொள்வதுபோல் குருவை பக்தன் பற்றி நிற்க வேண்டும் குரு பார்வை கிடைத்ததும் பூனைக் குட்டியைப் பூனை தூக்கிச் செல்வது போல சீடனை குரு தூக்கி செல்வார்.
எல்லோராலும் குருவாகி விட முடியாது. மிதந்து கொண்டிருக்கும் மரக்கட்டை பல மனிதர்களையும் விலங்குகளையும் ஆற்றைக் கடந்து அழைத்துச் செல்லக்கூடும்.
நல்ல குரு பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் வலுவான கட்டை போன்றவர் என்பார் ஸ்ரீ ராம கிருஷ்ணர். இந்த அரும்பிறவியில் முன் வினை அறுத்து எல்லையில்லா மெய்பொருளை அடைவதற்க்கு வந்த ஒரு எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்க்கு வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை.
அவரின் திருவடியை வணங்கி மகிழ்வதாக வேதாத்திரி மகரிஷி இன்பமுறுகிறார். பக்தன் தகுந்த மனப்பரிபாகம் அடையும்போது குரு தானாக வருவார். குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை.
வானொலிப் பெட்டியில் தகுந்த அலைவரிசையைத் திருப்பினால் தொடர்புடைய நிகழ்ச்சிகள் கேட்கும். அதுபோல பக்தன் தனது மனதை தகுந்த அலைவரிசையில் வைத்திருக்கும் போது குரு அந்த அலைவரிசையில் தானாக வந்தமருவார்.
ஸ்ரீராமகிருஷ்ணருக்கு தோத்தாபுரி தானாகத் தேடிவந்து உபதேசம் தந்தார். மூர்த்தி தவம் தீர்த்தம் முறையாகச் செய்தோர்க்கு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்றார் தாயுமானவர்.
வாழ்கை வாழ்வதற்கே!! குரு மட்டுமே சத்தியம்!! அவர் காண்பித்தது மட்டுமே ஞானப்பாதை!! குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கை அமைந்திட பிராத்தனை!!
இப்பிறவிப் பயன்களை அடைவிக்கும் நல்வழி காட்டி உதவுவது, ஸ்ரீகுருவின் சரணாரவிந்தங்களே. எத்தனையோ குருமார்கள் இந்த ஞான பூமியிலே. அவரவர் மனதிற்கு இசைந்த வழிகளில், சத்குருவை தேர்ந்தெடுத்து, பின் அவரை விடாது பின்பற்றினோமானால், நடைமுறை வாழ்க்கையை அமைதியாகவும் நிம்மதியாகவும் நடத்தி முடித்து, முடிவில் இறைவனின் திருவடிகளை அடையும் பாக்கியம் பெறலாம். தெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! – திருமந்திரம்
எனவே நண்பர்களே மாயையில் இருந்து விடுபட்டு பிரம்மத்தை அறிவோம் நண்பர்களே. நமோ தேவ்யை. குமார் ராமநாதன்.
“கலெள சண்டி வினாயகெள” அதாவது கலியுகத்தில் விரைவாக பலனை வழங்க கூடியவர்கள் சண்டி என்றழைக்கப்படும் சண்டிகா பரமேஸ்வரியும் விநாயகருமே ஆவார்கள்.
சண்டி
“குண்டலக்காதி கொலைவில் புருவத்தள் கொண்ட அரத்த நிறமெனும் கோலத்தள் கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச் சண்டிகை நாற்றிசை தாங்கி நின்றாளே” – என்ற திருமந்திர வாக்கின் மூலம் திருமூலர் காலம் தொட்டே சண்டி உபாசனை இங்கு இருந்து வருவதை அறியலாம். மார்கண்டேய புராணம்,பத்ம புராணம் முதலியவற்றில் சண்டி பாராயணம் தெளிவாக வருகிறது, இதில் அம்பிகையானவள் சண்டிகா தேவியாக ஆராதிக்கப்படுகிறாள். இந்த ரூபத்திற்கு அப்படியென்ன சிறப்பு என இனி நாம் காணலாம்.
துர்கா பரமேஸ்வரியின் இன்னொரு திருநாமமே சண்டிகா பரமேஸ்வரி ஆகும். இந்த சண்டி தேவியின் பெருமையை கூறுவதே ஸ்ரீதேவீ மாஹாத்மியம். எவ்வாறு பகவத்கீதை 700 ஸ்லோகங்களுடன் மகாபாரதத்தின் நடுநாயகமாக விளங்குகிறதோ அதைப் போலவே ஸ்ரீதேவி மாஹாத்மியம் மார்கண்டேய புராணத்தில் நடுநாயகமாக விளங்குகிறது. இது மார்கண்டேய புராணத்தில் 74 – 86 அத்யாயங்களில் (பதிமூன்று அத்யாயங்கள்) வருகிறது.
இந்த ஸ்தோத்ரம் முழுவதுமே மூலமந்திர ரூபமானது, உதாரணமாக ஸாவர்ணிஸ்ஸூர்யதனயோ என்று துவங்கும் ஸ்லோகம் புவனேஸ்வரி மந்த்ரமாக அமைந்துள்ளது. அன்னையின் ஆராதனை முறையை விளக்கும் டாமர தந்திரம் மற்றும் யாமள தந்திரம் முதலியவற்றில் இதன் பாராயணமுறை விளக்கப்பட்டுள்ளது. இதன் படி தேவீ-மாகாத்மியம் கவசம்,அர்க்கம்,கீலகம் முடிவில் மூன்று ரகசியம் என்று கொண்டதாக இருக்கும்.
இதற்கு ஸப்தசதீ என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் 700 ஸ்லோகங்கள்(ஸப்த என்றால் 7,ஸதம் என்றால் 100) ஆகும். 13 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ப்ரதம சரித்ரம், மத்யம சரித்ரம் மற்றும் உத்தம சரித்ரம் என 3 பகுதிகளாக உள்ளது. முதலில் மதுகைடப வதமும், இரண்டாவதில் மகிஷாசுர வதம் + அம்பாள் ஸ்துதியும், மூன்றாவதில் அரக்கர்களின் அழிவிற்கு முன்பும் பின்பும் தேவி ஸ்துதி காணப்படும்.
சண்டிகா தேவியின் பெருமையை கூறுவதால் இதை சண்டீ எனவும், 700 ஸ்லோகங்களோடு விளங்குவதால் இதை ஸப்தஸதீ என்றும் அழைப்பார்கள்.
சண்டீ பாராயணத்தின் பெருமையை பற்றி பத்ம புராணம் மற்றும் ஸ்ரீதேவி பாகவதம் போன்ற நூல்களிலிருந்து அறியலாம்.
சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் போன்ற பல உரைகள் இந்நூலிற்கு உண்டு. இவற்றில் நீலகண்டர் எழுதிய துர்க்காப்ரதீபம், நாகேச பட்டர் எழுதிய நாகேசீ மற்றும் பாஸ்கர ராயர் எழுதிய குப்தவதீ தனிச்சிறப்பு பெற்றவைகளாகும்.
டாமர தந்த்ரம், காத்யாயனீ தந்த்ரம், க்ரோட தந்த்ரம், மேரு தந்த்ரம், மரீசி கல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மாஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.
யக்ஞங்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமர தந்திரம் கூறுகிறது. சிதம்பர ரஹசியத்தில் ஸ்ரீ பரமேஸ்வரர் ஸ்ரீதேவி மாஹாத்மியத்தின் பெருமையை பார்வதி தேவிக்கு எடுத்துரைக்கிறார்.
“யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா ” என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. அதாவது வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என்பது அதன் பொருளாகும்.
இந்த தேவீ மாஹாத்மியத்தை வேத வியாஸரின் சிஷ்யரான ஜைமினி முனிவருக்கு ஸ்ரீமார்கண்டேய மஹரிஷி உபதேசித்ததாக கூறுவர்.
தான் நம்பிய அமைச்சர்கள் மற்றும் உறவினர்களாலே ஏமாற்றப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்ட சைத்ரிய வம்ஸத்தை சேர்ந்த ஸுரதன் என்ற அரசனும், தன் சொந்த மனைவி மக்களாலேயே சொத்துக்கள் அனைத்தையும் இழந்த ஸமாதி என்ற வைச்யனும் காட்டில் சந்திக்கின்றனர்
இருவரும் கானகத்தில் அலைந்து கடைசியாக ஸுமேதஸ் என்ற முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகின்றனர். இருவரும் தாங்கள் இப்படி தங்கள் சுற்றத்தாராலே ஏமாற்றப்பட்டும் தங்கள் மனம் அவர்களின் பாலே செல்வதற்கு காரணம் யாது என வினவினர். அப்பொழுது தான் ஸுமேதஸ் நீங்கள் மாயையினால் கட்டுண்டு கிடப்பதாலே இவ்வாறு நிகழ்கிறது என்று கூறினார். மேலும் தேவர்கள் மற்றும் தேவர்களின் தலைவரான ஸ்ரீஹரியும் கூட அம்பிகையின் மாயைக்கு கட்டுப்பட்டவர்களே என்பதையும் விளக்கி கூறினார்.
ஒரு சமயம் இப்படி விஷ்ணு மாயையினால் பீடிக்கப்பட்ட மஹாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்து விட அவருடைய காதின் அழுக்கிலிருந்து மது, கைடபன் என இரு அசுரர்கள் தோன்றினர். பின்னர் க்லிம் என்ற ஸப்தத்தை கடலில் ஆடும் போது கேட்டு அது தேவி பீஜம் என்பதை அறியாமலேயே அதன் வசப்பட்டு அதை விடாது ஜபித்து தேவியின் தரிசனம் கண்டு தாங்கள் விரும்பும் போதே தங்கள் மரணம் நிகழ வேண்டுமென்ற வரத்தை பெற்றனர்.
பலம் கொண்ட அந்த அசுரர்கள் பிரம்மாவை துன்புறுத்த அவர் அம்பிகையை பிரார்த்தித்து விஷ்ணுவை யோக நித்திரையிலிருந்து எழுப்புகிறார். பின்பு விஷ்ணு அவ்விரு அரக்கர்களோடு ஐயாயிரம் ஆண்டுகள் போரிட்டும் வெல்ல முடியாமல் அம்பிகையை சரணடைய , தேவீ மோகினியாக தோன்றி அவ்வசுரர்களை தன் வசம் மயக்கி விஷ்ணுவிற்கு வரமளிக்க தூண்டுகிறாள். மஹாவிஷ்ணு நீங்களிருவரும் என்னாலே மரணமடைய வேண்டும் என வரம் பெற்று அவர்களை ஸம்ஹரிக்கிறார். இதனால் தேவி மதுகைடபஹந்தரி என்று விஷேச நாமம் பெற்ற சரிதத்திலிருந்து ஒவ்வொன்றாக கூறத் தொடங்குகிறார்.
இப்படி 13 அத்தியாயங்களில் மதுகைடப வதம், மஹிஷாசுர வதம் மற்றும் சும்ப நிசும்ப வதம் ஆகியவைகளை விவரிக்கிறார். இதில் சும்ப நிசும்ப வதத்தின் போது தேவி சிவனையே தூதராக சும்ப நிசும்பர்களிடம் அனுப்பி சிவதூதீ என்ற பெயரை பெற்ற சரிதமும் அடக்கமாகும். இவ்வாறு தேவியின் பெருமையை பலவாறு கூறி சுரதன் மற்றும் ஸமாதியை தேவியை உபாஸிக்கும் படி அறிவுறுத்துகிறார்.
அவரின் அறிவுரையை ஏற்று தேவியை உபாஸித்தன் பலனாக சுரதன் இழந்த ராஜ்யத்தை மீண்டும் பெற்று மகிழ்வுடன் ஆட்சி நடத்தி அடுத்த பிறவியில் மனுவாக பிறந்தான், வைச்யனான ஸமாதி ஞானமடைந்து மோக்ஷ ப்ராப்தம் அடைந்தான் என்று தேவீ மாஹாத்மியம் சரிதம் முடிகிறது. இதில் சுரதன் ஆற்றுக் களிமண்ணால் அம்பிகையின் பிரதிபிம்பத்தை செய்து பூஜித்து இகபர சுகங்களை அடைந்ததால் களிமண்ணால் செய்த பொம்மைகளைக் கொண்டு நவராத்திரியின் போது தேவியை ஆராதிக்கிறோம்.
இவை வெறும் சரிதம் மட்டுமல்ல. இவை அனைத்தும் மந்திர பூர்வமானது. இந்த 700 ஸ்லோகங்களைக் கொண்டே சண்டீ மஹாயாகம் நடத்தப்படுகிறது.
முறையாக குருவிடம் நவாக்ஷரி உபதேசம் பெற்றவர்களே தேவீ மாஹாத்மியத்தை பாராயணம் செய்ய வேண்டும்.நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல் ஜபித்தல் சிறந்தது.
இவ்வாறு குரு உபதேசம் இல்லாதவர்கள் வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து ஸப்தாஹ முறைப்படி ஏழு நாட்களில் மேற்கூறிய கணக்கில் ஸமஸ்கிருத மந்திர மூலத்தை படிக்காமல் உரையை மட்டுமே சரிதமாக (கதையை போல) படித்து தூப தீப நைவேத்யத்தோடு பூஜை செய்யலாம். அம்பிகை பக்தியை மட்டும் தான் பார்ப்பாள், ஸமஸ்கிருதம் தெரியவில்லை, நவாக்ஷரி ஆகவில்லை என்றெல்லாம் பார்க்க மாட்டாள். இவ்வாறு படித்தாலும் கை மேல் பலனுண்டு. அசாத்தியமான நம்பிக்கையே அவசியம்.
“Swayameva Atma Lalitha“ That’s a beautiful phrase in Sanskrit, which means “Lalitha is the Self” or “Lalitha is the ultimate reality“.
It’s a profound phrase that highlights the non-dual nature of reality, where the individual self (Atma) is not separate from the ultimate reality (Lalitha).
The Bhavanopanishad, a Hindu scripture, describes Lalitha Mahatripurasundari as the ultimate reality, the source of everything, and the embodiment of cosmic energy. Here are some key points:
Ultimate Reality: Lalitha is described as the ultimate reality, beyond human comprehension, and the source of the universe.
Cosmic Energy: She is identified as the cosmic energy that pervades everything, sustaining and destroying the universe.
Tripura: Lalitha is referred to as Tripura, the three cities or worlds (heaven, earth, and underworld), symbolizing her omnipresence.
Maha Kameshvari: She is called Maha Kameshvari, the great goddess of desire, representing her power to fulfill desires and bestow liberation.
Parabrahman: Lalitha is equated with Parabrahman, the supreme Brahman, indicating her status as the ultimate reality.
Beyond Duality: The Bhavanopanishad describes Lalitha as beyond duality, transcending human concepts of good and evil, male and female, and existence and non-existence.
Embodiment of Knowledge: She is revered as the embodiment of knowledge, wisdom, and enlightenment.
The Bhavanopanishad presents Lalitha Mahatripurasundari as the supreme goddess, encompassing all aspects of existence, and offers a framework for spiritual growth, self-realization, and liberation.
In this context, Lalitha refers to the goddess Lalitha Mahatripurasundari, who is considered the supreme goddess in Hinduism. The phrase is often used to signify that the ultimate reality is not something external, but rather it is the Self, the consciousness within us.
Lalitha Mahatripurasundari is a revered goddess in Hinduism, particularly in the Shakta tradition. She is considered the supreme goddess, embodiment of cosmic energy, and the ultimate reality.
Lalitha is often depicted as a radiant, beautiful woman with four arms, seated on a throne, surrounded by gods and goddesses. Her name means:
“Lalitha” – playful, charming, or delightful
“Maha” – great
“Tripura” – three cities or worlds (heaven, earth, and underworld)
“Sundari” – beautiful woman
She is worshipped as the goddess of:
Cosmic energy and power
Creation, preservation, and destruction
Knowledge, wisdom, and enlightenment
Beauty, grace, and charm
Protection and liberation
Lalitha Mahatripurasundari is often invoked through the Lalitha Sahasranama, a sacred text containing 1,000 names and attributes of the goddess.
ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் “ஆடிப்பூரம்’ என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம்.
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு.
உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.
ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக் கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.
ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.
எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள்.
அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம்.
உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது.
பல அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கபடுகின்றது.
அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம். @highlight #அம்பிகையின் #வைபோகம் #ஆடி #பூரம்
தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹாசக்திகளை முழுமையாக உணரமுடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது.
செல்வம் –அஷ்டமாசித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.
ஓர் ஊரில் மாபெரும் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் அவரிடம் பலர் அறிவுரை கேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளியமுறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் “நானே” காரணம் என்றார். ‘நான்’ என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.
மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்கவைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.
தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.
மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.
புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள்.
பகுளாமுகி: பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.
திரிபுரசுந்தரி: பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.
தாரா: நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.
கமலாத்மிகா:தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழவலம் வரும் நாயகி கமலாத்மிகா.
காளி: கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.
சின்னமஸ்தா: தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.
தூமாவதி: கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும்கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.
#திரிபுரபைரவி: பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.
தசமஹாவித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜயதசமி வரை இவர்களே வணங்கப் படுகிறார்கள்.
வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாட படுவதாகசொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?
உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹாசக்தியின் அம்சம் உண்டு. மஹாசக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள்.
மஹாசக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ரசாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவிமஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.
மஹாசக்திகளின் தொடர்புகொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேதசாஸ்திரம், தந்த்ரசாஸ்திரம், தேவிபாகவதம், தேவிமஹாத்மியம் மற்றும் லலிதாசஹஸ்ரநாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளியவடிவமே இது.
தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இது போல வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இந்த நவதானியங்களில் அரிசி, கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யா வாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின் மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தசமஹாவித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு.
ஆதிசங்கராச்சாரியார் இதைதொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் ‘கன்கல்’ என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.
லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீசக்ரத்தில் அமைந்திருக்கும் மஹாசக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்து கொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹாசக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்து வித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்.
எத்தனை தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அம்பிகையினை குறிப்பிடும் பொழுது ‘#லோகமாதா’ என்றே குறிப்பிடுவர்.
அம்பாளுக்கு இந்த வளையல் அணிவிப்பது அவரவர் சந்ததியினரை நன்கு காக்கும். தீமைகளை விலக்கி விடும் என்பது ஐதீகம்.
லலிதா என்றால் ‘விளையாடுபவள்’ என்று பொருள்படும். ஆம் இந்த உலகில் அன்னை லோக மாதா நம் அம்மாதானே. அவ்வன்னையின் குழந்தைகள் நாம்.
நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக, சகல நன்மைகளையும் நம் அன்னையிடம் பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம்.
லலிதாசகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 வது பிரிவாக #லலிதோபகன்யா என்று வருகின்றது. அகத்திய மாமுனிவருக்கும் ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் சம்பாஷனையாக இடம் பெற்றுள்ளது.
ஹயக்கிரீவர் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர் அகத்தியரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறுகின்றனர்.
பஞ்சதசாக்ஷரிஎன ஒன்று படும் #ஸ்ரீயந்த்ரம், #ஸ்ரீவித்யா, #லலிதாம்பிகா, #ஸ்ரீகுரு மற்றும் தேவியை உபசரிக்கும், தேவியின் பணிகளைச் செய்யும் மற்ற தெய்வங்கள் தேவதைகளைப்பற்றி கூறுகின்றார். இத்தனையும் கூறினாலும் #ஹயக்கிரீவர் #அகத்தியரிடம் #லலிதா #சகஸ்ரநாமத்தினைப் பற்றி கூறவில்லை.
அகத்திய மாமுனி பலமுறை ஹயக்கிரீவரிடம் கேட்ட பிறகே ஹயக்கிரீவர் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைப் பற்றிச் சொல்கின்றார். இதிலிருந்தே இந்த ஆயிரம் நாமங்களின் புனிதத்தினை நாம் உணரலாம் அல்லவா.
ஒரு சமயம் லலிதாம்பிகை வசினீ மற்றும் வாக்கு தேவதைகளை நோக்கி ‘நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றேன். யார் யார் ஸ்ரீ சக்ரம், ஸ்ரீ வித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர்கள் என்னைப் பற்றிக் கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனைச் சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார்.
அதன்படி வசினீ உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர்.
ஒரு நாள் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். இது கணக்கற்ற பரம்மாக்களும், கணக்கற்ற விஷ்ணுக்களும், கணக்கற்ற ருத்ரர்களும் மந்திரினி, தண்டினி போன்ற தேவதைகளும் அம்பிகையை கண்டு வணங்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதன் பின்னர் லலிதாம்பிகை வசினீ உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தினை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள்.
கைகளையும் கூப்பி அவர்கள் லலிதா சகஸ்ரநாமத்தினைக் கூற அனைவரும் தெய்வ அருளில் நனைந்தனர். லோக மாத மனம் குளிர்ந்து கூறினாள்.
‘ குழந்தைகளே, வசினீ உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனை படிப்பவர்கள் என்னை அடைந்து அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்றார்.
இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்திவாய்ந்த ஸ்லோகமாக பல தீமைகளை நீக்க, நன்மைகளைப்பெற வேண்டும் வழிபாட்டு முறையாக பின் பற்றப்படுகின்றது.
பக்தியோடு இதனைச் சொல்ல நோய் நீங்கும். லலிதா என்றால் அழகு என்றும் பொருள்படும். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ‘ஸ்ரீ வித்யா’ எனப்படும். ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவினுள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிடமுடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும்.
உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகைதான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ‘ஸ்ரீ’ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது ஸ்ரீவித்யா. பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான். மந்த்ர, யந்த்ர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும், ஸ்ரீ வித்தையும் ஒன்றே.
லலிதாம்பிகையின் வழிபாட்டினை பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் என எந்த முறையிலும் வழிபடலாம். இல்லற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம்.
துறவற வழியில் இருப்பவர்களும் வழிபடலாம். எல்லா வழியும் அம்பிகையின் வழிதான். அம்பிகையும் எவ்வழியிலும் செய்யும் வழிபாட்டினை ஏற்றுக் கொள்கின்றன. மனித உடலில் குண்டலினி சக்திதான் மிகவும் உயர்ந்தது. லலிதா சகஸ்ரநாமம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களையும் குண்டலினி சக்தியினையும் கூறுகின்றது.
லலிதாம்பிகை சிவ சக்தி ஒன்றாய் இணைந்தவள் ’லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவினையும் படிக்க அரிய ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். லலிதா சகஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தின் மேலும் கூறும் பொழுது
லலிதாசகஸ்ரநாமம் சொல்வது லலிதாம்பிகைக்கு மிகவும் பிடித்தமானது. வேதத்திலும், தந்திரத்திலும் இதற்கு நிகரானது இல்லை.
இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும்.
சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது.
அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன.
வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை.
பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள்.
இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.
லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது.
ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் –
ஸ்ரீமாதாவின் அவதாரம் :-
கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)
பண்டாசுர வதம் மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)
குண்டலினீ ரூபம்
பக்த அனுக்ரஹம்
நிர்க்குண உபாசனை
சகுண உபாசனை
பஞ்சப்ரஹ்ம ரூபம்
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்
பீடங்களும், அங்க தேவதைகளும்
யோகினீ தியானம்
விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்
சிவசக்தி ஐக்கியம்
தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள்.
இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா சகஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது.
பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள். பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்!
த³ராந்தோ³லித-தீ³ர்கா⁴க்ஷீ – சிறிதே சலிப்புடன் கூடிய நீண்ட கண்களையுடையவள்.
நிஜாருண ப்ரபா⁴பூர மஜ்ஜத் ப்³ரஹ்மாண்ட³ மண்ட³லா – தன் சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்கச் செய்பவள்.
நக²தீ³தி⁴தி ஸஞ்ச²ன்ன நமஜ்ஜன தமோகு³ணா – தன் கால் நகங்களின் ஒளியால் வணங்குவோர் அகத்திலுள்ள இருட்குணங்களை அகற்றுபவள்.
ச்’ருதி-ஸீமந்த-ஸிந்தூ³ரீக்ருத-பாதாப்³ஜ-தூ⁴லிகா – அவள் பாதகமலத்தின் தூசியே வேத மங்கையின் வகிட்டில் விளங்கும் குங்குமம்.
ஸகலாக³ம-ஸந்தோ³ஹ-சு’க்தி-ஸம்புட-மௌக்திகா – அனைத்து ஆகமங்களாகிய சிப்பிகளுக்கும் உள்ளிருக்கும் நன்முத்து அவள்.
உன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-பு⁴வனாவலி – தன் கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவள்.
வாருணீ மத³ விஹ்வலா – வாருணீ என்ற மதுவால் மெய்மறந்தவள்,
மத³ கூ⁴ர்ணித ரக்தாக்ஷீ – மதுவின் களிப்பால் சுழலும் சிவந்த கண்களையுடையவள்,
தாம்பூ³ல-பூரித-முகீ² – தாம்பூலத்தால் நிறைந்த உதடுகளுடையவள்.
கலாநிதி⁴: – கலைகளின் இருப்பிடமானவள்,
காவ்யகலா – காவியங்களின் கலையாயிருப்பவள்,
ரஸக்ஞா – ரஸத்தை அறிந்தவள்,
கலாலாபா – கலைகளில் மகிழ்பவள்,
கலாமாலா – கலைகளை மாலையாகத் தரித்தவள்.
வீரகோ³ஷ்டிப்ரியா – வீரர்களின் குழுக்களை விரும்புகள்,
வீரா – வீராங்கனை,
வீரமாதா – வீரர்களின் தாய்,
ஜயத்ஸேனா – வெல்லும் சேனைகளை உடையவள்.
தத்துவ அளவில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப் பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம்.
நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள்,
த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள்,
ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே.
இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும். அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.
வேத நெறியிலிருந்து உதித்துப் பல திசைகளில் பாய்ந்தோடும் நதிகள் போன்ற சமயங்களின் சங்கம ஸ்தானமாக சமுத்திரமாக சக்தி வழிபாடும், ஸ்ரீவித்தையும் திகழ்கின்றன.
சமயவாதத்தினால் பிரிந்து போகும் மார்க்கங்களை தத்துவரீதியாக, ஆன்மீக ரீதியாக ஒன்றுபடுத்தும் இடமாக சக்தி தத்துவம் இருக்கிறது.
நதி உண்ட கடலெனச் சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே!!
என்று தாயுமானவர் தன் “மலைவளர்காதலி”யில் பாடுவது இதைத் தான் போலும்!
ஸதாசி’வா, அனுக்³ரஹதா – அருள்பவள், ஸதாசிவ வடிவானவள் என்று ஐந்தொழில் புரியும் தேவதா ரூபமாகவும் தேவியை லலிதா சகஸ்ரநாமம் போற்றுகிறது.
கராங்கு³லி-நகோ²த்பன்ன-நாராயண-த³சா’க்ருதி: – நாராயணனின் பத்து அவதாரங்களையும் தன் பத்து கைவிரல்களின் அசைவால் தோற்றுவிப்பவள் என்பது ஒரு நாமம்.
பஞ்ச-ப்ரேதாஸனாஸீனா – ஐந்து பிரேதங்களால் ஆன ஆசனத்தில் அமர்பவள் என்பது ஒரு நாமம். சக்தியின் உயிர்ப்பு இல்லையேல் தேவதைகளும் பிரேதங்கள் போல் ஆகிவிடுவார்கள் என்பது உட்கருத்து. ப்ரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன் ஆகிய தேவதைகள் சிம்மாசனத்தின் கால்களாக அமர்ந்திருக்க அதன்மீது திரிபுரசுந்தரி ஆரோகணித்திருப்பது போன்று தீட்டப்படும் சித்திரம் இந்த உட்கருத்தையே குறிக்கிறது.
’சச்சிதானந்தமாகிய மரத்தின் கிளைகளில் எண்ணற்ற ராமர்களும், கிருஷ்ணர்களும், புத்தர்களும் கனிகளாகத் தொங்குகிறார்கள்’ என்பது ஸ்ரீராமகிருஷ்ணர் வாக்கு.
’ஆற்றங்கரை மணல் துகள்களை எண்ணிவிடலாம்; அவதாரங்களை எண்ணமுடியாது’ என்று புராண உபதேசம்.
மேற்கண்ட நாமங்களை இந்த உபதேசங்களின் பின்னணியில் வைத்து தத்துவார்த்த ரீதியாக சிந்திக்கவேண்டுமே அன்றி அவற்றிற்கு நேர்ப்பொருள் கொள்ளலாகாது.
ஆப்³ரஹ்ம-கீட-ஜனனீ என்ற நாமத்திற்கு அடுத்ததாக, வர்ணாச்’ரம விதாயினீ (வர்ணாசிரமங்களை வகுத்தவள்) என்ற திருநாமம் வருகிறது.
இதை வைத்து வர்ணாசிரம கட்டுப்பாடுகளை சக்தி உபாசனா மார்க்கம் ஆதரிக்கிறது என்று வியாக்யானம் சொல்வது சரியானதாக இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.
ஸர்வ வர்ணாதி⁴காராச்ச நாரீணாம் யோக்³ய ஏவ ச – லலிதா சகஸ்ரநாமமும், தேவி உபாசனையும், சாஸ்திரோக்தமாகவே பெண்களுக்கும், எல்லா வர்ணத்தினருக்கும் உரியதாகக் கூறப்பட்டிருக்கிறது.
ஆபா³லகோ³ப விதிதா – சிறுகுழந்தைகளும், இடையர்களும் உட்பட எல்லோராலும் அறியப் படுபவள் என்ற திருநாமத்தின் உட்பொருளும் இதனுடன் இணைத்துக் காணத் தக்கது.
வர்ணாசிரம விதாயினீ என்பதன் உண்மையான பொருள் எல்லா வர்ணத்தினரும் ஜகதீஸ்வரியாகிய மகா சக்தியின் பிரதிபிம்பங்களே என்பதேயாகும். சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் –
O India.. Forget not that thy social order is but the reflex of the Infinite Universal Motherhood; forget not that the lower classes, the ignorant, the poor, the illiterate, the cobbler, the sweeper, are thy flesh and blood, thy brothers.
தத்துவங்களின் பெருவெளியாக லலிதா சகஸ்ரநாமம் இருக்கிறது.
மூலப்ரக்ருதி என்னும் ஆதி இயற்கை வடிவானவள் – மூலப்ரக்ருதி:. இந்த ஆதி இயற்கை வெளிப்பட்டும், வெளிப்படாமலும் உள்ளது.
வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி. வெளிப்படும் பேரியற்கை எங்கும் வியாபித்தும் (வ்யாபினீ), பல்வேறு வடிவாகவும் (விவிதா⁴காரா) உள்ளது.
இந்த ஆதி இயற்கையை யாராலும் முழுமையாக அறிந்து விட முடியாது. அதற்கு பிரக்ஞை என்னும் முழுமை அறிவு தேவைப் படுகிறது, அந்த அறிவு வடிவானவள் – ப்ரக்ஞான-கன-ரூபிணீ. இது சாங்கிய தரிசனம்.
அந்த முழுமை அறிவு அனுபூதியில் கைகூடும்போது, அறிபவன்,அறிவு,அறியப்படும் பொருள் அனைத்தும் ஒன்றாக ஆகி விடுகிறது – த்⁴யான த்⁴யாத்ரு த்⁴யேய ரூபா.
தர்மம், அதர்மம் போன்ற இருமை நிலைகள் நீங்கி விடுகின்றன – த⁴ர்மாத⁴ர்ம விவர்ஜிதா. இது வேதாந்த தரிசனம்.
பசு’பாச’ விமோசனி – பசுக்களாகிய ஜீவர்களின் பாசம் என்னும் தளையை விடுவிப்பவள்.
சி’வஞான ப்ரதா³யினி – சிவஞானத்தை அளிப்பவள். இது சைவ சித்தாந்தம.
தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன!
அதுவே லலிதா சகஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம். இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது.
பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிற்து.
என்ன செய்கிறேன்? எப்படி ஒருவன் சிந்தித்து, தர்க்கித்து அப்படி ஒரு பெயரை உருவாக்க முடியும்? வானத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்து நீர்த்தடாகத்தில் நீலத் தாமரையாக மறுநாள் பூத்தெழுவது போல அது வரவேண்டும். மேகச் சுவர்களைப் பிளந்து மின்னல் சாணிக்குழிக்குள் விழுந்து தங்கத்தூணாக மாறுவது போல வரவேண்டும்… அந்தப் பாறைமீது, தனிமையில். வானம் மோனத்தில் மூழ்கியிருக்கும் நிலவு நாளில். அவள் முகத்தை நினைத்தபடியே இருக்கவேண்டும். அவளையன்றி வேறு எதையும் மனம் தீண்டாத ஒருமை கூடவேண்டும்.
மனப்பொந்திலிருந்து மின்மினிகள் கிளம்புவது போல ஒருவேளை என்னிலிருந்து அப்போது பெயர்கள் பீரிட்டெழக் கூடும்.
ஆயிரம் பெயர்கள். சகஸ்ரநாமம். லலிதா சகஸ்ரநாமம் எழுதியவன் அப்படித் தான் அடைந்திருப்பான்.
ஒவ்வொரு பெயரும் பிரிவில் பிரதிபலிக்கும் ஆயிரம் பெயர்கள். அவை கணந்தோறும் கலந்து பிறக்கும் கோடானுகோடிப் பெயர்கள். அப்பெயர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகும் ஒரு பெயர். அப்பெயரில் இல்லாத எதுவுமே எங்குமில்லை. அப்படிப் பட்ட பெயர். அது தான் அவள் பெயர்…
நாராயாண பட்டத்திரி நாம் எல்லாம் அறிந்த ஒருவர். ஆம்!, குருவாயுரப்பனை போற்றி ஸ்ரீ நாராயணீயம் எழுதியவர் தான்.
அவர் எழுதிய நாராயணீயத்தை குருவாயூர் கிருஷ்ணனே ஆமோதித்து அவரது ரோகத்தையும் தீர்த்த வரலாறு எல்லோரும் அறிந்ததே.
மஹாமேரு
பட்டத்திரி நாராயணீயம் எழுதிப் பலகாலம் கழிந்த பிறகும் மனச் சாந்தியில்லாது தத்தளித்த காலகட்டத்தில் ஸ்ரீ குருவாயுரப்பனே அவர் கனவில் தோன்றி முக்திஸ்தலம் என்னும் க்ஷேத்திரத்தில் இருக்கும் ஸ்ரீ துர்க்கையை தரிசித்து ஸ்தோத்திரம் செய்தால் மனசாந்தி கிடைக்கும் என்று கூறினாராம். அதன்படி, தற்போது முக்கோளக்கா என்றழைக்கப்படும் இடம் சென்று துர்க்கையின் ஸ்ரீபாதார விந்தங்களை “ஸ்ரீபாத ஸப்ததி” என்கிற 70 ஸ்லோகங்களை பாடி பிரார்த்தித்து மனநிறைவினையும் அங்கேயே முக்தியையும் பெற்றதாக தெரிகிறது. இவ்வாறாக பத்யம் என்று கூறப்படும் இலக்கிய கட்டுப்பாடிற்கு உட்பட்ட வகையில் 70 ஸ்லோகங்கள் மிக அருமையாக எழுதி அன்னையின் அருளில் அவர் மூழ்கியிருக்கிறார்.
அதாவது, நாராயணீயத்தை இயற்றிய நாராயண பட்டத்ரிக்கு பாகவதத்தின் சாரமாக நாராயணீயத்தைத் தான் இயற்றிவிட்டதாக சிறு கர்வம் ஏற்பட்டது. மன நிம்மதியை இழந்தார். பகவான் அவரது கனவில் தோன்றி முக்திபுரியில் (மலையாளத்தில் முக்கோலக்கல்) இருக்கும் பவானியின் கோவிலுக்குச் செல் என்று கூற, முக்திபுரியில் உள்ள முக்கோல தேவியின் கோவிலுக்குச் சென்றார். அப்போது அவர் முக்கோலக தேவியை வழிபட்டு, தேவியின்மீது ஸ்லோகத்தை எழுதத் தொடங்கினார். எழுபது ஸ்லோகங்கள் எழுதி முடித்துவிட்ட நிலையிலும் அவரால் தேவியின் திருப்பாதங்களைப் பற்றி மட்டுமே சொல்ல முடிந்திருந்தது. அதற்குமேல் எழுத வரவில்லை. அப்போது, தாம் இயற்றியதெல்லாம் பகவானின் திருவருளால்தான் என்பதை அவர் உணர்ந்தார். மிகுந்த மன நிம்மதியும் அடைந்தார்.
பின்னர், தேவியைத் துதித்து, தம் இறுதிக் காலம் வரை அங்கேயே கழித்தார். ‘ஸ்ரீபாத ஸப்ததி’ என்ற தேவியின் புகழ் பாடும் அந்த ஸ்லோகம் தான் அவர் கடைசியாக எழுதியது. ஒரு நாள் தேவியைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியதும் நிம்மதியாக பகவானின் திருவடியை அடைந்தார்.
பத்யம் என்றால் நான்கு வரிகளைக் கொண்டது என்று பொருள். இந்த ஸ்லோகங்களில் வார்த்தைகள் யோகரூடம் என்னும் முறையில் உள்ளது. அதாவது வார்த்தைக்கு இரு முறையான அர்த்தங்களைத் தரும் சொற்களை யோகரூடம் என்று சொல்வது வழக்கம்.
அடியேன் முக்தி ஸ்தலத்தில்
இந்த 70 ஸ்லோகங்களில் அன்னை பராசக்தியின் பாத வர்ணனை, நகங்களது சோபை, இந்திராதி தேவர்கள், ஆதி-சேஷன் பூஜித்த மஹிமை, மகிஷாசுர, சும்ப-நிசும்ப வதங்கள், ஹிமாசலத்தில் பால-லீலைகள், அன்னையின் திருமணக்கோலம், பக்த வாத்ஸல்யம் போன்றவற்றை அனுபவித்துப் பாடியிருக்கிறார்.
ஸ்ரீ பாத பக்தியானது சரணமடைந்தவர்களிடத்து மிகுந்த கருணையுடன் ஆட்கொண்டு மோக்ஷ சாம்ராஜ்யத்தையே தரவல்லது. இந்த ஸ்லோகங்களைப் படிக்கையில் பல செளந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் மனதில் தோன்றக் கூடும். அப்படிப்பட்ட ஸ்ரீபாதத்தைப் போற்றிய ஸப்ததியிலிருந்து சில ஸ்லோகங்களை மட்டும் இன்று காணலாம்.
பகவதியே!, குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன் உன் பாத நகங்களாக இருந்து கொண்டு உன் பாதங்களைப் பஜித்ததால் தன் குல விருத்தியை அடைந்தான். சந்திரன் பாதங்களை பஜித்ததால் அவன் உன் சிரசிலும் இருக்கிறான், மற்றும் உனது நெற்றியாகவும், கன்னங்களாகவும் தெரிகிறான். அவர்கள் பாக்கியசாலிகள். அதாவது பாதத்தை பூஜித்ததால் சந்திரனது சந்ததிகளுக்கு பிற்காலத்தில் அன்னையின் சிரசிலும், நெற்றியிலும், கன்னங்களிலும் வாசம் செய்யும் பேறு கிட்டியது என்கிறார்.
முக்தி-க்ஷேத்திரத்தில் வசிக்கும் தேவியான ஈஸ்வரியே!, உன் பாதார-விந்தங்களை சேவிப்பதால் ராகத்-வேஷம் நீங்கிவிடும் என்று ஜனங்கள் கூறுகிறார்கள். ஆனால் உன்னுடைய சரீரமே பார்ப்பவர்களுக்கு மன மயக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அதைவிட சிறந்த சிவப்பு நிறமுடைய (ராகம் = சிவப்பு) உன்பாதங்களிடத்து உன் சரீரமே துவேஷத்தைக் கொண்டும் இருக்கிறது. சரீரத்திலேயே ராகம், துவேஷம் ஆகியவற்றை வைத்திருக்கும் உன்னை நமஸ்கரிப்பவர்களுக்கு இந்த இரண்டிலுமிருந்து எவ்வாறு விடுதலை கிடைக்கும் என்று நிந்தா ஸ்துதியாக சொல்கிறார். அன்னையின் பாதங்கள் இவ்விரண்டையும் போக்கவல்லது என்பதை இவ்வாறு கூறியிருக்கிறார். இதே கருத்துடைய ஸ்லோகம் மூக-பஞ்சசதீயிலும் காணலாம். த்ரைலோக்யம் வசயந்தி பாபபட லீமுச்சாடயந்த்யுச்சகைர் வித்வேஷ ஜனயந்த்ய தர்மவிஷயே ப்ரஸ்தம்பயந்த்யாபதம் ஆகர்ஷந்த்யபி வாஞ்சிதானி மஹிஷஸ்வர்வைரிணோ மாரணாஸ் சித்ரம் த்வத்பதஸித்த சூர்ணநிவஹ: ஷட்கர்மணாம் ஸாதகா:
அம்பிகே!, உன் திருவடித்துளியை (அம்பாளின் பாத தூளி பற்றி செளந்தர்ய லஹரியிலும் பார்த்திருக்கிறோம்) சிரசில் தரிக்கும் பக்தர்கள் ஆறு கர்மங்களையும் சாதித்துவிடுகின்றனர். ஆறு கர்மங்களாவது, வச்யம், உச்சாடனம் (இது மந்திர உச்சாடனம் என்ற பொருளில் அல்ல, விரட்டுவது என்னும் பொருளில், அதாவது கெட்டவற்றை விலக்குவது/விரட்டுவது என்று கொள்ள வேண்டும்), வித்வேஷணம் (வெறுப்பினை உருவாக்குவது), ஸ்தம்பனம் (ஸ்தம்பிக்க வைப்பது), ஆகர்ஷணம், மாரணம் (மரணம்) என்பவை. இதே போல மூகரும் அன்னை காமாக்ஷியை நமஸ்கரித்தலால் கிடைக்கும் மந்திரார்த்தங்களைப் பாடியிருக்கிறார்.
அம்பிகே!, உன் திருவடித்துளியை (அம்பாளின் பாத தூளி பற்றி செளந்தர்ய லஹரியிலும் பார்த்திருக்கிறோம்) சிரசில் தரிக்கும் பக்தர்கள் ஆறு கர்மங்களையும் சாதித்துவிடுகின்றனர். ஆறு கர்மங்களாவது, வச்யம், உச்சாடனம் (இது மந்திர உச்சாடனம் என்ற பொருளில் அல்ல, விரட்டுவது என்னும் பொருளில், அதாவது கெட்டவற்றை விலக்குவது/விரட்டுவது என்று கொள்ள வேண்டும்), வித்வேஷணம் (வெறுப்பினை உருவாக்குவது), ஸ்தம்பனம் (ஸ்தம்பிக்க வைப்பது), ஆகர்ஷணம், மாரணம் (மரணம்) என்பவை. இதே போல மூகரும் அன்னை காமாக்ஷியை நமஸ்கரித்தலால் கிடைக்கும் மந்திரார்த்தங்களைப் பாடியிருக்கிறார்.
நாமும் இந்த நன்னாளில் அன்னையின் பாதாரவிந்தங்களில் வணங்கி அவள் அருளைப் பெறுவோமாக.
எனது முகநூல் ஆல்பத்தில் 70ஸ்லோகங்களையும் அர்த்தத்துடன் காணலாம்.
ஆதி சங்கரர் அமர்ந்து தியானித்த ஸ்தலம்.
பாரத தேசம் முழுவதும் பயணம் மேற்கொண்ட ஸ்ரீ ஆதிசங்கரர், அப்போது காடாக இருந்த இந்த இடத்திற்கு வந்த போது ஒரு ருத்ராட்ச சிலையிலிருந்து இறை ஒளி பரவுவதைக் கண்டார். அந்த இடத்திலேயே அமர்ந்து அந்த ஒளியைக் குறித்து தியானம் செய்ய அந்த ஒளி பராசக்தியாக காட்சி தர, அந்த அம்பிகையை சிலாரூபத்தில் அமர்ந்து அருள்புரிய வேண்டினார். அந்த அம்பிகையே சுயம்புவாக மேல்காவு பகவதி என்ற பெயரில் விளங்குகிறாள்.
அந்த ஒளி மீண்டும் வளர, ஆதிசங்கரர் மீண்டும் தியானத்தில் அமர்ந்தார். இப்போது ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி காட்சி தர, அந்த அம்பிகை இன்று கீழக்காவு என்ற இடத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். இவ்வாறே மீண்டும் ஒளியைக் கண்ட ஆதிசங்கரர் அந்த சக்தியை மஹா காளியாக உணர்ந்து, மேலக்காவின் மேற்கில் கன்னேன்காவு என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்தார். பின்னர் சிவன், விஷ்ணு,ஐயப்பன் வடிவங்களை அந்த சிலையைச் சுற்றி பிரதிஷ்டை செய்தார். இவர்களே ரக்தேஸ்வர சிவன், கோலஞ்சேரி நரசிம்மர், மற்றும் கருவட்டா சாஸ்தா ஆகியோராகும்.
மேலக்காவில் ஸ்ரீ ஆதி சங்கரர் தியானம் செய்த இடத்தில் இன்று அவருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது. ஸ்ரீ பட்டத்ரி சுவர்க்கம் சென்ற இடத்தில் ஒரு மேடை மீது அவருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது. மேல்காவில் உள்ள பகவதியே மூக்குத்தலா பகவதியாகும்.
மற்ற திருக்கோயில்களில் உள்ள திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுவதில்லை. தினமும் பூஜைகளும் இல்லை. அபிஷேகமும் நிவேதனமும் மட்டுமே செய்யப்படுகிறது. வருடத்தில் ஒரு நாள் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று மட்டுமே பெரிய அளவில் பூஜைகள் நடைபெறும். வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் அந்த பூஜையில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வேதம் ஓதுவது ஒரு பிரார்த்தனையாக இத்திருக்கோயிலில் செய்யப்படுகிறது. திருமணம் ஆகவும், வாழ்வில் வளம் பெறவும், நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவும் அம்பிகையை பக்தர்கள் பிரார்த்திக்கிறார்கள். கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் பல ஞானியர் இத்திருக்கோயிலில் அம்பிகையை வழிபட்டு அவள் அருள் பெற்றவர்களாவர்.
ஹிந்து தர்மத்தில் மிக நீண்டகாலமாகப் போற்றப்படும் பழம்பெரும் வழிபாடுகளுள் ஸ்ரீருத்ரவழிபாடும் முதன்மையானது. வேதங்களிலும், மஹாபாரதம், இராமாயணம் முதலாய இதிஹாசங்களிலும் சிவபெருமானே ஸ்ரீருத்திரர் என்று கூறப்படுகிறார். ருத்திரசேனைக்கு அவர் தலைவராக இருப்பதால், மஹாருத்திரர் என்றும் குறிப்பிடப்படுகிறார். பொதுவாகவே, ருத்ரர் என்ற சொல் சிவப்பரம்பொருளையே குறிப்பதாயினும், அது பலருக்கும், பல குழுக்களுக்கும் பெயராக இருந்துள்ளமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
சைவாகமங்களிலும் சைவசித்தாந்தமரபிலும், பரசிவத்திலிருந்து தோன்றியவர்களே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐம்பெரும் மூர்த்திகள் இவர்களே முறையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையும் ஆற்றுவதாயும் சித்தாந்தவிளக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், சைவதந்த்ரங்கள் இந்த உலகம் காலாக்னி ருத்ரரினின்று தோன்றியதாயும், இறுதியில் அவரிலேயே ஒடுங்கும் என்றும் குறிப்பிடுவதாயும் தெரிகின்றது.
ஒருவரா..? பதினொருவரா..? பலரா..?
சிவபுராணங்களில், பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு பிரம்மனுக்கு உதவியாக இருப்பதற்காக சிவபெருமான் பிரம்மாவின் நெற்றியிலிருந்து ருத்திரர்களைப் படைத்ததாக கூறுகின்றன. இவ்வாறு தோன்றியவர்கள் “ஏகாதசருத்ரர்கள்” என்ற பதினொரு பேராவர். சாக்ததந்திரங்களில் இந்த ருத்ரர்கள் மஹாசக்தியின் காவல் தேவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இந்த வகையில் ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரியின் ஸ்ரீசிந்தாமணி கிரகத்தைக் காவல் புரியும் எண்ணில்லாத ருத்ரர்கள் பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது.
வேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர். உருத்திரர் என்பது தமிழா? சம்ஸ்கிருதச்சொல்லா..? என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர்.
இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற நாமம் உண்டானது. முன்பு இருந்து மறைந்ததாக கருதப்படும் ‘லெமூரியா’ என்ற கடல் கொண்ட தமிழ்மண்ணில் வாழ்ந்த பலருக்கும் நெற்றிக்கண் இருந்தது என்றும் அவர்களே ‘உருத்திரர்’ எனப்பட்டனர் என்றும் கூட, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
வடமொழியில் ருத்ரன் என்றால், ‘அழச்செய்பவன்’ என்பது பொருளாகும். யாரை..? என்ற வினா எழும்புகிற போது, தீயவர்களை என்று குறிப்பிடுவர். இதைவிட, ருத்ரன் என்பவன் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் குறிப்பிடுவர். இதனைக் கந்தபுராணம்
இன்னலங்கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால் உன்னரும் பரமமூர்த்தி உருத்திரனெனும் பேர் பெற்றான் என்கிறது.
பதினொரு ருத்ரர்
ஒரு சமயம் பிரமனால், படைப்புத்தொழிலைச் செய்ய இயலாது போயிற்று. அவன் சோர்ந்து விழுந்து இறந்த போது, அவனது உடல், பரசிவனருளால் பதினொரு கூறாகி எழுந்ததென்றும் அப்பதினொரு கூறுமே ஏகாதச ருத்ரர்கள் என்று மத்ஸயபுராணம் குறிப்பிடுகின்றது.
வேறு நூல்களில் இந்த வரலாறு சிறிது வித்தியாசமாக சொல்லப்படுகிறது. பிரமனின் வேண்டுகோளின் படி சிவனால் பிரமனது நெற்றியிலிருந்து பதினொரு ருத்ரர் உருவாக்கப்பட்டனர். அவர்களினைக் கண்ட பிரமன் மயக்கமுற அவர்களே தாமே படைப்புத்தொழிலைச் செய்யத்தொடங்கினராம். ஓவ்வொரு ருத்திரரும் கோடி ருத்ரரைப் படைக்க, பிரமன் சோர்வு நீங்கி எழுந்த போது, அங்கே பதினொரு கோடி ருத்திரர்கள் காணப்பட்டனராம்.. இதனால், வெகுண்ட பிரமன் சிவனிடம் அழுது விண்ணப்பம் செய்தான்.
எனவே, சிவபெருமான் ருத்ரர்களை அழைத்து படைப்புத்தொழிலைத் தொடர வேண்டாம் என்று கட்டளையிட்டு, அவர்களுக்கென்று, புதிய உலகம் ஒன்றைப்படைத்து அங்கே சென்று வாழக்கட்டளையிட்டருளினார்.. இந்த ருத்ரர்கள் வழிபாடு செய்த லிங்கங்களை “ருத்ரகோடீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றார்கள்.
இந்த ருத்திரர்கள் தம் உலகிற்கு அப்பாலும் போர்த்தொழில் செய்யும் வீரர்களிடமும் அவர்களின் ஆயுதங்களிலும், அவர்களின் கோபத்திலும் வந்து தங்குவதாயும் குறிப்பிடப்படுகின்றது.
இவர்களுக்கு உருவம் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை. இவர்களை குறிக்க பதினொரு லிங்கங்களை அமைத்துப் பூஜிக்கும் வழக்கமே காணப்பட்டது. என்றாலும், காஞ்சி கைலாசநாதர் கோவிலில் “ஏகாதசருத்ரரின்” சிற்பங்கள் காணப்படுகின்றன.
இவர்களின் பெயர்கள் முறையே மஹாதேவன், ஹரன், ருத்ரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசானன், விஜயன், பீமதேவன், பவோத்பவன், கபாலி, சௌம்யன் என்பனவாகும்.
இவர்கள் வழிபட்ட லிங்கங்களில் முறையே தோமரம், கொடி, வாள், வஜ்ரம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டு, வில், மழு ஆகிய ஆயுதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகின்றது.
ஸ்ரீமத் பாகவதத்திலும் ருத்ரர்களின் வரலாறு சிறிது வித்தியாசமாகப் பேசப்பட்டிருக்கிறது. அவர்களின் பெயர்கள் அஜர், ஏகபாதர், அக்னிபுத்திரர், விரூபாட்சர், ரைவதர், ஹரர், பகுரூபர், த்ரியம்பகர், அசுரேசர், சாவித்ரர்,சயந்தர் என்பனவாகும்.
திருக்கச்சி ஏகம்பரைப் போற்றிய திருநாவுக்கரசர்
“விரைகொள் மலரவன் வசுக்கள் “ஏகாதசர்கள்” வேறுடைய இரைக்கும் அமிர்தக்கரிய ஒண்ணா எங்கள் ஏகம்பனே”
என்று பாடுவதால், ஏகம்பரை ஏகாதசருத்திரர்கள் போற்றி வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகின்றது
சதம் என்றால் நூறு. இந்தவகையில் எண்திசையிலும், ஆகாயத்திலும், பாதாளத்திலுமாக திசைக்குப் பத்துப்பேராக விரிந்து நிற்கும் நூறு ருத்திரர்களை “சதருத்ரர்கள்” என்று குறிப்பிடுகின்றனர். இந்த நூற்றுவரின் பெயர்களும் பல நூல்களில் காணப்படுகின்றன. வேதங்களும் இவர்களைப் போற்றுகின்றன. இவர்கள் கடல் மீதும் ஆகாயத்திலும் பயணம் செய்ய வல்லவர்கள். மான், மழு தரித்தவர்கள், சிவனைப் போன்ற உருவத்தினர் என்று பலவாறாக கருதப்படுகின்றது.
வேதங்களில் இந்திரன் முதலியவர்களைப் பற்றிக்குறிப்பிடும் போது, நம: என்ற சொல் பெயருக்குப் பின்னே குறிப்பிடப்படுகின்றது. ஆனால், அதே வேதங்கள் ருத்ரரைக் குறிப்பிடும் போது முதலில் வணக்கமாகிய “நம:” என்று சொல்லி அதன் பின் நாமத்தைச் சொல்வதையும் அவதானிக்கலாம். ஆனால், இந்த வேதப்பகுதிகள் யாவும் மூலருத்ராகவும் ஸ்ரீருத்ரராகவும் விளங்கும் மஹாருத்ரரான சிவப்பரம்பொருளையே சுட்டும் என்பதே வைதீகசைவர்களின் நம்பிக்கை.
சிவனால், அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்டது பாசுபதாஸ்திரம், ஆனால், சிவனால் முருகனுக்கு வழங்கப்பெற்றது “ருத்ரபாசுபதாஸ்திரம்” என்ற மஹாஸ்திரம் என்று கந்தபுராணம் சொல்வதும் இங்கு சிந்திக்கத்தக்கது.
ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரஜெபமும்
திரயீவித்யா என்ற ரிக்,யஜூர், சாமம் என்ற மூன்று வேதங்களுக்கும் நடுவில் இருப்பது யஜூர்வேதம். அது சுக்லயஜூர்வேதம், கிருஷ்ணயஜூர்வேதம் என்று இரண்டு பிரிவாகிறது. அதில் கிருஷ்ண யஜூர்வேதத்தின் நடுவில் ஏழு காண்டங்கள் கொண்ட தைத்திரீய சம்ஹிதையில் நடுவிலுள்ள நான்காவது காண்டத்தில் ஐந்தாவது ப்ரச்சனமாக இருக்கிறது ஸ்ரீருத்ரம்.
இந்த ஸ்ரீருத்திரத்தில் 11 அனுவாகங்கள் உள்ளன. இது ஸ்ரீ ருத்ரம், மஹாருத்ரம், சதருத்ரீயம், நமகம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீ ருத்ரத்தின் நடுவில் சிவ நாமம் பதிந்திருப்பது அற்புதத்திலும் அற்புதமாகும்.
நீரில் நின்று கொண்டு ஸ்ரீ ருத்ரம் சொன்னால் மழை வர்ஷிக்கும் என்பது நம்பிக்கை. இதனை சிவலிங்க அபிஷேகத்திலும், சிவபூஜையிலும் தவறாமல் பயன்படுத்தி வருவார்கள்.
பலரும் இதனை தமிழில் மொழிபெயர்க்கவும், அதே போல, கவிநடையிலேயே தமிழ் வடிவம் பெறச்செய்யவும் முயன்று வந்திருக்கிறார்கள். சைவர்களின் முக்கியமான ஒரு பிரமாணமாகவே ஸ்ரீ ருத்ரத்தை நாம் தரிசிக்கலாம். திருநாவுக்கரசு நாயனார் பாடிய நின்ற திருத்தாண்டகமும் தமிழில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் என்று போற்றப்பட்டு வருகின்றது.
ருத்ர பாராயண கிரமத்தில், ஸ்ரீ ஏகாதசருத்ரீயம், ருத்ரஏகாதசீ, மஹாருத்ரம், அதிருத்ரம் என்கிற விசேடமான விரிவான பலர் கூடி பாராயணம் செய்யும் மரபுகளும் வைதீக சைவர்களின் வழக்கில் விரவிக்காணப்படுகின்றன. இப்போதெல்லாம் சிதம்பரம் முதலிய திருக்கோவில்களில் ஏகாதசருத்ரஹோமம் போன்றவை மிகவும் பிரபலமடைந்துள்ளன. இதற்கு காரணமாக உடனடியாக பலனும், சிவனருளும் கிடைப்பதாகச் சொல்லப்படுகின்றது.
பெரிய புராணத்தில் ‘உருத்திரபசுபதி நாயனார்’ என்பவரும் 63ல் ஒருவர். இவர் ருத்ரம் ஓதியே நாயனார்களில் ஒருவரானவர். அதைத் தவிர ஆலய வழிபாடுகளோ, அடியார் வழிபாடுகளோ கூட இவர் செய்ததாகச் சொல்லப்படவில்லை. ஆக, இவர் வரலாறு ருத்ரம் ஓதுதலில் சிறப்பை உணர்த்தவே பெரிய புராணத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ருத்ரவீணை, ருத்ரபிரியாகை, ருத்ரபர்வதம், ருத்ரரிஷி துர்வாஷர், சதுர்த்தசீ ருத்ரவிரதம் , ருத்ரபட்டம், ருத்ராக்னி, ருத்ரதீபம், போன்றவையும் ருத்ரம் சார்ந்து சிந்திக்க வேண்டியனவே.
ருத்ரர் வழிபாடு
ருத்ரமூர்த்திக்கு ஆலயங்கள் , சந்நதிகள் அமைந்திருப்பது மிகவும் குறைவு. என்றாலும் திருமாணிக்குளி பீமருத்ரர் ஆலயம் ருத்ரருக்கான ஆலயங்களில் பிரபலமானது. கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியில் அம்புஜாட்சி உடனாய வாமனபுரீஸ்வரராலயம் அமைந்துள்ளது.
இங்கு கருவறையின் முன்பு திரையிடப்பட்டு நீலவண்ணத்தாலான அத்திரையில் சிவப்பு வண்ண நூலால் ‘பீமசங்கரர்’ என்ற பீமருத்ரரின் திருவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். சிறப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடைய இந்த ருத்ரரின் திருவடிவம் அக்னிஜ்வாலையுடன் எட்டுக்கரங்களுடன் காணப்படுகின்றது. இக்கோவிலில் நடத்தப்படும் நான்கு கால பூஜைகளும் இந்த திரையிலுள்ள பீமருத்ரருக்கே நடத்தப்படுகின்றன. பூஜை முடிந்ததும் உள்ளே உள்ள சிவலிங்கத்திருமேனிக்கு தீபாராதனை மட்டுமே செய்யப்படுகிறது. இத்தகு புதுமையான வழிபாட்டிற்கு பல புராணக்கதைகளை அத்தலபுராணம் பேசுகிறது.
இதே போல, திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில் நாகநாதசுவாமி கோவிலில் பிரளயகாலருத்ரருக்கு திருவடிவம் அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. திருவெண்காட்டில் அகோரருத்ரருக்கு அழகான பெரிய வடிவம் உள்ளது. அதே போல, திருவண்ணாமலையில் காலாக்னிருத்ரர் சந்நதி இருக்கிறது. ஆனால், அம்மூர்த்தியை பைரவர் என்றே அழைத்து வழிபாடாற்றுவதாயும் தெரியவருகின்றது.
இதே போல, பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்டருத்ரருக்கும் திருக்கடவூரில் திருமாளிகைச்சுற்றில் திருவுருவங்கள் உள்ளதாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் அத்திருவடிவங்களின் மேல் அஷ்டவசுக்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதாயும் தெரியவருகிறது. ஆனால், சிலர் அஷ்டபைரவர்களையும் வேறு சிலர் சிவனுடைய ஆஷ்டு வித்யேஸ்வரரையுமே அஷ்ட ருத்ரராக கருதுகின்றனர். எனவே, இது தொடர்பில் ஆய்வுகள் நடைபெற வேண்டிய தேவையுள்ளது.
மயானத்தில் சிவபெருமான் ருத்ரதாண்டவம் செய்வதாக குறிப்பிடப்படுகிறது. இங்கே காட்டப்படும் மய என்பதற்கு உருவாக்குதல் என்றும், அயனம் என்பதற்கு தொடர்ந்து செல்லுதல் என்றும் பொருள். இதனை ஸ்மசானம் என்ற சொல்லால் குறிப்பது தவறு என்றும் பெரியவர்கள் காட்டுவர். இதனால், உருத்திரசமயிகளும் பாசுபதர்களும் தம் வழிபாட்டிடங்களை மாயானம் என்று சொன்னார்கள் என்றும் தெரிய வருகின்றது. கச்சிமயானம், திருக்கடவூர்மயானம், வீழிமயானம், காழிமயானம், நாலூர் மயானம் என்ற ஐந்து மயானங்கள் சிவவழிபாட்டாளர்களுக்கு முக்கியமானவையாக காட்டப்படுகின்றன.
இதே போல, ருத்ரவழிபாடுகள் ஈழத்தில் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இப்போது இல்லாதவிடத்தும், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஸ்தலங்களை அடுத்து ருத்ரமயானங்கள் அருகில் காணப்படுவதும், அருகிலேயே ஆலய தீர்த்தம் உள்ளதும், அங்கெல்லாம் ருத்ரவழிபாடு நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் என்ற ஊரில் மயானத்திற்கு மிக அண்மையாக, மயானத்தை நோக்கிய வண்ணம் பெரியதொரு சிவாலயம் இராஜகோபுரத்துடன் காணப்படுவதும், ருத்ரவழிபாட்டுடன் இணைத்து சிந்திக்க வைக்கிறது. இதனை விட, பிற்காலத்தில் இங்கிருந்த ருத்ரவழிபாடு பைரவ வழிபாட்டுடன் கலந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகின்றது.
ஆக, ருத்ரர் பற்றிய விளக்கங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அது பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் ருத்ரரை சிவனுடன் இணைத்தும், கலந்தும், பேதப்படுத்தியும் மாறுபட்டும் சிந்திக்கும் நிலைமைகளும் விரவிக்கிடக்கின்றன. எனவே, ருத்ரர் பற்றியும் ஸ்ரீ ருத்ரம் பற்றியும் ஆய்வுகள் மேம்படவேண்டும். இது வரை ஆய்வுகள் நடைபெற்றிருந்தால் அவை பிரபலப்படுத்தப்பட வேண்டும். அதன் வாயிலாக, சைவத்தமிழ்ச்சான்றோர்கள் ருத்ரர் பற்றிய தெளிவு உண்டாக வழி செய்ய வேண்டும்.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.
18 படி தெய்வங்கள்
ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.
முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.
இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.
மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.
ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.
எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.
ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உ<ணர்வது ஒன்பதாம் படி.
பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.
பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் – துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.
பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.
பதினெட்டாம் படி:
மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
நாம் குருவாயூரப்பனை தரிசனம் செய்ய பக்தியுடன் செல்லும்போது இடது பக்கம் உள்ள திண்ணையில் ஒரு செப்புப் பட்டயம் இருக்கிறது. அதில் மலையாளத்திலும், தமிழிலும், நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் தான் பட்டத்ரி நூறு நாட்கள் அமர்ந்து நாராயணிய நாயகனான குருவாயூரப்பனின் பெருமையை, ஸ்ரீமத் பாகவதத்தின் சாரமான நாராயணியம் என்பதாக எழுதினார். உடனே நம் மனது குருவாயூரப்பனில் இருந்து அந்த பட்டத்ரி மண்டபத்தை நோக்கி நகர்கிறது.
நம் மனதில் பல கேள்விகள் எழுப்புகின்றன… பட்டத்ரி யார்? எதற்காக இதனை எழுதினார்? நாராயண பட்டத்ரி 1560 ஆம் ஆண்டு பாரதப் புழா ஆற்றின் வடகரையில் திருநாவா என்ற விஷ்ணு க்ஷேத்திரத்திற்கு சமீபத்தில் மேல்புத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவரது தகப்பனார் மாத்ருதத்தர் இவருக்கு சிறு வயதில் கல்வி கற்றுக் கொடுத்தார் பிறகு இவர் ரிக் வேதத்தை மாதவாச்சாரியார் என்பவரிடமும் தர்க்க சாஸ்திரத்தை தாமோதராச்சாரியாரிடமும் கற்றுத் தேர்ந்தார். இவர் வ்யாகரணம் என்று சொல்லப்படுகின்ற சமஸ்கிருத இலக்கணத்தை அச்யுதபிஷாரடி என்பவரிடம் பயின்றார்.
Guruvayoor
இவர் தன் இளமையிலேயே கல்வியைக் கசடற கற்று முடித்தார். ஒரு நாள் இவரது குருவான அச்யுதபிஷாரடி இவரை அழைத்து இன்றோடு உன் குருகுல வாசம் முடிகிறது. உனக்கு சமஸ்கிருதத்தில் எல்லாம் கற்றுக் கொடுத்து விட்டேன். இனி நீ உன் இல்லத்திற்குச் சென்று திருமணம் செய்து கொண்டு கிரகஸ்தாஸரமத்தை ஏற்றுக் கொள். தேவர்களுக்குப் பண்ண வேண்டிய யாகங்கள், ஹோமங்கள் எல்லாம் செய் என்று கூறி ஆசிர்வதித்தார். இதைக் கேட்ட பட்டத்ரி அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து. குருவே இத்தனை காலமும் சமஸ்கிருதத்திலேயே மிகவும் கடினமான வ்யாகரணத்தை நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் குருதக்ஷணையாக என்ன தரட்டும்? என்று பணிந்து கேட்டார்.
அப்பொழுது அச்யுதபிஷாரடி எனக்கு எந்த குருதக்ஷணையும் வேண்டாம். குருவுக்கு யாரும் தக்ஷணை கொடுக்க முடியாது. ஒரு குருவுக்கு அவர் சீடன் கொடுக்கும் சிறந்த தக்ஷணை அவன் கற்ற பாடத்தை மற்றவருக்கும் குற்றம் இல்லாமல் கற்றுக் கொடுப்பதுதான். அப்படியும் நீ குருதக்ஷணை கொடுக்க நினைத்தால், நீ கற்ற சமஸ்கிருதத்தை தக்ஷணை வாங்காமல் எல்லோருக்கும் கற்றுக் கொடு, அதுவே எனக்குப் போதும் என்று கூறினார்.
பட்டத்ரி குருவிடம், குருவே, நீங்கள் சொன்னது போலவே நான் செய்கிறேன். ஆயினும் நான் தங்களுக்கு ஏதாவது குரு தக்ஷணை தர விரும்புகிறேன் என்று கேட்டார். இதைக் கேட்ட குரு, உன்னால் எனக்கு என்ன தர முடியும் என்று சொல், அதை வாங்கிக் கொள்ள முடியுமா முடியாதா என்று நான் சொல்லுகிறேன் என்று கூறினார். பட்டத்ரியின் விடாப்பிடியான வேண்டுகோளுக்கு ஒரு காரணம் இருந்தது. அவரது குருவான அச்யுதபிஷாரடிக்கு வாதரோகம் இருந்தது. அவரால் தன் கை கால்களை நகர்த்தக் கூட முடியாது. அப்படிப்பட்ட நிலையிலும் அவர் தன் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார். தினமும் அவரை 15, 20 சீடர்கள் குளிப்பாட்டி அவரைக் கொண்டு வந்து ஒரு நாற்காலியில் உட்கார வைப்பார்கள். அந்த நிலையிலேயே அவர் தன் சீடர்களுக்குப் பாடம் நடத்துவார். இதனை தினமும் கண்ணுற்ற பட்டத்ரிக்கு இவரது நோயை நாம் ஏன் வாங்கிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. இவர் குருகுலம் சேர்ந்த முதல் நாளிலிருந்தே நம் குரு இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்குப் பாடம் நடத்துகிறாரே! நாம் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது. இப்பொழுது அதைக் கேட்டே விட்டார்.
குருவே, நீங்கள் உங்கள் வாத நோயை எனக்கு ஆவாகனம் செய்து கொடுங்கள் வாத ரோக நிவர்த்தி என்ற குருதக்ஷணையை நான் உங்களுக்குத் தர விரும்புகிறேன். அந்த சந்தோஷத்துடன் நான் இந்த குருகுலத்தை விட்டுச் செல்வேன். உங்களால் அந்த மாதிரி தத்தம் செய்ய முடியும். ஏனென்றால் நீங்கள் சித்த புருஷர்.
நீங்கள் உங்கள் கர்மபலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் கைகளில் ஜலத்தை எடுத்து ஆவாகனம் செய்து எனக்கு தத்தம் செய்து கொடுத்தால், உங்கள் வாத நோய் சரியாகி விடும். அது உங்களால் முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட குரு சிரித்துக் கொண்டு சொல்லலானார்.
ஒரு குருவானவன் தன் சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தையும் கல்வி கேள்விகளையும், சாஸ்திரங்களையும், சகல வித்தைகளையும், கடவுள் பக்தியையும், புராணங்களையும் போதிக்க வேண்டுமே தவிர நீ கேட்டாய் என்பதற்காக நான் என் நேர்யைத் தரக் கூடாது. அவ்வாறு நான் செய்தால் இந்த ஊர் மக்கள் என்னை பழிப்பார்கள்.
குருவானவர் தன் சீடனை சொந்த மகனாக பாவிக்க வேண்டும். எந்த தந்தையாவது தன் குழந்தைக்கு ரோகத்தைத் தருவாரா? என்னுடைய கர்ம பலனால் வந்த இந்த ரோகம் என்னுடனே போகட்டும். இதை வாங்கிக் கொண்டு நீ அவஸ்தைப் பட வேண்டாம். அது மட்டுமில்லை.
Melpathur Narayana Bhattathiri
நான் உனக்கு என் ரோகத்தைக் கொடுத்தால் இந்த ஊர் மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இந்த ஊரில் எனக்கு உள்ள நல்ல பெயர் உன்னால் கெட்டு விடும். அவர்கள் என்னைப் பார்த்து ஏளனமாகப் பேசுவார்கள். அதனால் நீ இங்கிருந்து புறப்படு என்றார். ஆனால் பட்டத்ரி அதெல்லாம் இல்லை.
நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அவரை வற்புறுத்தினார். அதற்கு குரு நீ வியாதியால் கஷ்டப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீ என்னை விடச் சிறியவன். உன் ஆச்சார்ய பக்தியைக் கண்டு என் மனம் மகிழ்கிறது. உன்னைப் போல் ஒரு சிஷ்யன் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன். இருந்தாலும் இது தர்மம் கிடையாது. ஆகையால் நீ கிளம்பு என்று கூறுகிறார்.
அதற்கு பட்டத்ரி குருவே, எனக்கும் உங்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. நான் உங்களை விட வயதில் சிறியவன். அதனால் இந்த ரோகத்தைத் தாங்கும் சக்தி உங்களை விட எனக்கு அதிகம் இருக்கும். அது மட்டுமில்லை, நீங்கள் இந்த வியாதியை எனக்குக் கொடுத்தாலும் கூட நான் இதனால் கஷ்டப்பட மாட்டேன், ஏனென்றால் நீங்கள் ஆச்சார ஸ்ரேஷ்டராக இருக்கிறீர்கள்.
நீங்கள் வைத்தியரிடம் செல்வது கிடையாது. இதற்கு எந்த மருந்து, மாத்திரையும் எடுத்துக் கொள்வது கிடையாது. ஆனால் நான் அப்படி இல்லை. நான் கேரள மாநிலத்தில் உள்ள சிறந்த வைத்தியரிடம் காட்டி என் நோயை குணப்படுத்திக் கொள்வேன். அதனால் உங்கள் நோய் என்னிடம் வெகு நாட்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இன்னும் ஒரு வாரத்தில் நன்கு குணமாகி உங்களை வந்து நமஸ்கரிப்பேன். அதற்கு எனக்கு ஆசிர்வதியுங்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறார்.
பட்டத்ரியின் பிடிவாதமான வார்த்தைகளைக் கேட்ட அச்யுதபிஷாரடி தன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்தார் தன்னுடைய ஆத்ம பலத்தால் வருங்காலத்தை நினைத்துப் பார்த்தார். சிருஷ்டியின் சூட்சுமம் புரிந்துவிட்டது அவருக்கு. இவையெல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடலே…. இவனின் பிடிவாதத்திற்குக் காரணம் அந்த குருவாயூரப்பனே.
இவன் தன் வாயால் நாராயணியம் கேட்க வேண்டும் என்று அந்த கிருஷ்ணன் முடிவு செய்து விட்டான் என்று அவர் நினைக்கையில் அவர் மனக்கண் முன் கிருஷ்ணன் வந்தான். தலையில் மயில் பீலி அணிந்து பட்டுப் பீதாம்பரம் உடுத்தி, புல்லாங்குழலுடன் நின்று புன்முறுவல் புரிந்தான். தான் கண்ட காட்சியைக் கண்டு அச்யுத பிஷாரடி மெய் சிலிர்த்துப் போனார்.
பக்தியின் ஆழத்தை நினைத்து வியந்து போனார். தன் பக்தனுக்காக அந்த மாயக் கண்ணன் என்ன லீலை வேண்டுமானாலும் செய்வான் என்று நினைத்தார். அதனால் இதை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. இது தெய்வ சங்கல்பம் என்று புரிந்து கொண்டார். எனவே, தன் கையில் ஜலத்தை எடுத்து அவருக்கு தன் ரோகத்தை தத்தம் செய்து கொடுத்து விட்டார்.
அடுத்த நிமிஷம் குரு எப்படி இருந்தாரோ அப்படி பட்டத்ரியும், பட்டத்ரி எப்படி இருந்தாரோ அப்படி குருவும் ஆகி விட்டனர். உடனே குரு தன் மற்ற சீடர்களிடம், இவனைக் கொண்டு போய் இவனது வீட்டில் சொல்லி விட்டுவிட்டு வாருங்கள். ஏனென்றால் படிக்கச் சென்ற குழந்தை ரோகத்துடன் வந்தால் அந்த பெற்றோர் மனம் எவ்வளவு பாடுபடும்? குரு எவ்வளவு சொல்லியும் கேளாமல் குருவே நிர்பந்தப்படுத்தி அவரின் ரோகத்தை இவன்தான் வாங்கிக் கொண்டு விட்டான் என்று கூறுங்கள். அவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்றார்.
பட்டத்ரியை ஒரு பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர் சிஷ்யர்கள். வீட்டுக்கு வந்த பட்டத்ரியைப் பார்த்த குடும்பத்தினருக்கு குரு மீது மிகுந்த கோபம். இவன்தான் கேட்டான் என்றால் அந்த குரு எப்படி ரோகத்தைத் தன் சீடனுக்குக் கொடுக்கலாம். மற்ற சீடர்களுக்கு இல்லாத அக்கறை இவனுக்கு ஏன்? படிக்கச் சென்ற பிள்ளை இப்படி ரோகத்துடன் வந்து விட்டானே! இவனை எப்படி குணமாக்குவது. எந்த வைத்தியரைப் பார்ப்பது என்று மனச் சஞ்சலம் அடைந்தனர்.
இவரை அழைத்துக் கொண்டு பிரபல வைத்தியர்களிடம் சென்றனர். ஆனால் எங்கு சென்றாலும் அவரது நோயின் வலிமை கூடியதே அன்றி ஒரு துளியும் குறையவில்லை. அவர் சாப்பிட்ட மருந்து, மாத்திரைகள், சூர்ணத்தினால் எல்லாம் எந்த ஒரு பலனும் இல்லை. மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள வியாதியின் வலி குறையும் ஆனால் இவருக்கு நாளுக்கு நாள் வலி கூடியது.
கை, கால்களை துளிக் கூட அசைக்க முடியவில்லை. வைத்தியத்தினால் அவர் உடலில் ஒரு முன்னேற்றமும் இல்லை. அவர் குருவிடம் இருந்து எப்படி அந்த ரோகத்தை வாங்கினாரோ அப்படியே இருந்தது. எல்லா வைத்தியர்களிடமும் காட்டி விட்டு இனி செல்ல கேரளாவில் வைத்தியரே இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. ஆனாலும் அவர் ரோகம் குணமாகவில்லை…..
கேரளாவிலுள்ள எல்லா வைத்தியர்களிடமும் சென்று அவர்கள் சொன்னபடி எல்லா வைத்தியம் செய்தும் எல்லா மருந்துகளும் எடுத்துக் கொண்டும், பட்டத்ரிக்கு ரோகம் குணமாகவில்லை. இப்பொழுது பட்டத்ரி சிந்திக்க ஆரம்பித்தார்.
நாம் நல்ல சிந்தனையோடுதானே நம் குருவிடம் இருந்து இந்த வியாதியை வாங்கிக் கொண்டோம். ஆனாலும் ஏன் குணமாகவில்லை?! அதற்கு ஒரே காரணம் நாம் குருவிடம் கர்வமாகப் பேசி விட்டோம். வியாதி போகாததற்கு உங்கள் ஆசாரம் தான் காரணம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. வைத்தியரிடம் சென்றால் தீர்ந்து விடும். ஒரு வாரத்தில் வந்து உங்களை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி விட்டேன்.
பகவானிடம் கூட கர்வமாகப் பேசலாம். ஆனால் குருவிடம் கர்வமாகப் பேசக் கூடாது. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. நான் மாபெரும் அபச்சாரம் அல்லவா செய்திருக்கிறேன்? அதனால்தான் என்ரோகம் இன்னும் தீரவில்லை.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பவர்களில் குருவே முதலிடம் பெறுகிறார். குரு சொன்னதைக் கேட்காத சீடர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்கள்.
மகாபலி சக்கரவர்த்தி யாகம் செய்தபோது அவரது குரு சுக்ராச்சாரியார் எவ்வளவு சொல்லியும் கேளாமல் வாமனனுக்கு மூன்றடி நிலத்தை தத்தம் செய்து கொடுத்தான் மகாபலி. விளைவு? அவன் தன் குடும்பத்துடன் அதள பாதாளத்திற்குச் சென்றான்…
இப்படியாகத் தான் தன் குருவை அபசாரமாகப் பேசியதற்காக பட்டத்ரி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார். இனி நாம் என்ன செய்வது? இந்த நோயை எப்படிப் போக்குவது? என்று தன் மனதினுள் சிந்தித்துக் கொண்டிருந்தார். எப்பொழுதுமே வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுபவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும்போது தான் தன் ஜாதகத்தை நினைப்பார்கள்.
எந்த ஜோசியரிடம் போவது, என்ன பரிகாரம் செய்வது என்று சிந்திக்கத் தொடங்குவார்கள். அதுபோலத்தான் இவரும் நினைத்தார். எந்த ஜோதிடரிடமாவது தன் ஜாதகத்தைக் காட்டி ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்கலாம் என்று நினைத்தார். அப்போது அவர்கள் ஊரில் எழுத்தச்சன் என்று ஒரு பிரபல ஜோசியர் இருந்தார்.
அவர் யார் வீட்டுக்கும் போய் ஜோதிடம் பார்க்க மாட்டார். அவர் வீட்டிற்கு நாம் சென்றால் மட்டுமே ஜோதிடம் பார்ப்பார். அவர் அஷ்ட மங்கல ப்ரஸனம் என்று எட்டு விதமான மங்கலப் பொருட்களை வைத்துக் கொண்டு சோழி உருட்டி, அவர்கள் வந்த நேரத்தையும் கணக்கில் வைத்து, அவர்கள் கஷ்டத்தையும் மனதில் நினைத்து அது தீர ஜோதிடம் பார்த்துச் சொல்வார். பட்டத்திரியும் நோயின் காரணமாக அவர் வீட்டுக்குச் செல்ல முடியாது. அவரும் வர மாட்டார். என்ன செய்வது என்று யோசித்தார்.
அவர் தம் குடும்பத்தினரிடம் தன்னை அழைத்துக் கொண்டு செல்லும்படி கேட்டதற்கு, வைத்தியருக்கு செலவு செய்ததே போதும். இன்னும் ஜோதிடருக்கு வேறு செலவா? நீங்கள் இப்படியே இருங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி விட்டனர். ஆனால் நாளுக்கு நாள் அவரது ரோகத்தின் வீரியம் அதிகரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன்.
சிறு வயது முதலே அந்த வீட்டில் வேலை செய்வதாலும், பரம்பரை பரம்பரையாக அவர்களைத் தெரியும் என்பதாலும் அவனுக்கு பட்டத்ரி மீது மிகுந்த பாசம் உண்டு. பட்டத்ரி அவன் மனம் நம் எஜமானர் இப்படி கஷ்டப்படுகிறாரே! அவருக்காக நாம் சென்று அவரது ஜாதகத்தைக் காட்டி பார்த்துக் கொண்டு வரலாம். என்று நினைத்தான். அதை மெதுவாக அவரிடமும் கூறினான்.
ஐயா, நான் வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜோசியர்கிட்ட காட்டி கேட்டுக் கொண்டு வருகிறேன் என்றான். இதைக் கேட்ட பட்டத்ரி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டு என் குடும்பத்தாரும் உறவினர்களும் கூட முடியாது என்று சொல்லி விட்டபோது நீ எனக்காக செல்கிறேன் என்று சொல்கிறாயே! எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது என்று கூறி தன் ஜாதகத்தை அவனிடம் கொடுத்து அனுப்பினார்.
அவன் சென்று அந்த ஜோதிடரின் காலில் விழுந்து நமஸ்கரித்து, பட்டத்ரியைப் பற்றி முழுமையாகக் கூறி அவருடைய ஜாதகத்தைக் காட்டி, இது என் எஜமானரின் ஜாதகம். அவர் வாத நோயால் வாடுகிறார். அவரால் வர இயலாது. அவர் குடும்பத்தாரும் வர மறுக்கின்றனர். அதனால்தான் நான் வந்தேன்.
இவர் நோய் தீருமா என்று பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டான். அவனுடைய எஜமான விஸ்வாசத்தைப் பார்த்த ஜோதிடர். உனக்காக நான் பார்த்துச் சொல்கிறேன் என்று கூறி பட்டத்ரியின் ஜாதகத்தைப் பார்த்தவர் பிரமித்துப் போனார். பின் அவர் சோழியைப் போட்டுப் பார்த்து, அஷ்ட மங்கல ப்ரஸனம் பார்த்து. அவன் வந்த நேரத்தையும் பார்த்து, அவனது உள்ளக் கிடக்கையும் அறிந்து சொல்லலானார்.
உன் எஜமானனுக்குக் கண்டிப்பாக இந்த வியாதி நீங்கும். இதற்குப் பரிகாரம் இருக்கிறது. ஆனால் ஏழு எட்டு கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டாம். ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றார். உடனே அந்த வேலைக்காரன் ஆவலோடு அப்படியா? என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா, நான் உடனே செய்கிறேன் என்றார்.
அதற்கு எழுத்தச்சர் இந்த பரிகாரத்தை நீ செய்ய வேண்டாம் உன் எஜமானார் தான் செய்ய வேண்டும். திருச்சூர் அருகில் குருவாயூர் என்றொரு பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது. கிருஷ்ணன் பிரத்யக்ஷ பேசும் தெய்வமாக விளங்குகின்ற க்ஷேத்ரம். குருவும் வாயுவும் பிரதிஷ்டை செய்த தெய்வம், பெரும் அதிசயங்கள் நிகழ்ந்த க்ஷேத்ரம். கிருஷ்ணரே ஸ்நானம் செய்த புண்ணியக் குளமான நாராயண சரஸ் உள்ள க்ஷேத்ரம்.
அப்பேர்ப்பட்ட குருவாயூருக்கு இவரை நேரே அழைத்துச் செல். அங்கு கோயிலுக்கு அருகில் உள்ள நாராயண சரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராட வைத்து பின் புது வஸ்திரம் அணிவித்து கொடிக்கம்பமாகிய ஜ்வஜஸ்தம்பம் தாண்டி உள்ளே நுழையும் இடத்தில் பகவானுக்கு வலது பக்கம் நமக்கு இடது பக்கம் உள்ள திண்ணையில் அவரை உட்கார வைத்து மத்ஸ்யம் தொட்டுப் பாட சொல் என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று சொன்னாரா? என்று மிகவும் ஆவலுடன் கேட்டார். அதற்கு அவன், ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது என்றான். அதற்கு பட்டத்ரி அப்படி என்ன சொல்லி விட்டார்? என்று ஆர்வமாகக் கேட்க, அவன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் தங்களை மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடச் சொல்கிறார். அந்தக் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம் என்ற சுத்தி செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள்.
அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார். அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன்.
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ என்று வருத்தப்படுகிறேன் என்றான். ஜோசியர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொண்டார் பட்டத்ரி. அவர் மிகவும் சந்தோஷப்பட்டுக் கூறலானார். நாம் இன்றே குருவாயூர் செல்ல வேண்டும். அதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றார். இதைக்கேட்ட வேலைக்காரன் நான் கூட வர முடியாது.
குருவாயூர் போன்ற புண்ணிய க்ஷேத்ரத்தை நீங்கள் அசுத்தம் செய்வதை நான் விரும்பவில்லை. நீங்கள் உங்கள் வியாதி குணமாக வேண்டும் என்பதற்காக இதைச் செய்யலாம். ஆனால் இதற்கு உடன்பட என்னால் முடியாது என்று மிகவும் கோபமாகக் கூறினான்.
அவனை சாந்தப்படுத்திய பட்டத்ரி அப்பா அதற்கு அர்த்தம் அதுவல்ல. மத்ஸ்யம் தொட்டுப் பாடணும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய்? பகவான் குருவாயூரப்பனின் அவதாரங்களில் முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான்.
மத்ஸ்யம் தொட்டு என்றால் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுவதையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவ தாரங்களைப் பற்றி குருவாயூரில் பாட வேண்டும். அதனால் இப்பொழுதே என்னை குருவாயூருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். தன் வியாதிக்குப் பரிகாரம் கிடைத்த சந்தோஷம் அவருக்கு. அதுமட்டுமில்லாமல் தம் குரு தமக்குக் கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று நினைத்து அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன.
அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததும் அவர் மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது. ஆனால் இவருடைய வியாதியால் ஏற்கெனவே நொந்து போயிருந்த உறவினர்கள் இது வேறா என்ற வெறுப்புடன் வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டு குருவாயூர் சென்றனர்.
பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. அந்த குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக அவர் மனம் ஏங்கியது. அவர் மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளை காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம் என்று எண்ணிக் கொண்டார்.
அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை அழைத்து வந்தவர்கள் அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். பகவானே ஸ்நானம் செய்த குளமா? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர். தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள், பாகவதோத்தமர்களான வியாஸர், பிரகலாதன், நாரதர், குரு, வாயு, துருவன், அம்பரீஷன், அஷ்டதிக் பக்தர்கள் அனைவரும் அவனைத் தொழ வந்திருந்தனர். அவர்களில் ஒருவராக இவரும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.
குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே இவரும் உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர். பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர்.
பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்?
இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி தன் மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார். அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, அவரது தேஜோமய திவ்ய ஸ்வரூபத்தை தியானித்து, கண்ணா என பக்தியுடன் கதறினார். அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?
பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் இருந்ததால் தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை. அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ஏ கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா! என்று கதறுகிறார்.
உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும். அதனால் நீ எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா என்று அழுது கண்ணீர் மல்குகிறார். அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம், நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்.
என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே உன் புகழைக் கேட்டிருக்கிறேன் உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியம் எழுத முடியும்? அதனால் நீ தரிசனத்தைத் தா என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்கிறார்.
அப்போதுதான் குருவாயூரப்பன் முதன் முதலில் பட்டத்ரியிடம் பேச ஆரம்பிக்கிறார். எண்ணால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்று நீ வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும், என்று கூறுகிறார். அப்பொழுது பட்டத்ரி, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? இதைக் கேட்ட குருவாயூரப்பன் கருணையோடு சொல்லலானார்.
பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். எனக்குக் கழுத்தின் இரு பக்கமும் நன்றாகத்தான் இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும். நான் என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் ஆரம்பித்துக் கொள் என்று கூறி அனுகிரகம் செய்கிறார். (இப்பொழுதும் நாராயண பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.
1970-களில் குருவாயூரில் அவ்வளவு கூட்டம் கிடையாது. நாராயணியம், ஸ்ரீமத் பாகவதம் படிக்கத் தெரிந்தவர்கள் அந்தத் திண்ணையில் அமர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டார்கள். 1971-ல் நாம் முன்னே சொன்ன ஆஞ்சன் நம்பூதிரி என்பவர் மூலமாக அடியேனுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. நானும் என் சகோதரியும் அந்த பட்டத்ரி மண்டபத்தில் ஏழு நாட்கள் அமர்ந்து நாராயணியம் படித்தோம். அப்பொழுது எனக்கு மனதில், இந்த பட்டத்ரி மண்டபத்தில் உட்கார்ந்து பார்த்தால் குருவாயூரப்பனைப் பார்க்க முடியாது என்று சொல்கிறார்களே என்று நினைத்தது.ஆனால் படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அந்த பிரமிப்பு தோன்றியது.
அந்த குருவாயூரப்பன் என்னைப் பார்த்து தலையை சாய்த்து அனுகிரகம் செய்யக் கூடிய பாவம் எனக்குக் கிடைத்து. அந்தப் பரவச அனுபவம் அடியேனுக்கும் ஏற்பட்டது. இப்பொழுது கூட்டம் அதிகமாகிவிட்டதால் அங்கு யாரையும் அமர அனுமதிப்பதில்லை. அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.
சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் மட்டும் உனக்கு சொந்தம். இது இனிமேல் பட்டத்ரி மண்டபம் என்று அழைக்கப்படும் என்று கூறினார்.)
எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாக்ஷணை போல் அமைந்திருக்கிறது.
நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க, ம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று குருவாயூரப்பன் கூறுகிறான். அப்போது பட்டத்ரி, நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன் என்கிறார். (இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோல் பகவானும் பக்தனும் சம்பாக்ஷணை செய்த நிகழ்வுகள் நம் நாட்டில் நிறைய உள்ளன…
திருப்பதியில் குலசேகர ஆழ்வாரும் ஸ்ரீநிவாசப் பெருமாளும் பேசுவர். ஸ்ரீரங்கத்தில் இரவில் நடக்கும் அரையர் சேவையில் நாட்டியம் ஆடிக் கொண்டே ரங்கநாதருடன் பேசுவர். சிதம்பரத்தில் அப்பய்ய தீக்ஷிதரும் நடராஜரும் பேசுவர். மதுரையில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் மீனாக்ஷியடன் பேசுவார்) இன்னும் இப்படிப்பட்ட அற்புத மகோன்னத நிகழ்வுகளைச் சொல்ல வேண்டுமானால்- காஞ்சியில் வரதராஜ பெருமாளும்- திருக்கச்சி நம்பிகளும், கந்தவேள் முருகனும்- கச்சியப்ப சிவாச்சார்யாரும், திருக்கடையூரில் அம்பாளும்,அபிராமி பட்டரும், பிள்ளையாரும்- முருகனும்- அவ்வையாரும், காளியும்- கவி காளிதாசனும், திருத்தணி முருகனும்- முத்துசுவாமி தீட்சிதரும், காளியும்- ஸ்ரீஇராம கிருஷ்ண பரமஹம்சரும், மூல ராமரும்- ஸ்ரீஇராகவேந்திரரும்
…இன்னும்… இன்னும்… என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படிபரம பக்தர்களும், பரமனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட புண்ய பூமி இந்த பாரதம். இந்த அற்புதத்திற்கெல்லாம் அற்புதமாக நிகழ்ந்ததுதான் நம் பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசிக் கொண்டது. ஏனென்றால் மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் இங்கு குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் பேசுகிறார்
விஷ்ணு புராணம் முதல் அம்சம் – 9ஆம் அத்யாயத்தில் இருந்து ஒரு ஸ்துதி ஸ்ரீ மஹாலக்ஷ்மியை பற்றியது.
தேவரும் அசுரரும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட பல விஷயங்களுடன் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மிக மிக முக்யமானவளாவாள்.
தேவேந்த்ரன் தன் இராஜ்யம், ஐஸ்வர்யம், பதவி, புகழ் ஆகிய எல்லாவற்றையும் இழந்து, இப்போது, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரத்தால் திரும்பப் பெற்றான்.
ஸ்ரீ மஹாலக்ஷ்மியை , தேவேந்த்ரன் இந்த ‘ஸ்துதி’யால் போற்றி வணங்கினான்.
‘இந்த ஸ்தோத்ரத்தை, பக்தியோடு பாராயணம் செய்து என்னை (ஸ்ரீமஹாலக்ஷ்மியை) ஆராதிப்பவரை விட்டுநான் என்றும் விலகுவதில்லை. காலையும் மாலையும் இந்த ஸ்துதியால் என்னை வணங்குவோரிடம் நான் பராங்முகியாக (பாராமுகமாக) இருக்கவே மாட்டேன்.’
இது தேவியே அருளிய உத்தரவாதம். ஆகவே, இந்த்ரக்ருத ‘ஸ்ரீஸ்துதி’யைச் சொல்லி தேவியை பூஜிப்பவரிடம் ஸ்ரீமஹாலக்ஷ்மி எப்போதும் நிலைத்திருப்பாள். அதாவது, பதவி, செல்வம், புகழ், ஐஸ்வர்யம், ஆரோக்யம், மங்களம் ஆகிய எல்லாம் என்றும் கொழிக்கும்.
ஸ்ரீ மஹாலக்ஷ்மியை , தேவேந்த்ரன் இந்த ‘ஸ்துதி’யால் போற்றி வணங்கினான். ‘இந்த ஸ்தோத்ரத்தை, பக்தியோடு பாராயணம் செய்து என்னை (ஸ்ரீமஹாலக்ஷ்மியை) ஆராதிப்பவரை விட்டுநான் என்றும் விலகுவதில்லை. காலையும் மாலையும் இந்த ஸ்துதியால் என்னை வணங்குவோரிடம் நான் பராங்முகியாக (பாராமுகமாக) இருக்கவே மாட்டேன்.’ இது தேவியே அருளிய உத்தரவாதம்.
சொல்லுக்கு அடங்காதது. வேத மாதாவினாலும் ஓரளவுக்குத்தான் ஸ்ரீ பரமேச்வரனை அடையாளம் காட்ட முடியும்.
ஸ்ரீ.ருத்ரம்:-
வேதத்தால் துதிக்கும் போது அவன் எல்லாவற்றையும் வழங்குகிறான். அவன் எங்கெல்லாம் எந்தெந்த வடிவில் இருக்கிறான் என்ற பெரிய பட்டியலையே தந்துவிடுகிறது
எல்லா உலகமும் ஆகி (“#ஜகதாம்_பதயே”) இருப்பவன். எங்கு தான் இல்லை? இருந்தாலும் ஒன்றொன்றாகச் சொல்லுகிறது வேதம்…
அந்த ஈச்வரன் தான் எல்லா தேவர்களின்இருதயங்களிலும் இருக்கிறான். (“#தேவானாம்_ஹ்ருதயேப்ய”)
அப்படி இருந்துகொண்டு வேண்டுவார் வேண்டுவது எல்லாம் தருபவனாக இருக்கிறான் (“#விசின்வத்கேப்ய:”)
மகான்கள் வடிவிலும் அற்ப சக்தி உள்ளவர்கள் வடிவிலும் விளங்குகிறான். சேனைத் தலைவர்களாகவும் சேனைகள் எனவும் இருப்பதை (“#சேனாப்யசேனாநிப்யச்ச:”) என்கிறது #ஸ்ரீருத்ரம்.
அதே சமயம் தேர் ஓட்டுபவர் வடிவிலும் (“#க்ஷத்ருப்ய:”), தச்சர் வடிவிலும் (“#தக்ஷப்ய:”), குயவர் வடிவிலும் (“#குலாலேப்ய:”), கருமார் வேடத்திலும் (“#கர்மாரேப்ய:”), பறவைகளைப் பிடிக்கும் வேடர் வடிவத்திலும் (“#புஞ்சிஷ்டேப்ய:”), மீன் பிடிக்கும் செம்படவ வடிவிலும் (“#நிஷாதேப்ய:”) இருக்கிறான்….
சிவ ச்வரூபமோ அலாதியானது. ஆலகால விஷத்தை உண்ட கண்டம் (“#நீலக்ரீவாய”) அதன் மேல் விபூதி பூசப்பட்டு இருக்கிறது (“#சிதிகண்டாய”) .
ஒரு சமயம் பார்த்தால் நீண்ட ஜடா முடி (“#கபர்தினே”) இருக்கிறது. மறு கணம் பார்த்தால் கேசம் நீக்கப்பட்ட (“#வ்யுப்தகேசாய”) தலை.
ஆயிரக்கணக்கான கண்கள் (“#சகஸ்ராக்ஷாய”), குறுகிய வாமன வடிவுடைய (“#ஹ்ரச்வாயச_வாமனாயச”) அவனே, பெரிய வடிவத்துடனும் (“#ப்ருஹதே”) தோன்றுகிறான். பால விருத்த வடிவங்களிலும் காட்சி அளிக்கிறான்.
வேதங்களால் துதிக்கப்படுவனாகவும் (“#ஸ்துத்யாய”), வேத முடிவில் வீற்றிருப்பவனாகவும் (“#அவசான்யாய”) விளங்குகிறான்.
ஆகவே தர்மத்தின் வடிவமான பரமேச்வரனைத் தர்ம தேவதையே வாகனமாகத் தங்குகிறது என்பதை, (“#பப்லுசாய”) என்ற சொல்லால் வேதம் வர்ணிக்கிறது.
சம்சாரமாகிய மரம் ஜனன மரணங்களுக்கு ஏதுவானது. அதை வேரோடு வெட்டி வீழ்த்தி முக்தியைத் தருபவன் ஆதலால (“#பவச்ய_ஹேத்யை”) எனப்படுகிறான்.
பக்தனைக் காப்பதற்காக அவன் கூடவே செல்லுபவன் என்று (“#தாவதே”) என்ற பதத்திற்கு அர்த்தம் சொல்லுவார்கள் பெரியவர்கள். எனவே, பக்தனுக்காகத் தூது செல்லவும் தயங்குவதில்லை பரமன் என்பதைத் திருவாரூரில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தியாகராஜப் பெருமான் தூது சென்றதால் அறியலாம். அது மட்டுமா? இன்னும் உனக்காக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா, அதனையும் செய்கிறேன் என்கிறானாம். இதைத்தான் ஸ்ரீ ருத்ரம், (“#தூதாயசப்ரஹிதாயச”) என்று காட்டுகிறது.
தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரும் இல்லை. அதிலும் தனது பக்தன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொண்டு மன்னிக்கிறான் ஈச்வரன். இதைத் தான் வேத மாதா நமக்கு, (“#ஸஹமானாய ச”) என்ற பதத்தால் உணர்த்துகிறாள். திருக் கருப்பறியலூர் (தலை ஞாயிறு) என்ற ஸ்தலத்தில் ஸ்வாமிக்கு ‘அபராதக்ஷமாபநேச்வரர்’ (குற்றம் பொறுத்த நாதர்) என்று பெயர்.
(“#நமஸ்ஸோமாயச”) என்று தொடங்கும் எட்டாவது அனுவாகத்தில் ஸ்ரீ பஞ்சாக்ஷரம் வருவதால் பெரியவர்கள் இதை ஜபிப்பதை விசேஷமாகக் கருதுவார்கள். இதைத் தான் ஞான சம்பந்தரும், “வேதம் நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமசிவாயவே “ என்று பாடினார்.
இவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீ ருத்ர பாராயணத்துடன் சிவ பூஜை செய்பவன் சிவனாகவே ஆகி சிவமே அடைகிறான் என்பதில் ஐயமில்லை.
ருத்ரம் என்னும் துதி யஜுர் வேதத்தில் உள்ளது. இது நமகம், சமகம் என இரண்டு பகுதிகளை உடையது. இறைவனிடம் என்ன வேண்டுவது என்று திணறுபவருக்கு இது ஒரு பெரிய பட்டியலைத் தருகிறது. இது பற்றிய மிகவும் அற்புதமான விஷயம் என்னவென்றால் நல்ல தூக்கத்தையும் தருக என்று இறைவனை வேண்டுவதாகும். மேலை நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் வாழ்பவருக்கு இன்று அரிதான பொருள் நல்ல நிம்மதியான உறக்கம் ஆகும். பலவித கவலைகளாலும் இயந்திரம் போன்ற வாழ்வாலும் மனிதர்கள் கஷ்டப் படுகிறார்கள். இதை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் முன்னோர்கள் அழகாக வரிசையாக சமகம் என்னும் பகுதியில் பட்டியல் இட்டுவிட்டார்கள்.
நமகம் என்னும் பகுதியில் சிவ பெருமானை நூற்றுக் கணக்கான பெயர்களால் நமஸ்கரிக்கிறோம். இதனால் இதை சத ருத்ரீயம் என்று அழைப்பர். சமகம் என்னும் பகுதியில் நமக்கு வேண்டியவற்றை எல்லாம் கேட்கிறோம். இதைக் கேட்டாலேயே போதும். அத்தனையும் கிடைத்துவிடும். சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வார்கள். இந்துக்களின் முக்கிய சடங்குகள் அனைத்திலும் ருத்ர பாராயணம் நடைபெறும்.
நமகம் என்னும் பகுதியில் 194 நம: வரும்
சமகம் என்னும் பகுதியில் 328 சமே வரும்.
நமகம் பகுதியில் சிவனை 300 பெயர்களால் வணங்குகிறோம்.
ருத்ரத்துக்கும் 11 என்ற எண்ணுக்கும் தொடர்பு மிக அதிகம்.ஏகாதச ருத்ரர்கள் என்று ருத்ரர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுவதால் குறைந்தது 11 தடவையும், அதிகமாக இதன் பல மடங்குகளிலும் பாராயணம் செய்வர்.
ஸ்ரீருத்ரம் 174 ரிக்குகளைக் கொண்டது. இதில் 32 மஹா மந்திரங்கள் இருக்கின்றன. ருத்ரத்தில் 11 பிரிவுகள் (அநுவாகங்கள்), சமகத்தில் 11 பிரிவுகள் இருக்கின்றன. ருத்ரத்தின் 11 அநுவாகங்களில் எட்டாவது அநுவாகத்தில் நமச்சிவாய என்ற மஹா மந்திரம் வருவதால் அந்த இடம் வரும் போது முழுக் கவனத்தையும் செலுத்தி உரத்த குரலில் கூறுவர். 11ஆவது அநுவாகத்தில் மரண பயத்தை நீக்கும் ம்ருயுஞ்ஜய மந்திரம் (#ஓம்த்ரயம்பகம்யஜாமஹே) வருகிறது.
ஸ்ரீ ருத்ரத்திற்கு சாயணர், பட்ட பாஸ்கரர், அபிநவ சங்கரர் ஆகிய பெரியோர்கள் பாஷ்யம் (விளக்க உரை) எழுதியிருக்கிறார்கள்.
பெரிய புதிர்
உலகிலேயே பெரிய கணித வல்லுநர்கள் இந்துக்கள்தான். இது பற்றி நான் பல கட்டுரைகளில் தந்திருக்கிறேன் (மீண்டும் இந்தியா உலக செஸ் சாம்பியன் என்ற கட்டுரையைக் காண்க). சின்னக் குழந்தை முதல் பெரியோர் வரை தினசரி துதிகளில் கூட “டெசிமல்” முறையை (தசாம்ச) பயன்படுத்தி சூர்ய கோடி சமப் ப்ரபா என்றெல்லாம் வேண்டுவதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
சமகத்தில் 11ஆவது அநுவாகத்தில் ஒற்றைபடை எண்களாக 33 வரையும் இரட்டைப் படை எண்களாக 44 வரையும் எண்கள் மட்டுமே மந்திரமாக உச்சரிக்கப்படுகின்றன. இது வரை இதற்கு எத்தனையோ தத்துவ விளக்கங்கள் கொடுக்கப்பட்டபோதிலும் ஒன்றுகூட எல்லா எண்களையும் விளக்குவதாக இல்லை.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்படி வெறும் எண்களை மட்டுமே மந்திரமாக்கிய இந்தியர்களின் கணிதப் புலமையையும் ஆர்வத்தையும் என்னவென்று புகழ்வது. உலகில் வேறு எந்த கலாசரத்திலும் இறைவனைத் துதிபாடும் மந்திரங்களில் இப்படி எண்கள் வருவதில்லை. ஒரு இடம் அல்ல, இரண்டு இடம் அல்ல. உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் பெரிய பெரிய எண்கள் வருகின்றன. வேதங்களின் முழு அர்த்தம் புரியாத வெளிநாட்டுக்காரர்கள் இதற்கு மனம் போன போக்கில் பொருள் செய்திருக்கிறார்கள்.
( இத்தனை கோட்டைகளை ஆரியர்கள் அழித்தார்கள், இத்தனை திராவிடர்களை ஆரியர்கள் கொன்றார்கள் என்றெல்லாம் ஒரே கதைதான்! அந்த எண்கள் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் சிரிப்புதான் வரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் திராவிட என்ற ஒரு இனத்தைக் கற்பித்து அதற்கு கோழைப் பட்டத்தையும் சூட்டிவிட்டார்கள்! காட்டுமிராண்டி ஆரியர்களிடம் செமை அடிவாங்கி, கோழைகள் போல தெற்கே ஓடிவந்து காடுகளிலும் மலைகளிலும் ஒளிந்துகொண்டார்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்கார அறிஞர்கள் எழுதிவைத்தனர். இது தவறு. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியமோ வேதங்களையும் வேள்விகளையும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளுகிறது!)
வேதங்களைப் பாடிய ரிஷி முனிவர்கள் தாங்கள் ரகசிய மொழியில், சங்கேத மொழியில் பாடுவதை விரும்புகிறோம் என்று பாடுகிறார்கள். சங்கத் தமிழ் புலவர்களும் இதை அறிந்து வேதத்துக்கு மறை (ரகசியம்) என்ற அழகிய தமிழ் சொல்லைச் சூட்டியுள்ளனர்.
க்ருஷ்ண! க்ருஷ்ண! ராம! என்று ஹரிநாம கீர்த்தனம் செய்வானானால் ஆயிரம் ராஜஸூயங்கள் செய்த பலனை அடைவான் என்று வஸிஷ்ட ஸ்ம்ருதி கூறுகிறது.
விஸருதாநி பஹூன்யேவ தீர்த்தானி விவிதானி ச| கோட்யம்ஸேனாபி துல்யானி ஹரேர்நாம ஜபேன வை
கணக்கு வழக்கற்ற புண்ய தீர்த்தங்களைக் கேள்விப் படுகிறோம். அவை ஹரிநாம ஜபத்தின் மஹிமையில் கோடியில் ஒரு பங்குகூட ஆகாது என்று விச்வாமித்ர ஸ்ம்ருதி கூறுகிறது.
ஸகல பாபங்களையும் செய்தவனாயினும் நரஸிம்ம நாமத்தைக் கீர்த்தனம் செய்பவன் ஸகல கஷ்டங்களையும் தாண்டி ஸனாதனமான ப்ரும்மத்தை அடைகிறான் என்று காலவ ஸ்ம்ருதி கூறுகிறது.
இவ்வாறு கணக்கு வழக்கற்ற ஸ்ம்ருதிகள் பகவந்நாம கீர்த்தன வைபவத்தைச் சொல்லுகின்றன.
வேதத்திலே… திருநாம வைபவம் பற்றிச் சொல்லியிருக்கிறதா..? திவ்யமாய்ச் சொல்லியிருக்கிறது! நம்மைப் பார்த்து ரொம்ப ஆதரவாக அந்த வேதம் சொல்கிறது.
பகவான் கட்டிப் பொன் போலே… அவன் திருநாமம் ஆபரணங்களைப் போலே…
கட்டிப் பொன் மிக உசத்தியானதுதான். ஆனால் அதைத் தலையில் வைச்சுக்க முடியுமா? கழுத்திலே போட்டுக்க முடியுமா? அல்லது முதுகிலே தாங்கிக் கொண்டு நிற்கத்தான் முடியுமா?
ஆனால் பகவானின் திருநாமங்களோ உடனே எடுத்தாளக் கூடிய ஆபரணங்கள். அணிந்தும், அணியச் செய்தும் மகிழலாம்; அழகு பார்க்கலாம்.
பிள்ளைலோகாச்சார்யார் தமிழில் மூன்று அழகான சூத்திரங்கள் மூலம் இந்த வேதப் பொருளை விளக்குகிறார்:
‘வாச்ய பிரபாவம் போலன்று வாசக பிரபாவம்’
வாச்யன் – பகவான் ; வாசகம் – அவன் நாமம். பகவான் கைவிட்டாலும் விட்டுவிடுவான். ஆனால் அவன் நாமம் கைவிடாது.
‘அவன் தூரஸ்தனானாலும் இது கிட்டி நின்று உதவும்’
‘ஹே விஷ்ணு! இதை ஏற்றுக்கொள்’ என்று சொல்லி ஹோமம் பண்ணுகிறோம். அவன் எங்கே வேண்டுமானாலும் இருக்கட்டுமே; அவன் பெயரைச் சொல்லி அளிப்பது அவனுக்குப் போய்ச் சேருகிறது.
‘திரௌபதிக்கு ஆபத்திலே ஆடை சுரந்தது கோவிந்த நாமமிதே’
வஸ்திர அபஹரணம் நடக்கும் போது திரௌபதி கூப்பிட்டாள்: ‘ஹே கிருஷ்ணா… ரக்ஷமாம் சரணாகதாம்…’
என்று. ஆனால் பகவான் அவளை ரக்ஷிக்கவில்லை. இதை அந்த பகவானே சொல்கிறார்; “ஒவ்வோர் அவதாரத்திலும் ஒரு குறை உண்டு. கிருஷ்ணாவதாரத்திலே திரௌபதியை உடனடியாக ரக்ஷிக்காதது என் குறை...” என்கிறார்.
‘திரௌபதிக்கு ஆடை சுரந்ததே… உன்னாலன்றி வேறு யாரால் அது சாத்தியமானதாம்…?’ என்று கேட்டால் பகவான் சொல்கிறார்:
‘நானில்லை; என் கோவிந்த நாமம் அவளை ரக்ஷித்தது…’
பகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும். அவனை விட நம்மிடம் அதிகப் பரிவுடையது அவன் நாமம்.
பாண்டித்யம் இல்லாவிட்டாலும் பகவான் நாமத்தைச் சொல்லலாம். ஆனால் அதை இடைவிடாது சங்கீர்த்தனம் பண்ணணும்.
இதற்குத்தான் நாம சங்கீர்த்தனத்தை நமக்கு வாழ்க்கை முறையாகவே வைத்திருக்கிறது.
தழும்பு எப்படி உண்டாகும்? மீண்டும் மீண்டும் சொல்வதால். அதற்குத்தான் நியமம் ஏற்பட்டிருக்கிறது.
எழுந்திருக்கும் போது – துயிலெழும்போது; ‘ஹரிர் ஹரி:, ஹரிர் ஹரி:’ என்று ஏழு முறை சொல்ல வேண்டும்.
உரக்க, பெரிசாச் சொல்லணுமா? மனசுக்குள்ளே சொன்னால் போதாதா? மனசுக்குள்ளே சொன்னால் பலன் நமக்கு மட்டும். பெரிசா சொன்னா அக்கம் பக்கத்திலே இருப்போரும் அதைக் கேட்ட படி எழுந்திருப்பார்கள். பரோபகரமாகவும் இருக்கும்.
வெளியிலே கிளம்பிப் போகும்போது ‘கேசவா’ என்று உச்சரிக்கணும்.
திருவனந்தபுரத்து அனந்த பத்மநாபசுவாமி குறித்து நம்மாழ்வார் பாடுகிறார்.
‘கெடும் இடராயவெல்லாம் கேசவா என்ன..’
‘கேசவா’ என்று சொன்னால் இடர்களெல்லாம் கெடுமாம். அதனால்தான் ஒரு காரியமாகப் புறப்படும்போது ‘கேசவா’ என்று அழைப்பது.
ஆண்டாள் இந்த அனுஷ்டானத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்.
“கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்…”
என்கிறது திருப்பாவை. ‘கேசவா கேசவா’ என்று பாடிக் கொண்டு புறப்பட்டுவிட்டோம். நீ அதைக் கேட்டும் கிடந்துறங்குகிறாயே..’ என்று துயிலெழுப்புகிறார்.
அடுத்தது உணவு கொள்வதற்கு முன்னால் கோவிந்தா என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும். கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தவனை இப்படி அழைப்பதன் மூலம் நித்ய அன்னம் கிடைக்க உத்தரவாதம் செய்து கொள்கிறோம்.
சிரமம் இல்லை, கஷ்டமான நியமமில்லை. ஹரீ, கேசவா,கோவிந்தா, மாதவா என்று எளிய நாமங்களை நாம் தினமும் செய்கிற காரியங்களோடு சேர்த்து விட்டிருக்கறதாலே எந்தவிதக் கூடுதல் முயற்சியுமில்லாமலே நாம சங்கீர்த்தனம் நடைபெற்று விடுகிறது.
ஆனால் சொல்கிற அந்த நேரத்திலே மனசு அளவு கடந்த பக்தியிலே நிரம்பியிருக்கணும். ‘சொல்லிப் பார்ப்போமே, பலனிருக்கிறதாவென்று…” அப்படின்னு பரீட்சார்த்தமாகச் சொல்லக் கூடாது.
காரணம் அவனது நாமங்கள் சர்வ உத்தமமானவை: “சர்வோத்தமஸ்ய கிருபையா…” சர்வ உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மை உச்சரிக்க வைப்பதும் அவனுடைய கிருபைதான்… கருணைதான்!
முதலிலே இந்த நித்ய காரியங்களுடனான நாம உச்சாடனத்தைப் பழகிக் கொண்டு விட்டால் மனசு மேலும் மேலும் அந்த சத் அனுபவத்தைக் கேட்கும். அந்த மனசுக்கு தெய்வானுபவம் தரக்கூடியதாய் அமையப் பெற்றது விஷ்ணுசஹஸ்ரநாமம்.
சஹஸ்ரநாமம் என்றால் ஆயிரம் நாமங்கள் – திருப்பெயர்கள். பகவானுக்கு வெறும் ஆயிரம் பெயர்கள் தானா…?
ஆயிரம் நாமங்கள் என்று வெறும் எண்ணிக்கையிலே மட்டும் சொல்ல வந்ததன்று. சஹஸ்ரம் என்பதற்கு ‘பலபல’ என்றும் பொருள் உண்டு.
‘பலபலவே ஆபரணம்; பேரும் பலபலவே’ என்று ஆழ்வார் சொல்கிறார்.
எல்லாரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம்.
‘சஹஸ்ரநாமம்’ என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது.
ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம்.
அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்… அது விஷ்ணு சஹஸ்ரநாமம். “நான் இதைக் கேட்கலையே…நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..? நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே…” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது! அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார்.
“நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன…?”
‘சுவாமி! நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு; இதை எடுத்துண்டுபோ’ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்…?” என்றார் சிஷ்யர்.
அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைத்தார்: அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்…
அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர்.
இப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது. எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான். ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும்.
ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்…? அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே…? ஞானிகளுடன் அக்ரகண்யரான பீஷ்மரால்.. பீஷ்மர் என்றாலே பயப்படத் தக்கவர் என்று அர்த்தம்.
அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர். “அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்…? போ! அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார்.
‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே – தர்மத்தைச் சொல்ல…?’ என்று நமக்குக் கேட்கத் தோன்றும்.
பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்! இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான். அவன் சொன்னது கீதை; கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு.
பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார். பகவத் குண தர்ப்பணம் என்று அதற்குப் பெயர். ‘பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி’ என்று பொருள். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும்போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்… அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்!
சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா..? அதைப் போலே சர்வ வியாபகனானவனை அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார்.
நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது… நம் சித்தத்திலும் நுழையாது.
கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா என்று கேட்டால் அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான். இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம். பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.
வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்…,
கலியுகத்திலே கடும் அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து யக்ஞமெல்லாம் பண்ண முடியாதுன்னு வேதத்துக்கே தெரியும்!
கீதையின் கடைசிப் பேச்சாக வருவதை சரம ஸ்லோகம்னு சொல்றது. மகா மந்திரம் அது. அது என்ன சொல்கிறது தெரியுமா…? ‘எல்லா தர்மங்களையும் நன்றாக விட்டு, என்னையே சரணமடைவாய்…’ என்கிறது.
தர்மங்களை விடுவது என்பது நித்ய கடமைகளான சந்தியாவந்தனம், மாத்யானிகம் போன்றவற்றை விட்டு விடுவதல்ல… நியமத்தோடு பண்ண முடியாத பெரிய யக்ஞங்களை விட்டு விடலாம் என்று அர்த்தம்.
இதற்கு இன்னொரு வியாக்யானமும் சொல்வதுண்டு… கலியுகத்திலே எல்லா தர்மங்களும் நம்மை விட்டு தூர, தள்ளி அகன்று போய்விடுகின்றன…! ‘இவனாலே யக்ஞமெல்லாம் முறைப்படி பண்ண முடியாது ‘ என்று அவற்றுக்குத் தெரியுமாம்! அதனால்தான் நம் மேலே பரிவு கொண்டு, வீணான விஷயங்களிலே நாம் காலத்தைக் கழித்துவிட அனுமதிக்காமல் மாற்றுவழி சொல்லியிருக்கிறது. யக்ஞம் பண்ணினால் என்ன திருப்தியை பகவான் அடைவானோ, அதே திருப்தியை அவன் திருநாமத்தைச் சொன்னால் அடைஞ்சுடுவான். எம்பெருமான் நாமங்களால் சமஸ்த யக்ஞ பலனும் நமக்குக் கிடைக்கும்.
பகவான் நாமத்தை யாருடைய நாக்கு மறவாமல் உச்சரித்துக் கொண்டு இருக்கிறதோ அவன் சாஸ்திரங்களை அறிந்தவனாயினும் அறியாதவனாயினும் சுத்தனாயினும், அசுத்தனாயினும், எக்குலத்தில் பிறந்தவனாயினும், சத்திய ரூபத்தை அடைகிறான். பகவானுடைய நாமத்திற்கு அத்தகைய மகத்துவம் இருக்கிறது. நாம சங்கீர்த்தனம் செய்பவன் பதிதைகளான பெண்டிர், லோபிகள் பாஷாண்டிகள் நடுவில் இருந்தபோதிலும் சீக்கிரமே விடுதலையடைந்து விடுகிறார்கள். எல்லாவிதமான அசுத்தங்களையும் அகற்றி அபாரதங்களிலிருந்து நிவாரணம் அளிப்பதும் அசுபங்களிலிருந்து மீட்டு சுகத்தை உண்டாக்குவதும் பகவானுடைய நாமம் மட்டுமே என்று பகவானின் நாமமகிமைகளை, பத்ம புராணம் நமக்குக் கூறுகிறது.
மேலும் ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே”
— ஸ்ரீ ராமா என்று ஒரு முறை பாராயணம் செய்வது, ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை
பாராயணம் செய்வதற்கு ஒப்பானது.
எல்லோரும் தூய மனதுடன் நமக்கு மன சந்தோஷத்தை கொடுக்கவல்ல பகவன் நாமத்தை தினமும் பாராயணம் செய்வோம்.
முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே . மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் .
இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே .ஆனால் ,அந்த இறைவன் ,இவற்றை விடச் சிறப்பு மிக்கவர் .தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே .அவரது முக்கல் பங்கு விண்ணில் இருக்கிறது .
பரம்பொருளின் முக்கால் பங்கு விண்ணில் விளங்குகிறது ,எஞ்சிய கால் பங்கு மீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது .பிறகு , அவர் உயிர்கள் மற்றும் ஜடப் பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பார்த்தார்.
தஸ்மாத்விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்பூமிமதோ புர:
அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் தோன்றியது . ப்ரம்மாண்டைத் தொடர்ந்து பிரம்ம உண்டாகி எங்கும் வியாபித்தார் . பிறகு அவர் பூமியைப் படைத்தார் .அதன் பிறகு , உயிர்களுக்கு உடலைப் படைத்தார் .
முதற்பபடைப்பில் படைக்கப்பட்ட தாங்கள் வேள்வி செய்வதற்கான் போருல்கலில்லை என்பதைக் கண்டனர். எனவே ,இறைவனை ஆகுதியாகக் கொண்டு மனத்தளவில் வேள்வி செய்தனர் .இயற்கையின் அம்சங்களான காலம் போன்றவற்றைப் பயன் படுத்தினர் .
முதலில் உண்டான அந்த யஜ்ன புருஷனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தார்கள் .அதன் பிறகு சாத்த்யகளும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று .பறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும் ,பசு போன்ற வீடு மிருகங்களையும் பிரம்ம படைத்தார்
பிரம்மாவை தேவைகள் பலியிட்டபோது அவரை எந்தெந்த வடிவம் ஆக்கினார்கள்? அவர் முகம் எதுவாயிற்று ? கைகால்களாக எது சொல்லப்படுகிறது ? தொடைகளாக ,பாதங்களாக எது கூறப்படுகிறது ?
தொப்புளில் இருந்து வானவெளி தோன்றிற்று .தலையில் இருந்து சொர்க்கம் தோன்றியது .பாதங்களில் இருந்து பூமியும் ,காதில் இருந்து திசைகளும் தோன்றின .அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன .
தேவர்கள் இந்த வேள்வியினால் இறைவனை வழி பட்டார்கள் . அவை முதன்மையான தர்மகள் ஆயின . எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழி பட்ட சாத்யர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ தர்மங்களைக் கடைப் பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடைவார்கள் .
தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்தில் இருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று .
பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடம் இருந்து சிறந்தவரான பிரம்ம தோன்றினார் . இறைவன் அந்த பிரம்மாவின் (பதிநானு உலகும் நிறைந்த)உருவை உண்டாக்கி அதில் வியாபித்து இருக்கிறார் . பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று .
இறைவன் பிரபஞ்சத்தில் செயல் படுகிறார் .பிறக்காதவர் ஆயினும் ,அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நாக்கு அறிகிறார்கள் .பிரம்மா போன்றோர் கூட மரீசி போன்ற மகன்களின் பதவியை விரும்புகிறார்கள்
#பெளமாஸ்வினி. அதாவது செவ்வாய் கிழமை அஸ்வினி நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தை தான் பெளமாஸ்வினி என்று பெரியோர்கள் தேவி வழிபாட்டை செய்தனர்.
அன்றைய தினத்தில் தேவியின் தோற்றத்தைப் பார்த்து வியந்த தேவர்கள், யார் நீ என்று கேட்பதாகவும், தேவி அதற்கு பதில் சொல்லும் விதமாக, தானே ப்ரும்ம ஸ்வரூபமாகவும், ப்ரக்ருதியாகவும், ஆனந்தமாகவும், விக்ஞானமாகவும், பஞ்சபூதங்களாகவும் இருப்பதாக சொல்கிறாள். அதேசமயம் , இவைகளுக்கு எதிர்மறையாக உள்ள அப்ரும்மம், அவிக்ஞானம், அபஞ்ச பூதமாக இருப்பதும் நானே என்று சொல்கிறாள்.
ருத்ர, வசுக்கள், ஆதித்ய, விஸ்வதேவர்களiன் தேஜஸ், மித்ர வருண, அக்னீ, அஸ்வினிகள் (இருவர்) – அதாவது தேவர்கள் அனைவரின் சக்தியும் நானே என்று சொல்லவும் தேவர்கள் அவளை வணங்கி
நமோ தேவ்யை, மகா தேவ்யை, சிவாயை ஸததம் நம : ||
நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதா : ஸ்ம தாம் ||
என்று துதிக்கிறார்கள்.
அக்னிவர்ணமான அந்த தேவியை, தவ வலிமையுடன் பிரகாசமாகத் தெரியும் வைரோசனியை, கர்ம பலனாக இருப்பவளை, சரணம் அடைகிறோம். அசுரர்களை நாசம் செய்யும் தேவிக்கு நமஸ்காரம்.
தேவீம் வாசமஜனயன்த தேவா: தாம் விஸ்வரூபா: பஸவோ வதந்தி
ஸா நோ மந்த்ரேஷமூர்ஜம் துஹானா தேனுர்வாகஸ்மானுப சுஷ்டுதைது
இவளே ஆத்ம சக்தி. இவளே விஸ்வ மோகினி. பாச அங்குசங்களை தரித்திருப்பவள். இவளே மகா வித்யா – இதை அறிபவன் சகல விதமான சோகங்களையும் தாண்டி விடுகிறான்.
பகவதி, உனக்கு நமஸ்காரம். தாயே, எங்களை எப்பொழுதும் காப்பாற்றுவாயாக.
இவளே எட்டு வசுக்கள், இவளே பதினொரு ருத்ரர்கள். இவளே பன்னிரண்டு ஆதித்யர்கள். விஸ்வே தேவா|| என்று சொல்லப் படுபவர்களiல், ஸோமபா, அஸோமபா (சந்திரனின் நிலைகள்) , இவளே யாதுதானர்கள், அசுர, ராக்ஷஸ, பிசாச, யக்ஷர்கள், சித்தர்கள் எனப்படும் பல ஜாதியினர்.
சத்வ ரஜஸ் தமஸ் எனப்படும் மூன்று குணங்கள். இவளே ப்ரும்ம, விஷ்ணு, ருத்ர ரூபங்களாக விளங்குகிறாள். ப்ராபதி, இந்திரன், மனு – என்ற தேவர்களும் இவளே. க்ரஹு, நக்ஷத்ர, ஜ்யோதிகள் அனைத்தும் இவளே. கலா. காஷ்டா என்ற காலத்தின் அளவைகளும் இவளே. இவளை நாங்கள் எப்பொழுதும் வணங்கி துதிக்கிறோம்.
இந்த தேவியே தான் நமது பாபங்களை விலக்குபவள், புக்தி, முக்தி தருபவள், இவளுக்கு பல பெயர்கள் – அனந்தா, விஜயா, சுத்தா, சரண்யா. சிவதா, சிவா -இந்த பெயர்களுடன் இவளைத் துதிக்கிறோம்.
இந்த தேவியின் பீஜ மந்திரம் மிகவும் சிறப்பானது. எல்லா நன்மைகளையும் தரக் கூடியது. வானளாவியது, வீதி ஹோத்ர ஸமன்விதம் (?) பிறை சந்திரன் அலங்கரிக்க அமைந்துள்ளது.
இவ்வாறாக மூல மந்திரமாக, ஒரே அக்ஷரமாக, நிர்மலமான மனத்தினரான யதிகள், நித்யம் துதிக்கின்றனர். இவர்களோ ஞானம் என்ற சமுத்திரத்தில் மூழ்கி தௌiந்தவர்கள், பரமானந்த மயமாக இருப்பவர்கள், த்யானமே இவர்களது செல்வம் என்ற பெருமை உடையவர்கள்.
இவர்கள் (இந்த ஞானிகள்) வாக்கு வன்மை – அதுவே ஸ்வரூபமாக இருப்பவர்கள், ப்ரும்ம சூத்தரமாக, ஆறு முகங்களுடன் கூடிய, சூர்யன், அவாம, ஸ்ரோத்ர, பிந்துவுடன் அஷ்டா|| – எட்டு, மற்றும் ஒர் மூன்றுடன் நாராயணனுடன் கலந்து, வாயு அதரத்திலுமாக, விச்சே என்ற நவார்ண மந்திரம், அதை எப்பொழுதும் ஜபித்து வருபவர்கள். மகத்தான ஆனந்தம் என்ற நிலையை எட்டியவர்கள்.
ஹ்ருதயம் என்ற புண்டரீக மத்தியில் இருப்பவளாகவும், இளம் சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளாகவும், பாச, அங்குச, என்ற ஆயுதங்களும், வரத, அபயம் என்ற முத்ரைகளும், உடைய கைகள், முக்கண்ணாள், ரத்தச் சிவப்பான வஸ்திரம், இவைகளுடன் பக்தர்களுக்கு விரும்பிய பலன்களைத் தருபவளாக உள்ளவளை பஜிக்கிறேன்.
மகா தேவி, உன்னை வணங்குகிறேன். மகாபயம் என்பதை போக்குபவள் நீ. தகர்க்க முடியாத கோட்டையையும் தகர்த்து விடும் சக்தி நீயே, மகா கருணையே உருக் கொண்டவளான உன்னை பஜிக்கிறேன்.
எந்த தேவியுடைய ஸ்வரூபத்தை ப்ரம்மா முதலானவர்களே அறிய முடியாதோ, அவள் அக்ஞேயா – (அறிய முடியாதவள்).
எந்த தேவியுடைய முடிவு எது என்று யாராலும் சொல்ல முடியாதோ, அவள், அனந்தா. (முடிவில்லாதவள்)
எந்த தேவியுடைய லட்சியம் இது தான் என்று வரையறுக்க முடியாதோ, அவள், அலக்ஷயா. (குறிப்பிட்டுச் சொல்ல முடியாதவள்)
எந்த தேவியுடைய பிறப்பு இதுதான் என்று தெரியாதோ, அவள், அஜா –(பிறக்காதவள் )
எந்த தேவி எப்பொழுதும் ஒருவளாக எங்கும் நிறைந்திருக்கிறாளோ, அவள் ஏகா என்ற பெயருடையவள்.
எந்த தேவி ஒருவளாக இருந்து, உலகம் முழுவதும் வியாபித்து விஸ்வசூபிணியாகவும் விளங்குகிறாளோ, அவள், நைகா- ஒருவளல்ல என்றும் பொருள்பட அவளுக்கு நைகா என்றும் பெயர்.
ஆகவே, இவளை அக்ஞேயா, அனந்தா, அலக்ஷ்யா, அஜா, ஏகா, நைகா என்ற பெயர்களால் அழைக்கிறோம்.
மந்திரங்களுக்குள் இவள் மாத்ருகா என்ற மந்திரம்.
சப்தங்களில் இவள் ஞானரூபிணி.
ஞானங்களiல் இவள் சின்மயாதீதா. (சின்மயாநந்தா என்று ஒரு பாடம்)
சூன்யங்களiல் சூன்ய சாக்ஷி.
எவளை மிஞ்சி வேறு எதுவுமே இல்லையோ, அந்த தேவியை துர்கா என்கிறோம்.
அந்த துர்கையை, மிகுந்த சிரமப்பட்டு நெருங்க வேண்டியவளான தேவியை, துராசாரங்களை அழிப்பவளை, பவ – இந்த சம்ஸாரம் என்ற சுழலில் அகப்பட்டுத் தவிக்கும் நான், இவள் தான் கரையேற்றக் கூடியவள் என்று நம்பி துதிக்கிறேன்.
இது அதர்வ சீர்ஷம் என்ற பெயருடைய உபநிஷத் மந்திரம். இதை முறையாக கற்றுக் கொள்பவன், ஐந்து அதர்வசீர்ஷ மந்திரங்களை ஜபித்த பலனை அடைவான். இந்த அதர்வ சீர்ஷ மந்திரத்தை தெரிந்து கொள்ளாமல் அர்ச்சனை செய்ய முனைபவர்கள், அதனுடைய முழு பலனை அடைவதில்லை. நுaறு லக்ஷ ஜப பலனை தரக்கூடிய மந்திரம் இது. இது தவிர, நூற்றெட்டு விதி முறைகளும் கூட சொல்லப் படுகின்றன. பத்து முறை படிப்பவன் உடனடியாக பாபங்களிலிருந்து விடுபடுகிறான்.
மகா தேவியின் பிரஸாதத்தால், மகா துர்கம் எனும் கடினமான கோட்டைகளையும் கடந்து விடுவான்.
இதை மாலையில் படிப்பவன் நாள் பொழுதில் செய்த பாபங்களிலிருந்து விடுபடுகிறான். விடியலில் படிப்பவன், ராத்திரியில் செய்த பாபங்களிலிருந்து விடுபடுகிறான். காலையும் மாலையும் படிப்பவர்கள் பாபமே இல்லாதவனாக ஆகிறார்கள். இரவின் கடைசி யாமத்தில் படிப்பதால் வாக்கு வன்மை கிடைக்கும். புதிய பிரதிமையில் ஜபித்து பூஜா விதிகளை செய்வதால், அதில் தேவதா ஸான்னித்யம் வரும். ப்ராண பிரதிஷ்டை சமயம் படித்தால் ப்ராண பிரதிஷ்டை ஏற்படும். பௌம, ஆஸ்வின மாதங்களில் மகா தேவியின் சந்நிதியில் ஜபித்தால், மகா ம்ருத்யு என்பதை கடக்கிறான். அந்த சாதகன் மகா ம்ருத்யுவை கடந்து விடுகிறான் என்பது வேத வாக்கு. இவ்வாறு உபநிஷத் சொல்கிறது…
श्रीदेव्यथर्वशीर्षं अथवा देव्युपनिषत् shrIdevyatharvashIrShaM evaM devyupaniShat
மாதவா, மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை. கண்ணனை நம் மனதார அழைப்போம்; தியானிப்போம் , அவன் நம் மனதில் குடியேறட்டும்.
ஸ்ரீமத்பாகவதம் என்கிற பழரசம்! பகவானை அடைவது சாத்தியமா? என்கிற மிக பெரிய வினாவிற்கு விடை அளிக்கிறது.
பகவானுடைய கிருபை இல்லாமல், நாம் அவரை பஜனை செய்து துதிக்கக் கூட முடியாது.
பரமாத்மாவின் கிருபை இல்லாமல், நாம் அவரைத் தெரிந்து கொள்ளவும் முடியாது.
ஏனென்றால், பகவான் சாதன-சாத்தியமானவரில்லை! (சாதனங்களால் – உபகரணங்களால் அடையத்தக்கவரல்ல.)
அவர் அப்பியாச-சாத்தியமானவருமில்லை! (தவம், யோகம், விரதம் – இவைகளாலும் அடையத்தக்கவரல்ல.)
யாராவது பயிற்சியின் பலத்தால் அவரை த் தெரிந்து கொள்ள விரும்பினார் என்றால் – விஸ்வாமித்திரர் அறுபதாயிரம் வருஷங்கள் தபஸ் செய்தார்; ‘மேனகை’ என்கிற பெயரில் ஒரு அப்ஸரஸ் வந்தாள்; எல்லாவற்றையும் தரைமட்டமாக்கி விட்டு போய் விட்டாள்! என்ன கிடைத்தது?
பராசரமுனிவருக்கு இந்த சாமர்த்தியமிருந்தது – அவர் பகலை இரவாக்கி விட முடியும்; இரவாக ஆக்கியும் விட்டார்! ஆனால், என்ன கிடைத்தது? அப்பியாசம் செய்தார்களே, ஏதாவது கிடைத்ததா?
அனுஷ்டானங்களின் (தவம், யோகம்) பலத்தால் பகவானைத் தெரிந்து கொள்வது என்பது முற்றிலும் சாத்தியமற்றது. பயிற்சிகளின் பலத்தால் அவர் கிடைக்கவே முடியாது.
சாதனங்கள் (உபகரணங்கள்) அவரை அண்டுவதற்கு திராணியேயற்றவை!
பகவானை பயிற்சிகளால் அடைவது சாத்தியமில்லை; கருவிகளால் அடைவதும் சாத்தியமில்லை. அவரை அடைவது என்பது அவருடைய கிருபையால் மட்டுமே சாத்தியமாகும்! யார் மேல் அவர் கிருபை செய்கிறாரோ, அவருக்கு பகவான் உடனே கிடைத்து விடுவார்.
கிடைக்க வேண்டுமென்றிருந்தால், சபரிக்கு கிடைத்து விடுகிறார்! விதுரரின் மனைவிக்கு கிடைத்து விட்டார்!
தலைகீழாக இருந்து கொண்டு தவம் செய்பவர்களுக்குக் கூட அவர் கிடைப்பதில்லை!
2
பாகவதத்தில் வருகிறது,
न दानं न तपो नेज्या न शौचं न व्रतानि च ।
प्रीयतेऽमलया भक्त्या हरिरन्यद् विडम्बनम् ॥
ஒரு பெரிய விஷயம் தெளிவாகிறது – தானம் செய்வதால் பகவான் கிடைப்பார் என்பது நிச்சயமில்லை! கிடைக்கக்கூடும்; உத்திரவாதமில்லை!
யாராவது தவம் செய்து, அவரை அறிந்து கொள்ள விரும்பினால் – முடிவதில்லை! ஏனென்றால், எவ்வளவுக்கெவ்வளவு தவம் அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கர்வம் அதிகமாகி விடுகிறது! ‘நான் அவ்வளவு தவம் செய்து விட்டேன், நான் அவ்வளவு தவம் செய்து விட்டேன், நான் அவ்வளவு தவம் செய்து விட்டேன்’ – என்கிற நினைப்பும் அதிகமாகிறது! அந்த அஹங்காரத்தில் செய்த தவம் எல்லாமே நஷ்டமடைந்து கொண்டே போய் விடுகிறது! அதனால், பகவான் கிடைக்கிற கேள்வியே எழுவதில்லை!
யக்ஞத்தினால் அவர் கிடைப்பார் என்பதும் நிச்சயமில்லை! முப்பது நாள் விரதத்தில் அறுபது தடவை பசியோடிருந்தால் கிடைப்பாரா என்றால் – விரதங்களாலும் அவர் கிடைப்பதில்லை! இருந்து கொள்ளுங்கள் பசியோடு! இன்று ஏகாதசி-விரதம், நாளை துவாதசி-விரதம், நாளை-மறுநாள் திரயோதசி-விரதம், அடுத்து சதுர்தசி விரதம் ..! இருங்கள் விரதம் தினப்படி!
எந்த பக்தியில் கேட்டு வாங்கும் இச்சையிருக்கிறதோ – வேண்டுதலிருக்கிறதோ, அது மாசுபடிந்த பக்தி! ரெண்டு ரூபாய்க்கு கற்பூரத்தை ஏற்றியாகி விட்டதா – நாம் ஆரத்தி செய்கிறோம் – சுக-சம்பத்துக்கள் என் வீட்டுக்கு வரட்டும்; கஷ்டங்கள் எல்லாம் தொலையட்டும். நமது வழிபாட்டில் பக்தியைப் பற்றி பேசாமல் – ஞானத்தைப் பற்றி பேசாமல் வேண்டுதல்கள் மட்டுமே மண்டி இருப்பது மாசுபடிந்த-பக்தி!
இது பக்தி இல்லை.
பக்தியின் சித்தாந்தத்தில் பரமாத்மாவிடம் வேண்டுதல்களே இருப்பதில்லை! நாம் ஏன் கேட்க வேண்டும்? அவரோ நம் இதயத்தில் உட்கார்ந்திருக்கிறார்! அவருக்கு எல்லாமே தெரியும்!
பகவானிடம் நாம் எதையாவது கேட்டோம் என்றால், நாமே அவரை நம்முடைய பார்வையில் தாழ்த்தி விடுகிறோம்!
நமக்கு எது வேண்டும் என்று தெரியாதவரிடம் தான் நாம் கேட்க வேண்டும். யாருக்கு அது தெரியவில்லையோ அவர் எப்படி பகவானாவார்?
கீர்த்தனம் ஆகிறது வார்த்தைகளால்; பஜனை ஆகிறது மனதால்; ஆனால், பிரார்த்தனை ஆகிறது ஆத்மாவால்! கீர்த்தனையை நாம் பாடுகிறோம்; பஜனையை நாம் செய்கிறோம்; பிரார்த்தனையில் நாம் லயித்து விடுகிறோம்! ஏனென்றால், அது ஆத்மாவால் ஆகிறது! பிரார்த்தனைக்குப் பிறகு, எந்த சூத்திரம் மிஞ்சுகிறதோ அதனுடைய பெயர் காத்திருத்தல்!
நாம் பிரார்த்தனையையே மட்டுமே செய்ய வேண்டும்; நாம் அவருடைய குணாதிசயங்களை மட்டுமே பாட வேண்டும். மீதி எல்லா பாரத்தையும் அவர் மேலேயே விட்டு விட வேண்டும்.
4
கீதையில், அர்ஜுனரிடம் கிருஷ்ணர் சொன்னார், ‘நீ இப்படி செய்.’
அர்ஜூனர் சொன்னார், ‘செய்கிறேன்.’
ஐந்து நிமிஷத்திற்குப் பிறகு, அவர் சொன்னார், ‘அப்படி செய்.’
‘செய்கிறேன்.’
பத்து நிமிஷத்திற்குப் பிறகு, ‘இப்படி செய்.’
‘செய்கிறேன்.’
அரை-மணிக்குப் பிறகு அவர் மாறி விட்டார், ‘இல்லை, இல்லை. அர்ஜுனா, நீ அப்படி செய்.’
அர்ஜூனர் சொன்னார், ‘இதோ பாருங்கள் – நான் முதலிலிருந்தே அரைப்பயித்தியம்; நீங்கள் என்னை முழுசாகவே பயித்தியமாக்கி விடுவீர்கள்!’
பகவான் சொன்னார், ‘ஏன்?’
இரண்டு-இரண்டு நிமிஷத்தில் மாறி விடுகிறீர்கள்! தெளிவாக ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் – என்ன செய்ய வேண்டுமென்று?’
கிருஷ்ணர் சொன்னார், ‘நான் சொல்வதை நீ செய்வாயா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்; அதனால் தான், மாற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.’
मन्मना भव मद्भयक्तो मद्याजी मां नमस्कुरु ।
என்னுடைய பக்தனாகவே இரு! என்னுடைய பஜனையே செய்! யக்ஞத்தை எனக்காவே செய்! என்னையே நம்ஸ்கரி!
யார் என்னை அனன்யமாக சிந்தனை செய்கிறார்களோ, அவர்களுடைய யோக-க்ஷேமத்தை நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!
அனன்ய என்பதற்கு அர்த்தம், ந + அன்ய = அனன்ய.
பக்தனுடைய திருஷ்டியில் பகவானைத் தவிர வேறு எதுவும் தெரிவதேயில்லை! இந்த அனன்ய-பாவனை யாருடைய ஜீவனத்தில் வந்து விடுகிறதோ – நிஷ்காம பக்தி யாருடைய மனதில் வந்து விடுகிறதோ, அதுவே நிர்மல-பக்தி!
பகவான் நிர்மல-பக்தியால் கிடைக்கிறார்!
நிர்மல-பக்தியில் வேண்டுதல்கள் இருப்பதில்லை; இச்சைகள் இருப்பதில்லை.
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை
மாதவா, மதுசூதனா என்ற மனதில் துயரமில்லை.
அனைவர் மனதிலும் கண்ணன் குடியேறட்டும். ஆனந்தமாக அவன் பிறந்த நாளை நாம் எல்லோரும் கொண்டாட வாழ்த்துக்கள்.
அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம் கைகளில் மருதாணி வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது தேவி இன்னும் மகிழ்கிறாள்.
மற்ற காலங்களில் வைத்து கொள்ளாவிட்டாலும் நவராத்ரி காலங்களில் ஆவது அவசியம் வைத்துக்கொண்டு பூஜிக்கலாம்.
சிறந்த அம்பாள் பக்தையாக விளங்கிய ஒரு பெண்மணிக்கு தனது கணவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனை அணுக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் இருப்பினும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தேதி வைத்துவிட்டனர். மிகவும் வருத்தப்பட அந்த பக்தை ஒரு ஸ்ரீவித்யா உபாசகரை நாடினார். அந்த பக்தையாக அம்பாளிடம் பிரார்த்தித்த உபாசகர் 5 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு சென்று வரும் சுமங்கலி பெண்களுக்கு மருதாணி வைத்து வேண்டிகொள்ளுமாறு சொன்னார். 4 வெள்ளிக்கிழமைகள் செய்தானது. 5 ஆம் வாரம் ஆலயத்திற்கு சோதனையாக ஒருபெண்களும் வரவில்லை, பயந்த பக்தை அம்பாளை பிரார்த்தித்தாள். கருணை கொண்ட அம்பிகை சிறு பெண் (பாலா) ரூபத்தில் கோயிலுக்குள் ஓடி வந்தாள். அக்கா எனக்கு மருதாணி வச்சிவிடறீங்களா? என கொஞ்சி மழலையாக கேட்டாள். சுமங்கலிக்கு தானே வைக்கவேண்டும், வந்ததோ சிறு பெண் என தயங்கிய பக்தை அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு, ஆடம் பிடித்த குழந்தைக்கு கைகளில் கொப்பி கொப்பியாக மருதாணி வைத்து விட்டு, நான் கொஞ்சம் மருதாணி தருகிறேன் நீ சென்று உன் அம்மாவுக்கும் வைத்து விடு என்று கேட்டுக்கொள்ள அப்படியே செய்யவதாக சொல்லிவிட்டு ஆலயம் விட்டு ஓடிவிட்டாள். வீட்டிற்கு வந்து அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு மறுநாள் அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டு, சோதனை செய்த போது மருத்துவர்கள் வியந்தனர், புற்றுநோயாக மாற இருந்த செல்கள் அனைத்தும் சாதாரண செல்களாக மாறிவிட்டதாகவும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறிவிட்டனர். வியந்த நன்றிப்பெருக்கோடு ஸ்ரீவித்யா உபாசகரிடம் சென்று சுவாமி நான் 5ஆம்வாரம் பூர்த்தி செய்ய முடியவில்லை சுமங்கலிக்கு வைக்கல. ஆனாலும் அம்பாள் திருவருள் மூலம் கணவர் நலம் பெற்றார் என்றார். அப்போது சிரித்த ஸ்ரீவித்யா உபாசகர், வந்தது சாஃஷாத் அம்பிகை தான் என்றும், அவளுக்கே மருதாணி வைக்கும் பெரும் பேறு உன் பக்தியால் கிடைத்தது என்று கூறினார். கண்ணீர் மல்க அம்பிகைக்கு நன்றி சொன்னார் அந்த பக்தை..
நாமும் அம்பாளை பூஜிக்கும் தருணம் மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம். அம்பிகை அருள் பெறலாம்.. ஜெய ஜெய ஜெகதாம்பிகே ஜெய ஜெய காமாக்ஷி!
மருதாணியின் மஹிமை
ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி. அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும். அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை, ப்ரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா, செஞ் சடா அடவி மேல் ஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான், குமாரன் கிருபாகரனே!
எளிமையான பொருள்: பேறு, தவம் ரெண்டுமே இல்லாத அடியேனை, வாழ்க்கையில் வந்து ஒட்டிக் கொண்ட சேற்றை எல்லாம் கழுவி என்னை மீட்டவா! சடாமுடியில் கங்கையாறு, நாகம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைச்சந்திரன் என்று ஐந்தும் சூடியுள்ளான் ஐந்தெழுத்தான்! அந்தச் சிவபெருமானின் குமாரனே, குமரனே! உன் கிருபையால் தான் அடியேனுக்கு உய்வு!
கொஞ்சம் பிரிச்சி மேயலாம்!
செஞ் சடா அடவி மேல் = என்ன ஒரு உருவகம் பாருங்கள்! சிவபெருமானின் ஜடாமுடி அடவியாம்! அடவி=காடு! அவர் ஜடா முடி, காடு போல் அடர்ந்து இருக்கு! மறைக்காடு ஈசனுக்கு மயிர்க் காடு!
அந்தக் காட்டில் என்னென்ன எல்லாம் இருக்கு? ஓடும் காட்டாறு இருக்கு! அதில் இளைய நிலா பொழிகிறது! கொன்றை/தும்பைப் பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி ஆற்றில் தவழ்கின்றன! ஆறு போலவே வளைந்து வளைந்து நாகங்களும் சடைக் காட்டில் உலாவுகின்றன! எப்படி இருக்கு கானகக் காட்சி?
1.ஆற்றை = கங்கையை
பணியை = பாம்பை
இதழியை = கொன்றைப் பூவை
தும்பையை = தும்பைப் பூவை
அம்புலியின் கீற்றை = சந்திரனின் பிறையை புனைந்த பெருமான் = அணிந்த சிவ பெருமான்
சிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா? அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்! கொன்றைப் பூ = மஞ்சள் நிறம்! கொத்து கொத்தாப் பூக்கும்! தொலைவில் இருந்து பார்க்க ஏதோ நெருப்புக் கொத்து போலத் தென்படும்!
தும்பைப் பூ = வெள்ளை நிறம்! பார்க்க சங்கு போல இருக்கும்! பரிசுத்தமான வெள்ளை! மென்மையானதும் கூட! வீட்டில் சுடும் இட்லி தும்பைப்பூ போல இருக்குன்னு சொல்வாங்க தானே?
இப்படி எல்லாமே வெண்மை/குளிர்ச்சி பொருந்திய பொருட்கள் தான் சிவபெருமானுக்கு! ஈசன் வெப்பம் மிகுந்தவன் = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்! பெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன் = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்!
இப்படி தலையில் இருந்து பாதம் வரை, வெள்ளலங்காரம் செய்து கொண்டுள்ள ஈசன்… குமரன் கிருபாகரனே = அந்த ஈசனின் குமரன், மிகவும் கிருபை உள்ளவன்! கிருபா-ஆனந்த-வாரி = கருணை ஆனந்தக் கடல்! எப்படி என்ன பெருசா கருணை காட்டிட்டான்பா ஈசனின் குமரன்?
பேற்றை தவம் சற்றும் இல்லாத என்னை= பேறு = தானா அமையும்! தவம் = நாம செய்யணும்! ஒன்னு பூர்வீகச் சொத்து! இன்னொன்னு சுய சம்பாத்தியம்! நற்பேறு = இது முன் செய்த பாவ புண்ணியங்களால் பெறுவது! பெறுவதால் தான் அதுக்குப் பேரே பேறு! தவம் = இது இப்போது நாம் செய்யும் நல் வினைகள்!
பூர்விகச் சொத்து வானத்தில் இருந்து தானா குதிக்காதே! அதையும் யாராவது ஒருத்தர் சம்பாதிச்சி தானே வைக்கணும்? நேற்று அம்மா-அப்பா செஞ்ச புண்ணியம், இன்று நமக்கு நற்பேறு! இன்று நாம செய்யும் தவம், நாளை நம்முடைய மக்களுக்கு நற்பேறு!
சரி, தவம்-ன்னு எதுக்குச் சொல்வானேன்? காட்டுல போயி தவம் செஞ்சா தான் நற்பேறு கிடைக்குமா என்ன? அப்படின்னா யாருமே தவம் செய்ய மாட்டோமே! காட்டுக்குப் போயி தவம் செஞ்சா, அப்பறம் எப்படி பதிவு போடறது? ஜிமெயில் செக் பண்ணுறது? நண்பர்களுடன் ஜி-டாக்குவது?
தவம்-ன்னா ஒழுக்கம்! தவ வாழ்க்கை-ன்னா ஒழுகி வாழ்வது! தவப் புதல்வன்-னா ஒழுக்கமான புதல்வன்! அல்லவை தேய, நல்லவை செய்தல் = அது தான் தவம்!
மனதால் கெடுதி நினைக்காது, தன்னால் முடிஞ்ச நல்லவை செய்தாலே அது தவம் தான்! செய்யாதன செய்யோம்! தீக்குறளை சென்று ஓதோம்! ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்!
உண்டியலில் பணம் போட்டு விட்டு, கோயிலில் உட்கார்ந்து, “அவன் யோக்கியமா? இவ யோக்கியமா” என்று ஒரு சிலர் புறம் பேச… பணமில்லாது போனாலும், கிடைத்த பிரசாத உணவை, கிடைக்காதவருடன் பகிர்ந்து கொள்ளுதலும் ஒரு தவம் தான்!
இளமையில் தீய வழிகளில் ஈடுபட்டவர் தான் அருணகிரி்! அடுத்த சில பதிவுகளில் சில கதைகளைப் பார்ப்போம்! நோயுற்ற போது, கன்னிகள் கிடைக்காமல், கன்னிப் போனவர்! இறுதியில் சொந்த அக்காவே, “உனக்குப் பெண் தானே வேண்டும்? இதோ, நான் இருக்கிறேன்!” என்று மனமுடைந்து சொல்ல, இதயம் வெடித்துப் போய் மாறினார்! அவர் தவம் செய்யவில்லை என்றாலும், அவர் பெற்றோரும் தமக்கையும் செய்த தவம், அவருக்குப் பேறாக அமைந்து ஆட்கொண்டது!
ப்ரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா= எப்படிச் சொல்றாரு பாருங்க! சேற்றைக் கழிய-ன்னும் போது அப்படியே சேறு ஒழுகறது தெரியல? சேறோடு எவ்வளவு நேரம் அப்படியே இருப்பீங்க? யோசிச்சிப் பாருங்க! உடனே கழுவிக் கொள்ளணும்-னு தோனும் அல்லவா? ஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை கழுவிக் கொள்ள மட்டும் மனசுக்கு தோனுவதே இல்லையாம்! அதான் விசித்திரம்! வியப்பு!
பிறக்கும் போதே தாயின் வயிற்றில் உள்ள சேற்றில் மிதக்கிறோம்! வெளி வந்து செய்யும் கர்ம வினைகள் எல்லாம், உடனே சேற்றைப் போல் நம் மீது ஒட்டிக் கொள்கிறது! ஏதோ கொஞ்சமாகக் கழுவிக் கொண்டாலும், கறை அவ்வளவு சுலபமாகப் போக மாட்டேங்குது! உஜாலா, சர்ஃப் எக்செல் எதுவும் வேலைக்காவது!
இப்படிப் பிறவிச் சேற்றில் சிக்க வைத்தானா முருகன்? இல்லையில்லை! கருணை என்னும் கங்கையை நம் மேல் பாய்ச்சி, நம் சேற்றைக் கழுவுபவன் தான் முருகன்! சேற்றைக் கழிய வழி விட்டவா! சேற்றைக் கழுவிய பின், தூய்மை வந்து விட்டது! வழி பிறந்து விட்டது! இனி என்ன? ஒவ்வொன்றாய் அலங்காரம் தான்! நமக்கும் அலங்காரம், கந்தனுக்கும் அலங்காரம்!!
ஒரு குழந்தை கையில் 6 மிட்டாய் இருக்குன்னு வெச்சுக்கோங்கோ, அதை எல்லாருக்கும் வினியோகம் செய்யும் போது கடைசியாக ஒரு மிட்டாயை மட்டும் அந்த குட்டி குழந்தை தன்னோட அழகான வாயினில் இரண்டு மூணு தடவை வச்சு ருசி பாத்துட்டு கன்னத்தில் குழி விழும்படியா ஒரு பொக்கை வாய் சிரிப்பு சிரிச்சா அந்த மிட்டாய் எவ்வளவு மதுரமான தேன் போன்ற ஒரு வஸ்துவா இருக்கனும்? அதை மாதிரி தான் சாக்தமும், பகவத்பாதர் தன்னோட ஆத்மார்த்தமான ஆராதனையா எடுத்துண்டது சாக்தத்தைதான்..:) அதனால தான் அவர் பல உம்மாச்சி ஸ்லோகம் எழுதின அதே வேளையில், அம்பாள் சம்பந்தமா தன்னை மறந்து நிறையா பண்ணி வெச்சுருக்கார்.
அவரோட கற்பனாசக்தி காலை நேர சூரியனாய்,மணக்கும் மல்லிகையாய்,அதில் கிறங்கும் வண்டாய், பொதிகைமலை தேனாய்,தாமிரபரணி ஊற்றாய்,அதில் எழும் அழகிய காற்றாய், கார்காலத்து மயிலாய்,அதற்கு இசைக்கும் கருங்குயிலாய்,மாலை நேர இளவெயிலாய் பல வர்ணஜாலம் காட்டியது அம்பாள் மீதான வர்ணனையில் தான் என்பது உலகம் அறிந்த உண்மை.
சாக்த முறையை அதிதீவிரமா கடைபிடிக்கறவாளுக்கு சாக்தர்கள் என்று பெயர். மாத்ரு பாவம் இவா கிட்ட ரொம்ப ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். எல்லா வஸ்துவும் இவாளுக்கு அம்பாளாவே தெரியும். அவாளுக்கு கிடைக்கும் எல்லா ஐஸ்வர்யமும் அம்பாள் போட்ட பிச்சை! எனும் எண்ணம் அழியாமல் இருக்கும். ஒரு வசனம் கூட உண்டு
//உண்ணும் உணவு,உடுக்கும் உடை,பருகும் நீர்,மெல்லும் வெற்றிலை எல்லாம் அவள் இட்ட பிச்சை//னு பெருமையா சொல்லிப்பா.
இந்த அம்மா இருக்காளே அவளுக்கு தாராளமான மனசு, குழந்தைகள் கேட்டது சாதாரணமான பிற வஸ்துவா இருந்தாலும் அவள் பரவஸ்துவையே சர்வசாதாரணமா “இந்தா கோந்தை! வெச்சுக்கோ சரியாஆஆ!”னு குடுத்து விடும் இளகின மனசு.
என்னை போல் ஒரு அசட்டுப் பிள்ளை “இங்க கொஞ்சம் பாரேன் அம்மா!னு தொடர்ந்து கேட்டுண்டே இருந்தானாம், ஆனா நம்ப அம்மாவோட காதுல வேற மாதிரி விழுந்து அவள் 14 லோகத்துலையும் கிடைக்கர்த்துக்கு அதிசயமான சாயுஞ்யத்தை குடுத்துட்டாளாம். இதை செளந்தர்யலஹரில ஒரு ஸ்லோகத்துல அழகா சொல்லி இருப்பார் அந்த காலடி மைந்தன்.
“ஹே பவானி! இந்த தாசனை கொஞ்சம் பாக்கக்கூடாதோடியம்மா! னு நாம கேட்டா அது தயாளமான மனசுடைய அவளோட காதுல “பவானித்வம் தாசே”னு விழுந்து “இந்தா கோந்தை!”னு சர்வசாதாரணமா சர்வலோக சக்கரவர்த்தியா ஆக்கிடுவா. (பவானித்வம் அப்பிடின்னா தலைமைனு ஒரு அர்த்தம் வரும் & நான் நீ எனும் பேதம் அற்ற நீயே நானாகிறேன் எனும் நிலைனும் ஒரு அர்த்தம் வரும்).
இதே அர்த்தம் வரும்படியான ஒரு அந்தாதிப் பாடல் நம்ப அபிராமிப்பட்டரோடது,
//தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே //
அம்பாளோட ஆராதனைல கேரள தேசத்திலையும், நம்ப தமிழ் நாட்டுலையும் இஞ்சிக்கு சிறப்பு இடம் உண்டு.
பாசிப்பருப்போடு சேர்ந்து செய்த பொங்கலாகட்டும்,பானகமாகட்டும், நீர்மோராகட்டும் எல்லாத்துலையும் இஞ்சியோட ருசி இருக்கும்.
இஞ்சி செழுமையாக நல்ல நீர்வளத்தோட இருக்கும் போதும் சரி, நாளாவட்டத்துல காய்ஞ்சு போய் சுருங்கி சுக்கா ஆகும் போது அதோட ருசில எந்த வித்தியாசமும் இருக்காது, அதே போல ஒரு உண்மையான சாதகன் லோகத்தையே பரிபாலனம் பண்ணும் ராஜாவா ஆனாலும் சரி, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் நடுத் தெருவில் நின்னாலும் சரி அம்பாளிடம் அவன் கொண்ட திடமான வாத்சல்யம் மாறாம இருக்கணும், அதுதான் உண்மையான சாக்தனுக்கு உரிய லக்ஷணம். அதை உணர்த்தர்துக்கு தான் இஞ்சி அடிக்கடி சேர்க்கப்படுகிறது.
முரன் என்றொரு அசுரன் இருந்தான். தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அதோடு எல்லா உலகங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையில் இந்திரலோகத்தின் மீது படையெடுத்தான். முரனை எதிர்கொள்ள முடியாத இந்திரன் சிவபெருமானிடம் சரண் அடைந்தார். அவரோ திருமாலிடம் செல்லச் சொன்னார். இந்திரன் தேவர்களுடனும் முனிவர்களுடனும் திருமாலிடம் சென்று சரணடைந்தார். அவர்களைக் காப்பதற்காக இந்திரன் மற்றும் தேவாதி தேவர்கள் சூழ முரனுடன் திருமால் போரிட்டார். தனி ஒருவனாக நின்று அனைவரையும் சிதறி ஓடச் செய்த முரன் திருமாலுடன் கடுமையாகப் போரிட்டான். பல ஆண்டுகள் கடுமையாகப் போர் நடந்த போதிலும் முரனை ஒன்றும் செய்ய முடியவில்லை. சங்கு சக்கரம் முதலான ஐந்து வகை ஆயுதங்களைப் பிரயோகித்தும் முரனை அழிக்க முடியவில்லை.
பல ஆண்டுகள் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பால் திருமால் இமயமலையில் உள்ள பத்ரிகாசிரமம் சென்று அங்கு அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த சிம்ஹாஹி என்னும் குகையில் பள்ளி கொண்டார். அவரைப் பின் தொடர்ந்து வந்த முரன் குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த திருமாலைக் கொல்வதற்காக தன் உடைவாளை உருவினான்.
அப்போது திருமாலின் உடலிலிருந்து தர்மதேவதை கன்னியாக வெளிப்பட்டு அவனை எதிர்த்து நின்றாள். முரன் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராவதற்குள் அவனைத் தனது ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது.. பிறகு தர்மதேவதை மீண்டும் திருமாலிடம் வந்து சேர்ந்தாள்.தூக்கம் கலைந்து எழுந்த திருமால் தர்ம தேவதையை ஆசீர்வதித்து அவளுக்கு ‘ஏகாதசி என்று பெயரிட்டார்அந்த ஏகாதசி நன்னாள், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி ஆக (11ம் நாள்) இருந்ததால், அன்று முதல், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது.
ஏகாதசி வகைகள்
1 ) மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசியில் தொடங்கிய விரதத்தை, பின்னர் வந்த ஏகாதசி நாட்களிலும் அனுஷ்டித்து, பலரும், பல்வகைப் பயன்களைப் பெற்றனர். அப்பயனின் அடிப்படையில், ஒவ்வொரு ஏகாதசிக்கும், அதன் சிறப்பைக் குறிக்கும் அடைமொழி நிலைத்து விட்டது.
2 ) மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானஸர் மேற்கொண்ட விரதத்தின் பயனாக அவருடைய முன்னோர்கள் (முக்தி) வைகுண்ட பதம் அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு (மோக்ஷ) வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் பெயர்.
3) தை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு சபலா. (விருப்பை நிறைவிப்பது) என்று பெயர். நாடு கடத்தப்பட்ட மகிஷ்மதராஜனின் மகன், எதுவும் கிடைக்காததாலேயே, உண்ணாமலும், பசி, தாகத்தினால் உறங்காமல் இருந்தாலும் கூட, திருமால் அருளால் மீண்டும் அரசாட்சி பெற்ற நாள்.
4) தை மாதம், வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா (குலம் தழைக்க மகப்பேறு அருள்வது) என்று பெயர். பல வருடங்கள் புத்திரப்பேறு இன்றி வருந்திய சுகேதுமான் – சம்பா என்ற அரச தம்பதியர்க்கு குழந்தை அருளிய பெருமையுடையது.
5) மாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு ஷட்திலா (ஷட் = ஆறு; திலா = எள்) என்று பெயர். உடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு வகையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, திண்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள். பிரமகத்தி தோஷத்தை போக்கும் நாளுமாகும் .
6) மாசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஜயா (நினைத்ததை அடைவதில் வெற்றி கோருவது) என்று பெயர். மால்யவான் என்ற கந்தர்வன் தெய்வ அபசாராத்தால் ஏற்பட்ட அல்லல் நீங்கிய நாள்.
7 ) பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா (இழந்த அரச பதவியை மீட்பது) என்று பெயர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரானே, பகதாலப்ய முனிவரின் பரிந்துரைப்படி விரதமிருந்து அரச பதவியை மீளப்பெற்ற நாள்.
8) பங்குனி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகி (அளப்பரிய திறன் வாய்ந்த நெல்லி) எனப் பெயர். ருத்ராக்ஷ மரம் சிவத் தோன்றல் போல, நெல்லி திருமாலின் தோன்றலாகும். எல்லா தெய்வ சக்திகளும் கோமாதா காமதேனுவுள் அடக்கம் போல, நலன் பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம். ஆதிசங்கரருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி, அவரை கனகதாரா துதியை பாடச் செய்து தங்க மழையை கொட்டுவித்தது போல பெரும் பயன் அருள வல்லது.
9) சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி பாபமோசினி (தீவினையால் விளைந்த இன்னலை அழிப்பது) எனப்படும். மேதாவி முனிவரை காமவயப்படுத்தியதால் மஞ்சுகோஷாவுக்கு விளைந்த அல்லலைப் போக்கிய நாள்.
10) சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி காமதா எனப்படும். பிற கடமைகளை நிறைவேற்றாமல், மித மிஞ்சிய பாலுறவில் ஈடுபடுவதால் நேரும் இன்னலை நீக்கி அருளும் நாள்.
11) வைகாசி மாதம் தேய்பிறை ஏகாதசி வரூதினி (இம்மையிலேயே நன்மை தருவது) எனப்படும். மாந்தாதாவை இம்மையிலும், மறுமையிலும் நன்மை அடையச் செய்த நாள். அன்னதானத்திற்கும் மேலான வித்யாதானத்தின் பலனை அருளும் நாள்.
12) வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி மோகினி எனப்படும். மோகத்தில் ஆழ்ந்திருந்த அருணகிரியை முருகன் காத்தது போல. வாழ்வு போகங்களிலேயே ஆழ்ந்ததால் நேரிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் த்ருஷ்டிமான் என்ற அரச குமாரன் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, விரதமிருந்து மீண்ட நாள். அனைவரையும் மோகத்திலிருந்து விடுவிக்கும் நாள். இதன் பெருமையை வசிஷ்டர் விவரித்து கூறியுள்ளார் .
13) ஆனிமாதம் தேய்பிறை ஏகாதசி அபரா (மறுமைக்கு வழி காட்டும்) எனப்படும். தெரியாததை மறைத்து, அறிந்தவர் போல நடக்கின்ற தவற்றை நீக்கிடும் நாள்.
14) ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ( நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர்.
15) ஆடிமாதம் தேய்பிறை ஏகாதசியை மோகினி என்பர். பொதுவாகவே, போகிகளாக இருக்கும் நமக்கு அதற்கு மேலான யோக நிலையை அடைந்திட அருளும் நாள்.
16) ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயனி என்று பெயர். ஒவ்வொரு ஜீவராசியும் வெவ்வேறு காலங்களில் ஓய்வு எடுப்பது போல, மகாவிஷ்ணு ஓய்வாக சயனிக்கத் துவங்கும் நாள்.
17) ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி காமிகா எனப்படும். நம்மை அத்தியாவசியத் தேவைகட்கு கஷ்டப்படாமல் காத்து அருளும் நன்னாள்.
18) ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கும் புத்ரதா என்று பெயர். மஹீஜித் மன்னர் இந்த நாள் விரதமிருந்து புத்திர பேறு அடைந்தார் .
19) புரட்டாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா (வருத்தம் நீக்கும்) என்று பெயர். உண்மை பேசுவோரின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதற்காக, சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஹரிச்சந்திர மகாராஜன் விரதமிருந்து, மீண்டும் நாடும் நலனும் பெறச் செய்த பெருமையுடையது.
20) புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி பத்மா எனப்படும். நாராயணன் (நாரா = நீர், அயனன் = துயில்பவன்) அருளால் மழை பொழிவித்து எங்கும் வளமை கூட்டும் பெருமையுடையது. இதை சூரிய வம்ச மன்னர் மாந்தாதா கடைபிடித்து தன் ராஜியத்தில் மழை வருவித்தார் .
21) ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி இந்திரா எனப்படும். நற்செயல்கள் புரியாமையால் விளைந்த இன்னலைப் போக்குவது. பிதுர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி இது ஆகும் .
22) ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஆகும் . நம் பாவங்களை நீக்கும் அங்குசமாக உள்ளத்தால் இதற்கு பாபாங்குசா என்று பெயர்.
23) கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசி ரமா (மகிழ்வு கூட்டுவது) எனப்படும். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள்.
24) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி ப்ரபோதினி என்று கூறப்படுகிறது. இன்று பகவான் தன் உறக்கத்தை விட்டு எழுந்திரிக்கும் நாளாகும். இன்று துளசியால் பகவானை பூஜிப்பது மிகவும் நலம் .
வருடத்திற்கு 365/366 நாள் என்பதாலும், திதிகளில் கால அளவு குறைந்து, கூடுவதாலும் ஒவ்வொரு ஏகாதசிக்குமிடையே சரியாக 15 நாள் இடைவெளி இல்லாததாலும் 2,3 வருடங்களுக்கொரு முறை, ஒரே வருடத்துக்குள் 25 ஏகாதசிகள் வரும். அது உத்தமோத்தமமான கமலா ஏகாதசி எனப்படும்
25 ) கமலா ஏகாதசி . ஜெயசர்மா என்பவன் இதை கடைபிடித்து தன் வீட்டில் உள்ள கஷ்டத்தை விரட்டி திருமகளை குடியேற்றினான் . மிகவும் அபூர்வமாக வரும் இந்த நாளை கடைபிடிப்பது மிகவும் உயர்ந்தது ஆகும் .
*ஏகாதசி விரத முறையும் அதன் மகிமையும்*
அமாவாசையிலிருந்தும் பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி. ஏகாதசி விரதமிருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமியன்று ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.
ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்த பிரசாதங்கள் கிடைத்தால் கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன. அதே போல ஏகாதசி விரதம் இருப்பவரைப் பலவந்தப்படுத்தி உண்ணச் செய்பவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்கின்றன. அதன்பின் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும். துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது. அன்று பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும். மகாவிஷ்ணு லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
பாரணையில் அகத்திக்கீரை நெல்லிக்காய் சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும். பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று எக்காரணத்தைக் கொண்டும் துளசி இலையை பறிக்கக்கூடாது. எனவே தேவையான துளசி இலையை முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும் முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறினார் எனில் அதை விட கூறுவதற்கு வேறு சிறப்பு இல்லை.
இந்த ஏகாதசியை ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் அநுஷ்டித்திருக்கிறார்கள். அம்பரீஷன் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம். அவன் சப்த த்வீபங்களோடு கூடிய ராஜியத்தை ஆண்டுவந்தாலும், அவன் மனசோ பகவானின் பக்தர்களிடமே இருந்தது. அவன் ராஜியத்தில் அதிகமாக கவனத்தைச் செலுத்தவில்லை. ச்ரவணம், கீர்த்தனம், விஷ்ணுஸ்மரணம், பாத சேவநம், வந்தனம், தாஸ்யம், சக்யம் என்று சொல்லுகின்ற நவவிதபக்தியிலேயே அவன் ஈடுபட்டிருந்தான். என்னடா இது இவன் நம்மீதுள்ள பக்தியிலேயே இருந்துவிட்டு வீட்டையும் நாட்டையும் சரியாகக் கவனிக்க மாட்டேன் என்கிறானே என்று பகவானுக்கே தோன்றியதாம்.. அவன் நிலைமை இப்படியே இருந்தால் நாட்டின் நிலைமை வீணாகிவிடுமே என்று நினைத்து, அவன் கேட்காமலேயே சுதர்ஸனத்தைக் கொண்டு அவன் மாளிகையிலே கொண்டுபோய் வைத்துவிட்டானாம் பகவான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஏகாதசி விரதம் துவாதசி பாரணை என்பதுதான். ஒருநாள் அப்படியே யமுனைக்கரைக்குப் போனான். பந்தலைப் போட்டான். ஒரு வருஷத்துக்கு இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றான். ஏகாதசி விரதம் இருந்து, துவாதசி எவ்வளவு நாழிகை இருக்கிறதோ அதற்குள்ளே பக்தர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்து அதில் மீதம் வந்ததை உண்டு விரதம் முடிப்பது என்று உறுதி எடுத்துக் கொள்கிறான். ஆயிரக்கணக்கான வேதவித்துக்களை அழைத்து அவர்களுக்கு போஜனம் செய்வித்து, வேண்டுகிற தானங்களைக் கொடுத்து, கோதானம் செய்து… இப்படி ஒரு வருஷம் முடியப்போகிறது. அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசியும் வந்தது. வழக்கம் போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான். இன்னும் அவனும் அவனுடைய பத்னியும் சாப்பிடவேண்டும். அப்போதுதான்…. துர்வாசர் வந்தார். முனிவர் வந்தவுடனே அவரை வரவேற்று, ஸ்வாமி உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்… வாருங்கள். போஜனம் செய்து அடியேனுக்கு பிரசாதத்தை வழங்கவேணும் என்று பிரார்த்தித்தான் அம்பரீஷன். துர்வாசரோ ம் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி மெதுவாகக் கிளம்புகிறார். இன்னும் அரை நாழிகைதான் பாக்கியிருக்கிறது. அதற்குள்ளாக அம்பரீஷன் துர்வாசருக்கு போஜனம் செய்வித்து இவனும் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி அவன் அந்த துவாதசி பாரணையை முடிக்கவில்லையென்றால் அந்த ஒரு வருஷ ஏகாதசி விரதம் போச்சு… ஆனால் துர்வாசரோ வேண்டுமென்றே அடிமேல் அடிவைத்து மந்தகதியிலே போகிறார். பரார்த்திசீல: என்றபடி பிறரை கஷ்டப்படுத்தி அதிலே இன்பம் காண்கிற சாடிஸ்ட் டாக அப்போது துர்வாசர் … இவனோ இன்னும் அந்த குறுகிய காலத்துக்குள்ளே விரதத்தை முடித்தாக வேண்டும். போனவரோ இன்னும் காணவில்லை. வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறான். மனசிலே தவிப்பு. அப்போது அங்கிருந்த பெரியவர்களை அணுகி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்று உபாயம் கேட்கிறான். எல்லாவற்றுக்கும்தான் பிராயச்சித்தம் இருக்கிறதே! பெரியவர்கள் சொன்னார்கள் … ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ஒரு துளசி இலையையும் போட்டு ஆசமனம் செய்து பகவத் பிரசாதமாக அதை உட்கொண்டுவிடுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு. சாப்பிடாத மாதிரியும் கணக்கு. ஏனென்றால் முனிவரை சாப்பிட அழைத்திருக்கிறீர்கள்… அவரை விட்டு விட்டு நீங்கள் சாப்பிடக்கூடாது. எனவே துவாதசி போவதற்குள்ளாக இதைச் செய்துவிடுங்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது… என்றார்கள். அவன் உட்கார்ந்து ஆசமனம் செய்யப் போனான். அப்போது சரியாக துர்வாசரும் வந்துவிட்டார். அம்பரீஷன் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்துவிட்டுக் கேட்டார்… என்ன செய்கிறாய்…? பாரணை…! என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாகச் சொன்னாயே. உனக்கு அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார்…. என்று சொல்லிவிட்டு தன் ஜடாமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பியது. என்னை அவமானப்படுத்திய அம்பரீஷனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட்டு வா என்று அந்த பூதத்தை ஏவினார். அம்பரீஷனோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவன் அப்படியே நின்றுவிட்டான். பூதம் பாய்ந்தது. ஆனால் அவன் பூஜையறையிலே இருந்தாரே சுதர்ஸனாழ்வார்.. அவர் அப்படியே கிளம்பிவிட்டார். அவ்வளவுதான் பூதம் க்ளோஸ். பிறகு அப்படியே திரும்பி துர்வாசரை முறைக்க, அவரும் ம்ம்ம்… என்று கர்ஜிக்க… துர்வாசர் விஷயம் ஒன்றும் எடுபடவில்லை. அவ்வளவுதான் அவர் அப்படியே திரும்பி ஓட, சுதர்ஸனச் சக்கரமும் அவரை விடாமல் துரத்தியது. ஓடினார் ஓடினார்… சமுத்திரத்துக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார். ஆனால் சுதர்ஸமோசமுத்திரத் தண்ணீரை கரையிலிருந்துகொண்டே அப்படியே உறிந்து கொண்டது. தொடர்ந்து ஓடினார். மேருபர்வதக் குகைக்குள்ளே ஒளிந்து கொண்டார். அதுவோ குகையை ரெண்டாகப் பிளந்தது. வேறு வழியில்லாமல் அங்கிருந்து நேரே பிரம்ம லோகம் போனார். பிரம்மாவிடம் போய் தஞ்சம் கேட்டார். அவரோ, அம்பரீஷன் விஷ்ணு பக்தர்களிலேயே ச்ரேஷ்டமானவன்.. அவனுக்குப்போய் அபசாரம் செய்துவிட்டீரே. பகவானுக்கு அபசாரம் பண்ணினாலும் அவன் பொறுத்துக்கொள்வான். அவன் பக்தனுக்குப் பண்ணினால் பொறுத்துக் கொள்வானோ? நீர் நிற்கும் இடம் தெரிந்தால் சுதர்ஸம் இந்த இடத்தையே துவம்சம் பண்ணிவிடும். நீர் இடத்தை விட்டுக் கிளம்பும் என்றார்… அங்கிருந்து ஓடி சிவபிரானைத் தஞ்சம் புகுந்தார். அவரோ அப்பனே சுதர்ஸனத்திற்கு உன்மீது கோபம் வந்துள்ளது. அது நாங்கள் சொன்னால் எல்லாம் கேட்காது. நாராயணன் சொன்னால்தான் கேட்கும். நீர் அவரிடமே தஞ்சம் புகுந்து கொள்ளும் என்றார். அவர் விஷ்ணுவை நோக்கி ஓடினார். அவரைத் தஞ்சம் புகுந்து பிராத்தித்தார். விஷ்ணுவோ, ஸ்வாமி என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது சுதர்ஸனம் என் கண்ட்ரோலில் இல்லை. நான் அதை அம்பரீஷனுக்கு லீசுக்குக் கொடுத்துவிட்டேன். அம்பரீஷனை யாரென்று நினைத்தீர். அவன் என் பக்தன் இல்லை. என் எஜமான். அவனுக்கு நான் தாஸன். வேறு வழியில்லை. நீர் அவனிடமே போய் தஞ்சம் புகுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்… என்றார். வேறு வழியில்லாமல் துர்வாசரும் அம்பரீஷனிடம் வந்தார். அதற்குள் ஒரு வருஷம் முடிந்துவிட்டது. அப்பனே மூன்று லோகங்களுக்கும் போய்விட்டேன். இப்போதுதான் உன் மகிமை தெரிந்தது. அந்த சுதர்ஸனச் சக்கரத்திடம் கொஞ்சம் சொல்லப்பா! என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதை கண்ட அம்பரீஷன் சுதர்ஸநத்தை பிரார்த்திக்க அவர் மீண்டும் பூஜை அறையில் சென்று அமர்ந்து கொண்டார் . துர்வாசருக்கும் அம்பரீஷன் மற்றும் ஏகாதசி விரத மகிமை புரிந்தது . ஏகாதசி விரத மகிமை அப்படிப்பட்டது
*ஏ காதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜன த்வயம்*
ஹே ஜனங்களே!ஏகாதசியில் எல்லாராலும் இரண்டு செய்யத்தக்கன – அதாவது இரண்டு கார்யம் செய்யத் தக்கன
முதல் காரியம் உபவாஸம். இரண்டாவது காரியம் பகவத் கதைகளைக் கேட்பது.
*ஏகாதசியும் சிரார்த்தமும்:*
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியிலும் எண்ணிலாக் குழந்தைகள் பிறப்பது போல, எண்ணிலார், எல்லா திதிகளிலும், இறைபதம் அடைவதும் இயற்கை நிகழ்வே ஏகாதசியில் மரணமும், துவாதசியில் தகனமும் மாமுனிவர்க்கும் கிடைத்தற்கரியது என்பர்.ஆனால் இதன் உட்பொருளை தெரிந்து கொள்ளவும்.
ஏகாதசி மரணம் துவாதசி தகனம்…
இது நாம் எல்லோரும் சொல்லுவது
ஆனால் இதன் சரியான அர்த்தம் என்ன தெரியுமா?
ஒரு விஷயத்தில் நாம் மிகச் சரியானவர்கள்…தவறாக புரிந்து கொள்வதில்…
இது…ஏகாதசி ஸ்மரணம், துவாதசி தகனம்….
ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலைத் துதிக்க, (ஸ்மரணம்) வேண்டும். துவாதசியில் விரதம் பூர்த்தி செய்து தகனம் (பாரணை –உணவு) செய்யவேண்டும்.
தகனம் என்றால் – ஆகாரம், சீரணம், எரித்தலாகிய சுத்தீகரணக் கிரியை என்று பொருள்.
ஏகாதசியில் அவன் நாமம் சொல்லி, அவன் சிந்தனையாகவே இருந்து, துவாதசியில் அவன் பிரசாதமாய், திருத்துழாய் (துளசி) மற்றும் நீர் அருந்தி பின் அவருக்கு படைக்கப் பட்ட உணவு குறிப்பிட்ட காலத்துக்குள் அருந்தி நம்மை நாமே சுத்தீகரணம் செய்து கொள்ள வேண்டிய நாள்…
என்ன உங்களுக்கு சரியான அர்த்தம் புரிகிறது தானே.
இனி யாரேனும் இதனை சொன்னால் நீங்கள் இதனை தெரிவியுங்கள்.
பொதுவாக இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டுமென்பதால், ஏகாதசி அன்று சிரார்த்தம் நடத்திடும் குடும்பத்தினரும், சிரார்த்தத்தில் நம்முடைய முன்னோர்களின் பிரதிநிதியாக ஏற்கப்படும் அந்தணர்களும், நெருங்கிய பங்காளிகளும், சிரார்த்தத்திற்காக சமைக்கும் உணவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் சிரார்த்த உணவை ஏற்பது விரதநியதிகளை மீறியதாக கருதப்படுவதில்லை. சில பகுதி மக்கள், ஏகாதசிகளில், தாம் சாப்பிட்ட தவறுக்கோ, பிறரை உண்ணச் செய்த தவறுக்கோ, ஆளாகக் கூடாது என்பதால், ஏகாதசியில் வரும் சிரார்த்தத்தை துவாதசி திதியில் செய்வதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தேசாசாரம் என்று, நெடுங்காலமாக பெரியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது
ஏகாதசியும் அறிவியல் உண்மையும்
ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் “திதி” என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.அமாவாசை நாளையும்,பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதச எனும் வடமொழிச் சொல் பதினொன்று எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில்அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம்எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பூரணையை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும். ஏகாதசித் திதி பதினோராவது திதியும் 26 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச ஏகாதசித் திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச ஏகாதசியும் ஆகும்.
ஏகாதசி தினத்தில் சுமார் 120 டிகிரிலிருந்து 132 டிகிரியில் இருக்கும் அப்பொழுது பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை முக்கோண நிலையில் அமைகின்றன. இக்காரணத்தினால் ஏகாதசி விரதம் மிகச்சிறந்த விரதம் ஆகும். ஏகாதசி நாளில் சந்திரனின் ஈர்ப்பு பூமியில் அதிகமாக இருக்கும். இதனால் மனிதனின் உடல் பாதிக்கப்படுகிறது. ஏனெனில் மனித உடலில் 80% தண்ணீர் நிறைந்து உள்ளதால் இப்பாதிப்பு சந்திரனின் ஈர்ப்பால் ஏற்படுகிறது. அந்நாளில் நம்முடைய ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காமல் இருக்கும். அதனால் தான் அன்று உணவை ஒதுக்கி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் கூறினார்கள். இந்நாளில் தியானம் செய்பவர்களுக்குச் சந்திரனின் ஆற்றல் நல்ல சக்தியைக் கொடுக்கும். அடுத்தநாள் துவாதசி திதியானது திருவோண நட்சத்திரதில் வந்தால் அதுவும் புதன்கிழமை ஆக இருந்தால் அன்றும் ஏகாதசி போன்று விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அந்த நாள் மிகவும் புனித நாளாகும்.
மஹா பெரியவா இதை தன் வாக்கில் மூலமாக கூறும் போது …..
வ்ரதோபவாஸங்களில் உச்ச ஸ்தானத்தில் இருப்பது ஏகாதசி.
‘ *காயத்ரிக்கு மேலே மந்தரமில்லை* ; *அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை) ;காசிக்கு மேலே தீர்த்தமில்லை* ‘என்று சொல்லிக் கடைசியில் ‘ *ஏகாதசிக்கு ஸமமானமாக எதுவுமில்லை* ‘என்று முடிகிறது.
மற்றதற்கெல்லாம் ‘மேலே’ ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு ‘ஸமமாக’ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் வ்ரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு ‘மேலே’மட்டுமில்லாமல், அதற்கு ‘ஸமமாக’க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது.
என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது. அதாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயகுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், ‘மர்த்ய’, அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது. ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது. என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம். முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம். மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்;அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை ‘எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி’னை தர்ம சாஸ்திரகாரகர்களே எதிர்பார்க்கவுமில்லை;ரூலாகப் போடவுமில்லை.
பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும். அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம். முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.
ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.
இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது. மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது. ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாத்தைக் கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation. மற்றவர்களுக்கில்லை. அன்று ஒருவன் சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது: ப்ரதிக்ராஸம் அலௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம் .
ஆதலால் ஏகாதசி விரதமிருந்து பல நலன்கள் பெற அனைவரையும் வேண்டுகிறோம் .
2 குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும்.
3 குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும்
4 குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது.
5 ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை.
6 குருவுக்கு மிக அருகில் அமர கூடாது
7 குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர்கள் சொல்வதை கவனத்துடன், பணிவுடன் கேட்க வேண்டும்.
8 குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது.
9 காற்று நம் மீது பட்டு பிறகு அவர் மீது படும் படி இருக்க கூடாது. உடனேயே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடமாக பார்த்து அமர வேண்டும்.
10 குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, கையை ஊன்றிக்கொண்டு இருக்க கூடாது.
11 குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, எதிலும் சாய்ந்து கொண்டு இருக்க கூடாது.
12 குருவின் முகம் பார்த்து இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் குருவின் முகத்துக்கு எதிரே இருக்க கூடாது.
13 குருவுக்கு மிக அருகிலோ, மிகவும் தூரத்திலோ அமர கூடாது.
குரு கையை உயர்த்தி கூப்பிடும் தூரத்தில் அமர வேண்டும்.
14 குருவுக்கு முன்னால் பலர் இருந்தால், அவரவர் சௌகர்யத்துக்கு அமர்ந்து கொள்ளலாம்.
15: குரு நிற்கும் போது, அமர்ந்து இருக்க கூடாது.
குருவுக்கு அமர இடம் இல்லாத சமயத்தில், தனக்கு இடம் கிடைத்தாலும் அமர கூடாது.
16 குரு ஏதாவது காரியத்தை செய்ய முனையும் போது, சிஷ்யன் , குருவின் அனுமதியை பொறுத்து, தன்னால் முடிந்த வரை உதவி செய்யலாம்.
17 குரு இருக்கும் போது, அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் (பெரியோர்கள் ஆனாலும், தகப்பனே ஆனாலும்) காலில் விழ கூடாது
18 தன் கோத்திர பெருமையை குருவுக்கு முன் பேச கூடாது.
19 தன் குருவை தவிர அவரை விட தாழ்ந்த தகுதி உள்ள குருவை சந்திக்க கூடாது, அல்லது அவர்களை தன் குருவுக்கு இணையாக உயர்த்த கூடாது.
குருவின் குருவே வந்தாலும் சரி. இது தன் குருவுக்கு அவமதிப்பு செய்ததாகும். தேவைப்பட்டால், அமைதியாக அந்த இடத்தை விட்டு அப்போதைக்கு நகர்ந்து விடலாம். அல்லது, தன் குருவுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கலாம்.
20 வாயை திறந்து கொட்டாவி விட கூடாது.
அப்படி நேர்ந்தாலும் குனிந்து, வாயை கையால் மூடிக்கொள்ள வேண்டும்
21. குருவுக்கு கொடுத்ததை பெருமை பேசி கொள்ள கூடாது.
குருவுக்கு செய்த சம்பாவனையை மறந்து விடுவது நல்லது.
22: குரு அமர்ந்த ஆசனத்தில் அமர கூடாது
23 குரு கூப்பிடாமல், நல்ல விஷயத்தை தவிர மற்ற எதுவும் அவரிடம் சென்று பேச கூடாது
24 குருவிடம் உபதேசம் பெற்று, வீடு திரும்பினாலும், அவரிடம் பழகும் விதம் கடைசி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும்.
25 குரு ஒரே ஊரில் இருந்தால், அவர் கூப்பிடாமலேயே காலையும் மாலையும் அவரை பார்க்க செல்ல வேண்டும்.
26 குரு வேறு ஊரில் இருந்தால், முடிந்தவரை அடிக்கடி அவரை பார்க்க செல்ல வேண்டும்.
தன் கையால் அவருக்கு ஒரு வேப்பங்குச்சியாவது பல் துலக்க கொடுக்க வேண்டும்.