குருவும் நமது வாழ்க்கையும்

குருவும் நமது வாழ்க்கையும்

எங்கள் குரு பரம்பரை. குஹானந்த மண்டலி.

மாதா,பிதா, குரு, தெய்வம் என்பது பழமொழி குழந்தைக்கு மாதா பிதாவை அடையாளம் காட்டுவார். மாதாவும் பிதாவும் குருவை அடையாளம் காடடுவார்கள்.

குரு தெய்வத்தைக் காட்டுவார். குருவின் அவசியம் தேவை. புலன் மயக்கத்திருந்து மனிதனை விடுவிக்க குரு ஒருவரால் தான் முடியும். குரு இல்லாத வித்தை பாழ் என்பார்கள்.

ஞானமார்க்கத்திற்க்கு குரு தேவை. அறியாமை என்ற இருளை அகற்றுபவர் குரு. ஒருவன் வேதங்கள் கற்றிருந்தாலும் ஆகமங்கள் உபநிடதங்கள் பயின்று இருந்தாலும் குருவின்றி மெய்ஞானம் அடைய முடியாது.

குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு இன்பத்தை அனுபவித்து ஞானத்தை தேடுதலே நலம்.

வாழ்க்கையின் வழிகளையும் ஆன்மீகப் பணிகளையும் குரு காட்டுவார். குருவே தெய்வம் குருவினிடத்தே நிழல் போன்று நின்று அவரது செயல்களுக்கெல்லாம் ஒத்துப் பழகி இருத்தல் வேண்டும்.

ஞானம் வேண்டும் என்று பல பேர் தப்பு தப்பா புரிந்து கொண்டு வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறார்கள் பாவம்.

முதலில் வாழ கத்துக்கங்கப்பா. மெசன்சரில் பதில் போட்டு கை வலிக்குது.

குருவிற்க்கு மேலானது ஏதுமில்லை. எவரைப் பார்த்த மாத்திரத்திலேயே மனதில் தானாகவே சாந்தியும் திடமும் மகிழ்ச்சியும் உண்டாகிறதோ அவரே பரம குரு என்கிறது குரு கீதை.

உங்கள் மனம் யாரிடம் ஒடுங்குகிறதோ அவரே உங்களுக்கு இந்த ஜென்மத்தில் குரு. எவரைக் கண்டால் மனம் தத்தளிக்காமல் ஓடுங்கி ஆனந்த்தை கொடுக்கிறதோ அவரே உங்கள் குரு.

அவா அவா குருவை கேட்டு சமத்தா அவர்கள் சொன்ன வழியில் வாழ்க்கை நடத்துவது நலம்.

ஊடகங்கள் உங்களை குழப்பலாம். குரு உங்களுக்கு தெளிவை கொடுத்து வழி நடத்துவார்.

குருவைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் மனதளவில் சாதனைகளுக்கு தயார் என்றால் உங்கள் உபதேசம் குரு உங்கள் முன் தோன்றுவார்.

குரு கிடைத்தவுடன் அவரிடம் இந்த மந்திரம் எனக்கு வேண்டும் என்று கேட்க அவசியமில்லை. நமது தகுதிக்கு ஏற்ப(நமது உடலில் எத்தனை மின்சாரத்தை செலுத்தி அதை தாங்க முடியும் என்கிற அளவுகோல் நமது குருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்) கிடைக்கும்.

குரங்குக் குட்டியானது குரங்கைப் பிடித்துக் கொள்வதுபோல் குருவை பக்தன் பற்றி நிற்க வேண்டும் குரு பார்வை கிடைத்ததும் பூனைக் குட்டியைப் பூனை தூக்கிச் செல்வது போல சீடனை குரு தூக்கி செல்வார்.

எல்லோராலும் குருவாகி விட முடியாது. மிதந்து கொண்டிருக்கும் மரக்கட்டை பல மனிதர்களையும் விலங்குகளையும் ஆற்றைக் கடந்து அழைத்துச் செல்லக்கூடும்.

நல்ல குரு பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் வலுவான கட்டை போன்றவர் என்பார் ஸ்ரீ ராம கிருஷ்ணர். இந்த அரும்பிறவியில் முன் வினை அறுத்து எல்லையில்லா மெய்பொருளை அடைவதற்க்கு வந்த ஒரு எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவதற்க்கு வந்த ஒரு உதவி குரு உயிரின் சேர்க்கை.

அவரின் திருவடியை வணங்கி மகிழ்வதாக வேதாத்திரி மகரிஷி இன்பமுறுகிறார். பக்தன் தகுந்த மனப்பரிபாகம் அடையும்போது குரு தானாக வருவார். குருவைத் தேடி அலைய வேண்டியதில்லை.

வானொலிப் பெட்டியில் தகுந்த அலைவரிசையைத் திருப்பினால் தொடர்புடைய நிகழ்ச்சிகள் கேட்கும். அதுபோல பக்தன் தனது மனதை தகுந்த அலைவரிசையில் வைத்திருக்கும் போது குரு அந்த அலைவரிசையில் தானாக வந்தமருவார்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு தோத்தாபுரி தானாகத் தேடிவந்து உபதேசம் தந்தார். மூர்த்தி தவம் தீர்த்தம் முறையாகச் செய்தோர்க்கு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்றார் தாயுமானவர்.

வாழ்கை வாழ்வதற்கே!!
குரு மட்டுமே சத்தியம்!!
அவர் காண்பித்தது மட்டுமே ஞானப்பாதை!!
குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கை அமைந்திட பிராத்தனை!!

இப்பிறவிப் பயன்களை அடைவிக்கும் நல்வழி காட்டி உதவுவது, ஸ்ரீகுருவின் சரணாரவிந்தங்களே. எத்தனையோ குருமார்கள் இந்த ஞான பூமியிலே. அவரவர் மனதிற்கு இசைந்த வழிகளில், சத்குருவை தேர்ந்தெடுத்து, பின் அவரை விடாது பின்பற்றினோமானால், நடைமுறை வாழ்க்கையை அமைதியாகவும் நிம்மதியாகவும் நடத்தி முடித்து, முடிவில் இறைவனின் திருவடிகளை அடையும் பாக்கியம் பெறலாம்.
தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே! – திருமந்திரம்

எனவே நண்பர்களே மாயையில் இருந்து விடுபட்டு பிரம்மத்தை அறிவோம் நண்பர்களே.
நமோ தேவ்யை.
குமார் ராமநாதன்.

நகுரோரதிகம். நன்றி.

#தீபாவளி – #ஸ்ரீலக்ஷ்மி #குபேர #பூஜை.

#தீபாவளி – #ஸ்ரீலக்ஷ்மி #குபேர #பூஜை.

Happy Deepavali 2024

Mahalaxmi Kupera Pooja

நைமிசாரண்யத்தில் மஹரிஷிகள் பலவிதமான பூஜைகள் மற்றும் விரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நாரத மகரிஷி ‘‘கலியுகத்தில் பொருள் இல் லாமல் அருள் பெற முடியாது என்ற நிலை உருவாகப் போகி றது’’ என்றார்.

தொடர்ந்து நாரதர் “ஏகாதசி விரதம், அசூய நவமி விரதம், அசோக அஷ்டமி விரதம், ரதசப்தமி விரதம், வாமன ஜெயந்தி விரதம், மஹா சிவராத்திரி விரதம், பௌர்ணமி விரதம், கார்த்திகை விரதம் போல எத்தனையோ விர தங்கள் தோன்றினாலும் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கப் போகிற விரதம் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம் தான்.

ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜையைச் செய்பவர்கள் பெரும் நிதியினைப் பெறுவார்கள்’’ என்றார்.

மஹரிஷிகள், ‘‘நாரதரே! நீங்கள் சொல்வது எங்களுக்கு ஆச்சரி யமாக இருக்கிறது. விரதங்களை யும், பூஜைகளையும் அனுஷ்டி க்க பொருள் கட்டாயம் தேவை யா?’’ என்று கேட் டனர்.

நாரதர், ‘‘ஓ மகரிஷிகளே கேளுங் கள். கலியுகத்தில் காற்று, நீர் கூட காசு கொடுத்தால்தான் கிடைக் கும். பொருளில்லாமல் அருள் தேட முடியாது. அவ்விதப் பொரு ளை ஒருவன் சிறந்த முறையில் அடைந்தால் அவனால் அருள் தேடவும் புண்ணியம் தேடவும் முடியும்’’ என்றார்.

‘சரி அதற்கான வழிமுறைகளைக் கூறுங்கள்’ என்று மஹரிஷிகள் கேட்டனர்.

நாரதர், தீபாவளியன்று செய்ய வேண்டிய ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை தான் இதற்கான ஒரே வழி முறை. ‘குபேர பகவானே செல்வத்தைத் தரக் கூடியவன். இந்த குபேர பகவான் மகா லக்ஷ்மியைக் குறித்து கடுந்தவம் செய்து குபேர சம்பத்தைப் பெற்றவன். சங்கநிதி, பதுமநிதி உட்பட நவ நிதி களை வரமாகப் பெற்றான். விச்ரவாசு முனி வருக்குப் பிறந்த இவன் ராவணனின் சகோதரன்.

காசி காண்டத்தில் குபேரனது பெருமை பேசப்படுகிறது. இவன் ஒரு ஜென்மத்தில் எலியாகப் பிறந்து ஒரு சிவாலயத்தில் வசித்தபோது பாம்பு இவ னைத் துரத்த, பாம்புக்கு பயந்து சிவாலய த்திற்குள் சென்று விளக்கின் மேல் ஏறிய தாகவும், அங்கு அணைய இருந்த விள க்கு இவர் அசைத்ததால் மீண்டும் பிரகாசமாக எரியத் தொடங்கியது. இதனால் திருவிளக்குப் போட்ட புண்ணியம் கிடைத்தது என்பார்கள். அதனால் குபேரனாகப் பிறந்ததாகச் சொல்லுவார்கள்.

மற்றொரு புராணத்தில் இவர் வராஹ காம்பிலி தேசத்தில் வேள்வி தத்தன் என் பவருக்கு குணநிதி என்ற பெயருடன் பிறந்து அவரின் பெருஞ்செல்வத்தை
சூதிலும், மாதிலும் தொலைத்ததாகக் கூறுவார்கள். நல்ல பெண்ணை இவருக்குத் திருமணம் செய்து வைத்தும் இவர் திருந்தவில்லை. பின் குடும்பத்தினர் இவரை விலக்கி வைத்ததாகவும், இவர் வறு மையில் நொந்து ஒரு சிவராத்திரியில் சிவபக்தர்களுடன் சிவால யம் சென்றார்.

அங்கு சன்னிதானத்தில் பூஜைகள் முடிந்து அனைவரும் உறங் கும்போது சிவன் சன்னதியில் சென்று அங்கு இருட்டாக இரு ந்ததால், அங்கிருந்த விளக்கை நன்கு எரியச் செய்துவிட்டு, தா ங்காத பசியால் சிவனுக்கு
நைவேத்தியம் செய்த பிரசாதங் களை உண்டார். பின் திரும்பி வருகையில் அங்கிருந்த காவலர் களால் பிடிக்கப்பட்டு கள்வன் எனக் கூறி கொலை செய்யப்பட்டார்.

அகால மரணம் அடைந்தவரை எமகிங்கரர்கள் பிடித்து எமலோகம் இழுத்துச்செல்ல முயல, அங்கு வந்த சிவகணங்கள் ‘இவரை நீ அழைத்துச் செல்ல முடியாது. இவ ர் சிவராத்திரி அன்று கண் விழித்தார். சுவாமிக்கு திருவிளக்கை ஏற்றினார். சுவாமி பிரசாதத்தை உண்டார். அதன் பலனாக பெரும் புண்ணியம் பெற்றார். இவர செய் த பாபங்கள் மறைந்தன. அடுத்த ஜென்மாவில் பெரும் அரசனாகவு ம், சிவபக்தனாகவும் பிறக்கப் போ கிறார்’ என்று அழைத்துச் சென் றார்கள்.

மறுஜென்மாவில் கலிங்க தேசத்தில் அருந்தமன் என்பவருக்கு தமன் என்ற பெயருடன் பிறந்தார். கடுந்தவத்தால் சிவதரிசனம் பெற்றார். (சிலர் இவர் குருடனாகப் பிறந் ததாகவும் சிவ தரிச னத்தால் பார்வை பெற்றதாகவும் கூறுகி றார்கள்) சிவன் ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கே ட்க, இவரோ உமாமகேசு வரியின் ஒளி பொருந்திய தோற்றத்தில் மயங்கினார். பார்வதி தேவியின் சாபத்தால் கண்களை இழந்தார். தவறை நினைத்து வருந்திய தால் பொற்கண்களைப் பெற்றார். இவ ரை சிவபெருமான் வட திசையின் அதி பதியாக்கினார். குபேரன் சுக்கிர பகவா னை எதிர்த்து அவருடைய கர்வத்தை பங்கப்பட வைத்த பெருமையையும் உடையவர்.

தந்தையின் சொல்லுக்கேற்ப, இலங்கை யை ராவணனுக்குக் கொடுத்துவிட்டு, அழகாபுரி பட்டணத்தை உருவாக்கி அதன் அதிபதியானார். அஷ்வ க்ரரின் அருள் பெற்றவர். இவரது மனைவியின் பெயர் சித்ரரேகை. இவர் நரனை வாகனமாகக் கொண்டவர். இவரது புதல்வனின் பெய ர் நளகூபரன். இவர் புஷ்பக விமானத்தின் சொந்தக்காரர்.

கடவுளுக்கே #கடன் #தந்தவர்!

கலியுகத்தில் வரம்தரும் தெய்வமாம் திருமலைவாசன் திருப்ப தியில் எழுந்தருளினார். இந்த ஏழுமலையானைப் பற்றி தாள பாக் கம் அன்னமய்யா 32,000 பாடல்கள் பாடியுள்ளார். 1491 -ம் ஆண்டு மசிண்டி வேங்கடத் துறைவார் என்பவரால் வேங் கடாசல மஹா த்மியம் எழு தப்பட்டது. வராஹ புராணம், பத்ம புராணம், கருட புராண ம், மார்க்கண்டேய புராணம் போன்ற பல புராணங்களிலிருந்து மகாத்மியம் தொகுக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

ஸ்ரீனிவாசப் பெருமாளின் திருமஞ்சனம் பிரசித்தி பெற்றது. 1583-ல் இவரது திருமஞ்சனப் பெருமைகளை கல்வெட்டில் காண முடியும். இவரின் அபிஷேகத்திற்காக விசேஷ குங்குமப்பூ, வாசனை த் திரவியங்கள், அரைத்த சந்த னம், தங்க வட்டிலில் வைத்து திரு மஞ்சனம் செய்யப்படுகி றது. 21 அடி நீளமுள்ள பட்டு பீதாம்பரம் வெள்ளிக்கிழமைய ன்று அணிவிக்கப்படுகிறது. ஒருமுறை அணிந்த வஸ்திர த்தை ஸ்வாமி மறுமுறை அ ணிவதில்லை. இவ்வளவு புகழ் பெற்ற ஸ்வாமியின் திருக்கல்யாணத்திற்கு நிதி கடனாகக்
கொடுத்தவர் குபேர பகவான்.

இப்போதும் இவர் எழுதிய கடன்பத்திரம் வடமொழியில் உள்ள தாகக் கூறுவார்கள்.

எழுதச் சொன்னவர் பிரம்மா. எழுதிக் கொடுத்தவர் ஸ்ரீனிவாசன். எழுதி வாங்கியவர் குபேர
பகவான். அதில் உள்ள வாசகம் கலியுக த்தில் விளம்பி வருஷத்தில் வைசாக மாதத்தில் வள ர்பிறையில் ஏழாவது நாளன் று ஸ்வாமி கடன் வாங்கியதா கவும், கடன் வாங் கிய தொகை ராமர் முத்திரையுடன் கூடிய 14 லட்சம் தங்கக்காசு எனவும் இது ஆயிரம் வருடத்தில் வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாகவும் எழுதப்பட்டுள்ளதாக கூறுவார்கள். இத ற்கு சாட்சியாக பிரம்மாவும், இரண்டாவது சாட்சியாக சிவ பெரு மானும், மூன்றாவது சாட்சியாக அரசமர மும் உள்ளதாகக் கூறு வார்கள்.

ஸ்வாமிக்கே கடன் கொடுத்த குபேரனை வணங்குவோருக்கு குசேலருக்கு நிதி கிடை த்தது போல், அயாசகன் என்ற ஏழை பிராம ணனுக்கு ஆதிசங்கரர் அருளால் தங்க நெல் லிக்காய் மழையாக அவர் வீட்டில் பெய்தது போல், பெரும் செல்வம் கட்டாயம் வீடு தே டி வரும்.

ஐப்பசி மாதம் வரும் அமாவாசையன்று இப்பூஜை செய்வது விசே ஷம். தவிர வெள்ளிக்கிழமையிலோ, பௌர்ணமி தினங்களிலோ இந்த பூஜையை செய்யலாம்.

குபேர பகவான் படம், யந்த்ரம் அல்லது கலசத்திலோ ஸ்ரீ லக்ஷ்மி குபேர பூஜை செய்யலாம். முதலில் ஸ்ரீ மஹா லக்ஷ் மியை பூஜித்து விட்டு குபேர பகவானை பூஜை செய்வது உத்தமம். நவக்கிரஹ தான்யங்கள் வைத்து அதில் நவக்கிர ஹங்களை ஆவாஹனம் செய்து நவக் கிரஹங்களுடன் குபேர பூஜையை சேர் த்து செய்யலாம். குபேர பூஜையுடன் லோக பாலகர்களையும் நவ க்கிரங்க ளையும் சேர்த்து பூஜிக்கும் வழக்கம் உண்டு.

கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரை யில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானை யும், மொச்சையில் சுக்கிரனை யும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந் தில் ராகு வையும், கொள்ளில் கேதுவையும் ஆவாஹனம் செ ய்து பூஜிப்பது விசேஷம்.

இப்பூஜையை விரிவாக செய்ய முடியாதவர்கள் லக்ஷ்மியை அர்ச்சித்து வழிபாடு செய்து, குபேர பகவானையும் வழிபாடு செய்து அவர் மந்திரத்தையும் ஜபிக் கலாம்.

விரிவாக செய்வதானால் ஸ்ரீசுக்தத்தால் மஹாலக்ஷ்மிக்கு சோடச உபசாரங்கள் செய்து லோக பாலகர், நவக்ரஹ பூஜை விரிவாக செய்து குபேர பகவானையும் அர்ச்சித்து விமரிசையாக பூஜை செய் யலாம்.

ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தநதா ந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத் திம் மே தேஹி தாபா யஸ்வாஹா
என்னும் இந்த குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 2024.

அம்பிகையின் வைபோகம் :-

ஜெய் ஜெய் பாலா

நித்ய கல்யாணத்தை நமக்கு அளிக்கும் பாலாவின் அழகோ , அழகு.அவள் கருணை பார்வை நம்மை பார்த்து அருள, அவளின் திரு உருவை நாம் பார்த்து மகிழ, அவள் எப்படி இருப்பாள் , எத்தனை அழாகாக இருப்பாள் , அவளை பற்றி எழுத அவள் கூற என்னை அவள் கைபிடித்து எழுத சொன்னாள் எழுதினேன், என் எழுத்தில் இருக்கும் அனைத்தும் அவளையே சேரும். அவள் எப்படி இருப்பாள் என்று என்று பார்போமா !!!!

அருண கிரண ஜாலை: அஞ்ஜிதாவகாசா
வித்ருத, ஜபவடீகா புஸ்தகா பீதிஹஸ்தா
இதரகர வராட்யா, புல்ல கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா

தனக்கு அன்னியமாய் ஏதுமில்லாததும், நாம-ரூப-குணங்களற்றதும், நித்ய ஸத்யமானதுமான ஸச்சிதானந்தத்தையே “பரப்ருஹ்மம்” என்று ஞானிகள் அறிகிறார்கள். அதே பரப்ருஹ்மம் ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரமாகிய கார்யங்களில் ஈடுபட்டிருப்பதாக வ்யவஹரிக்கும்போது “பராசக்தி” என்பதாக மறைகளால் கொண்டாடப்படுகிறது.

அந்தப் பராசக்தி பரப்ருஹ்மத்து வேறானதோ மாற்றானதோ அல்ல என்றாலும்கூட ஏக வஸ்துவான பராசக்தியையே முத்தொழில்களைக் கருதி த்ரிமூர்த்திகளின் பட்ட மஹிஷிகளாக உருவகித்து துர்கா -லக்ஷ்மி – மஹாஸரஸ்வதி என்று மூன்று ப்ரதான ரூபங்களில் அவளை ஆராதிப்பது ஸனாதனமான ஸம்ப்ரதாயம்.

ஜகன்மாதா – ஜகத்காரிணீ-ஜகத் ப்ரஸுதி-ஜகத் தாரிணி என்றெல்லாம் அவளை ஸகல ஜீவர்களுக்கும் தாயாக வழிபடுவது பரமசாந்தியும் மங்களமும் தரும் உபாயமாகும். ஆயிரமாயிரம் நாமங்களால் அறியத்தக்கவளாக, அவளை மஹரிஷிகளும், ஞானிகளும் குறைவற்ற ஆனந்தப்பெருக்கோடு வர்ணித்திருக்கிறார்கள்.

ஸர்வ வ்யாபகமாக எங்கும் நிரம்பியிருக்கும் ஈஸ்வரனை அவ்விதமாக அறிந்துகொள்ள சக்தியில்லாத சாமான்யர்களும் அறிந்து கொள்வதற்காகவும், பக்தியுடன் அணுகுவதற்காகவும் பல்வேறு நாம ரூப குணங்களோடு ஹிந்து மதம் காட்டுகிறது. சிவனாக, விஷ்ணுவாக, கணபதியாக, ஸ்கந்தனாக…… இப்படியெல்லாம் காட்டுவதோடு நில்லாமல் கருணையும் அன்புமே வடிவடுத்த தாயாகவும் காட்டுகிறது. உலகில் வேறெந்த மதமும் தாயின் வடிவில் இறைவனைச் சித்திரிக்கவில்லை – என்பது ஒரு விசித்ரமான உண்மை. இறைவனின் தூய கருணைக்கு நிகராகக் காட்டக்கூடிய ஒரே ப்ரத்யக்ஷ்மான உதாரணம் தாயின் அன்பு மட்டுமே அல்லவா? ஒவ்வொரு ஜீவராசியும் அறிந்திருக்கிற பரமஹிதமான அனுபவம் தாயின் அன்பு அல்லவா? ஈஸ்வர சக்தியை அணுகுவதற்கு மிகச் சுலபமான வழி, அதனையே தாயாகக் கருதுவது அல்லவா?

நம்மையெல்லாம் படைத்துக் காத்து வழிநடத்தும் இறைவன் எங்கோ வெகு தொ¬வில் தன் அரியாசனத்திலிருந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைப்பதாகக் கருதுவதல்ல நம் ஸனாதனம். அவனை கால் விரலை வாயிலிட்டுச் சுவைக்கும் மதலையாக – வெண்ணெய் திருடிவிட்டு மிரள விழித்துக் கள்ளச் சிரிப்பை உதிர்க்கும் பாலகனாக – பகைவனின் மகள் எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தனியொருவனாக அவளை திருமண தினத்தன்று மீட்டெடுத்து வரும் வாலிபனாக – மனைவியைச் சிறை மீட்க வேண்டி கடலிலேயே பல காத தூரம் பாலம் கட்டிப் படையெடுக்கும் தீரனாக – பிச்சைக்காரக் கோலத்தில் வந்து வாசலில் நின்ற பால்ய சினேகிதனைப் பக்கத்தில் அமரவைத்து பாதம் கழுவும் பாராளும் வேந்தனாக – மயானச் சாம்பலைப் பூசிக்கொண்டு ஊழிக் கூத்தாடும் பித்தனாக – எத்தனை எத்தனை விதமாகவெல்லாம் பார்க்கப் பழக்கியிருக்கிறார்கள் நம் பெரியவர்கள்! அத்தனை விதமாகவும் அவனும் அவர்கள் கேட்டபடியெல்லாம் வந்து விளையாடிக் காட்டுகிறான்.

ஆட்டிப் படைப்பவனாக அவனைப் பிறர் கருதுகிறார்கள். ஹிந்து மதம் ஒன்றில்தான் பக்தர்களே அவனை ஆட்டிப் படைத்து அந்த விளையாட்டிலேயே அவனிடம் ஆட்பட்டுக் கரையும் அதிசய நாடகம் நடக்கிறது.

“அவன்”, “அவன்” என்று இறைவனை ஆணாக மட்டும் வேஷமிட்டுப் பாராமல் “அவளை”யும் தாயாக மட்டுமன்றி சிறு குழந்தையாகவும், முதிராத சிறுமியாகவும், இறைவனையே கணவனாக அடைய வேண்டிக் கடுந்தவம் புரியும் கன்னியாகவும், தர்மத்தைக் காக்கவும், தீய சக்திகளை அழிக்கவும் போர்க்கோலம் கொள்ளத் தயங்காத பேரரசியாகவும் காண்கிறோம்.

ஜகன்மாதாவின் அற்புத வடிவங்களில் ஒன்றுதான் முதிராத சிறுமியாய் அவளைக் கருதும் “பாலா த்ரிபுரசுந்தரி” வடிவம்.

பிறவித் துயர் நீங்கி முக்தி நிலை காணப் பல்வேறு மார்க்கங்களை ஸனாதன தர்மம் போதிக்கிறது. அதில் ஒன்றுதான் “ஸ்ரீ வித்யா” என்று போற்றப்படும் உபாசனா மார்க்கம்.

அதி ரகஸ்யமானது, வெகு சூக்ஷ்மமானது, கடுமையான நியமங்களைக் கொண்டது. சாமான்யர்கள் அடைவதற்கரியது. குரு முகமாய் மட்டுமே அறிந்துகொள்ள வேண்டிய மந்திர-தந்திர-யந்திர சாதனைகள் நிரம்பியது – “ஸ்ரீ வித்யை”.

ஆனால் அன்னையைச் சரணடைந்து அவளது அருளால் அவள் வழி நிற்கும் சாதகர்களுக்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் பேரானந்தம் தந்து இறுதியில் முடிவில்லா ஆனந்த வடிவமாகவே அவர்களை மாற்றுவது.

ஸ்ருஷ்டியைப் பற்றிய உண்மையைப் பிரித்தறிவது ஞான மார்க்கம். காண்பதெல்லாம்

இறைவனின் விபூதியென்றறிவது பக்தி மார்க்கம். இருப்பும் இயல்பும் இருப்பதும் இயல்வதும் அவனுக்கே என்று ஒப்படைத்து ஆட்பட்டிருப்பது கர்ம மார்க்கம். “ஸ்ரீ வித்யை” ஜகன்மாதாவை அழகின் எல்லையாக – லலிதையாக – அறியச் செய்கிறது. அவளது ஸ்ருஷ்டியாகிய இந்தப் பிரபஞ்சம் ஒவ்வோர் அணுவிலும் அவனது அழகின் ப்ரதிபிம்பமாக இருப்பதையும், ஒவ்வோர் அசைவிலும் அவளையே சித்திரிப்பதையும், அதன் ப்ரம்மாண்டமும்கூட அவளது பாததூளியைப் போலிருப்பதையும் தன் ஞானக்கண்களால் மட்டுமன்றி, நியமங்களாலும், தவத்தாலும், உபாசனையாலும் புடமிடப்பட்ட தன் ஊனக்கண்களாலும் கூடப் பார்க்கப் பழகுபவனே ஸ்ரீலலிதையின் உபாசகனாக முடியும்.

இந்த மஹாவித்யையின் ஆரம்ப நிலையில் – ஸ்ரீ வித்யையின் தோரண வாயிலில் – சாதகன் முதலில் தரிசிப்பது “பாலா த்ரிபுரசுந்தரியை”த்தான்.

மந்திரம் -யந்திரம் – தந்திரம் ஆகியமூன்றினாலும் அம்பிகையை உபாசிப்பது “ஸ்ரீ வித்யை” வழி. அதன் முதல் படி “பாலை” என்று குறிக்கப்படும் “பாலா த்ரிபுர சுந்தரி” உபாசனை. இது மந்திர ரூபம் மட்டுமே கண்ட உபாசனையாக மந்திர ஜபத்தையே ப்ரதானமாகக் கொண்டிருப்பதே மரபு.

ஆயினும் சாஸ்திரங்களில் “பாலா”வுக்கான ப்ரத்யேகமான யந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.

லலிதா பரமேஸ்வரியாகிய ஜகன்மாதாவின் புத்ரியாக முதிராத கன்னிகையாக பாலாவை வர்ணிக்கிறது லலிதோபாக்யானம். பண்டாசுர யுத்தத்தில் அன்னையின் சேனையில் பங்கேற்று “பண்ட புத்ரர்களை வதம் செய்து தன் விக்ரமத்தால் அன்னையை மகிழச் செய்தவள்” (லலிதா ஸஹஸ்ரநாமம் – 74ஆம் நாமம்”) மற்றும் ஸ்ரீபாலாயி நம: (965ஆம் நாமம்) என்று அவளை லலிதா பரமேஸ்வரியாகவே ஸ்துதிக்கிறது.

“அருண கிரண ஜாலை:” என்று தொடங்குகிறது அவளது த்யான ஸ்லோகம். இளஞ்சிவப்பு ஒளி வெள்ளத்தில் கையில் புஸ்தகம், ஜபமாலை ஆகியவற்றோடு அபயமும் வரமும் அருளுபவளாய் ப்ரகாசிக்கின்ற புன்னகையோடு வெண்மையான கல்ஹார புஷ்பத்தில் (அல்லி மலரில்) அமர்ந்திருப்பவளாக அவள் தியானிக்கப்பட வேண்டியவள்.

ஸ்ரீ வித்யோபாசனையின் முதல் படியாக “பாலா” இருப்பதாலும் அவள் “அருண கிரண ஜாலா” வாக இருப்பதாலும் தானோ என்னவோ அருட்கவியான அபிராமி பட்டரும் கூட “உதிக்கின்ற செங்கதிர்” – “உச்சித் திலகம்” – “மாணிக்கம்” – “மாதுளம்போது” – “குங்குமத்தோயம்” என்றெல்லாம் இளஞ்சிவப்பின் வர்ணனையையே தன் அந்தாதியின் முதல் பாடலாகப் பாடினார். “அல்லியந் தாமரைக் கோவில் வைகும் யாமள வல்லி” (பாடல் 96) என்று அல்லி மலரில் எழுந்தருளும் பாலையும் தாமரைத் திருவான மஹாலக்ஷ்மியும் அபிராமியின் வேறு வடிவங்களே எனக் காட்டுவதும் காண்க.

பாலா த்ரிபுரசுந்தரியின் த்யான ஸ்லோகம் “புல்ல கல்ஹார ஸம்ஸ்திதா” என்று சொல்லியிருப்பதாலும், சம்ப்ரதாயத்தில் பாலையின் சித்திரங்களில் அவள் அல்லி மலரின் மேல் அமர்ந்திருப்பதாகவே சித்திரித்திருப்பதாலும், “அமர்ந்த திருக்கோலத்திலேயே” சிற்பம் வடிக்கப்பட்டது. இளவரசிக்குள்ள சிறிய நெற்றிப் பட்டயம் (அரசிக்குரிய பெரிய கிரீடமல்ல), மலர்ந்த சிரிக்கும் கண்கள், சிறுமிக்கே உரிய பூரித்த கன்னங்கள், அற்புதப் புன்னகை, புத்தகம், ஜபமாலை, அபய வரத ஹஸ்தங்கள், வீராசனம்.

ஆலய வழிபாடு நமக்கு பாரம்பர்யமும் இயல்புமாகும். ஆயிரமாயிரம் கோயில்கள் கண்ட நம் முன்னோர் எத்தனையோ வடிவங்களில் அன்னையை ப்ரதிஷ்டை செய்துள்ள போதும் ஆனந்தரூபியான “பாலா த்ரிபுரசுந்தரி”யாக அவள் வெகுவாக ஆலயம் கொள்ளாதது ஒரு வியப்பே. தவ வடிவில் “கன்யாகுமரியாக” தென்முனையில் கையில் ஜபமாலையோடு கோவில் கண்டிருக்கும் பகவதியும் கூட திருமணக்கோலம் கொள்ளக் காத்திருக்கும் குமரி வடிவமே அல்லாமல் குழந்தை வடிவம் ஆகாது.

இக்குறை நீங்கும்படியாக பேரரசி மீனாக்ஷியின் அருட் தலமான மதுரைக்கு மேற்கே சோழவந்தான் அருகில் வைகை நதியின் தென்கரையில் கொடிமங்கலம் கிராமத்தில் சுகன்யா வடிவம் கொண்ட பாலைக்கு ஓர் ஆலயம் உள்ளது,நான் இன்னும் அந்த கோவிலுக்கு சென்று அம்பாளை தரிசிக்கவில்லை. அவள் என்னை கூப்பிடும் போது தானே போக முடியும்.

எனக்கு தெரிந்ததை, புத்தகத்தில் படித்து புரிந்து கொண்டதை அவள் அருளால் இங்கு பதிவு செய்தேன். அவளை பற்றி எழுதி கொண்டே இருக்கலாம். நிறைய எழுத எனக்கு அருள் புரிவாள் என்கின்ற ஆதங்கத்தில் இந்த பதிவை முடிகின்றேன்.

What’s the trait you value most about yourself?

I have nature of appreciation to motivate people and self motivating nature, because I know the value of life to growth.  I have an ability to be creative and find solutions to troublesome situations to support myself and other’s. Iam love and kind person and i give respect and Expect respect from others too. I know the value of Soul and others feelings. Iam a spritual person traveling towards Wisdom.

கற்பூரவீடிகா

அம்பிகையின் வைபோகம்

ஜெய ஜெய காமாக்ஷி

அம்பிகே! வெற்றிலை, வாசனைப் பாக்குத்தூள், பச்சைக்கற்பூரம், முத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சுண்ணம் முதலியவை கொண்ட ரத்தினத்தால் ஆன வெற்றிலைப் பெட்டியை நின் மனம் மகிழச் சமர்ப்பிக்கின்றேன்.

“பந்தன் இலை” அல்லது “கேதகீ” ஒரு சிறிய வகை இலையாகும், அது அன்னாசிப்பழச் செடி அளவே உயரம் வளரும். தாழம்பூ போல் உள்ளே இலைகளும், வெளியிலுள்ள இலையானது கடும் பச்சை நிறத்திலுமிருக்கும். நறுமணம் கொண்ட இச்செடியின் நறுமணம் அம்பிகைக்கு மிக பிரியமானதாகும்.

இந்த செடியின் நறுமணத்தால் சிவ பூஷணமாம் நாகங்கள் (ரஜ நாகம் கூட) கவர்ந்திழுக்கப்பட்டு இச்செடியின் அடியில் தங்கும். அதனாலோ என்னவோ அம்பிகைக்கும் இந்த நறுமணம் மிகவும் பிரியமானதாகும். உமையும், உடயானுக்கு ஆபூஷணமன்றோ, இடபாகத்தை அலங்கரிப்பவள் ஆயிற்றே!

இந்த இலையின் வர்ணத்திலுள்ள வெற்றிலையும், கற்பூரவீடிகா எனும் சுவையான வாசனை சூரணம் (பொடி) சேர்த்த, தாம்பூலத்தை அம்பிகைக்கு சங்கரர் அளிக்கிறார். கற்பூரவீடிகா சூரணமானது குங்குமப்பூ, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம், கஸ்தூரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவைகளை பொடித்து சர்க்கரை சேர்த்து செய்யப்படும் ஒரு நறுமணப் பொடியாகும்.

அம்பிகை இதை மெல்லும்போது, அதன் நறுமணம் அகிலமெல்லாம் பரவும். இந்த வர்ணனை லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் 26-வது நாமம் எடுத்துறைக்கிறது. அம்பிகையின் வாய் லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் நாமம் 559-ல் ‘தாம்பூல-பூரித-முஃகி’ என்கிறது.

லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் 24-வது நாமம் அம்பிகையின் உதடுகள் கோவைப்பழம் போல் சிவந்து அழகாக காணப்படுகின்றன என்று. இயற்கையிலேயே அம்பிகைக்கு அழகு மிகுந்த செவ்விதழ்கள், அதோடு சங்கரர் அளித்த தாம்பூலமான வெற்றிலையுடன், கற்பூரவீடிகா சூரணத்தோடு, முத்துச்சுண்ணமும் கலந்து மெல்வதாலேயோ என்னமோ அம்பிகையின் மந்தஹாசமான புன்முறுவல், பரசிவனையே வளைத்து விட்டது.

நமது ஆச்சார்யரும் அம்பிகையின் உதடுகளின் அழகில் அடிமையாகி, பல இடங்களில் இதை குறிப்பிடுகிறார்.

(உ) பவானி புஜங்கம் 7-ல் ‘பிம்பாதரஸ்மேர’ என்கிறார். பிம்ப என்றால் கோவைப்பழம் என்று அர்த்தம்.

பாவம் என்கிற பக்ஷி பறக்க வேண்டும். நாம் பாவம் செய்திருந்தால் அம்பாளை நினைக்க கூட முடியாது என்றாலும், அம்பாளை உபாசிக்க பல இடையூறுகள் பல வடிவங்களில் நம்மை வந்து சேரும். அவளை பரிபூர்ணமாக சரணடைய அதன் வீர்யத்தை கட்டுப் படுத்தலாம்.

 அம்பிகையின் திருக்கரத்திலிருக்கும் கிளியே ‘ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியாக’ அவதரித்து, ஸ்ரீமத் பாகவதம் முதலான நூல்களை அருளியதாக ஐதீகம்.

அம்பாளின் கையில் கிளி நமது மாயை குறிக்கும். அதாவது கிளி அம்பாளின் கையில் உட்கார்ந்து கொண்டு அம்பாளின் வாய் சிவந்து பழுத்த பழம் போல இருக்கிறது என்று எண்ணி அதன் அருகில் சென்று பிறகு அது பழம் இல்லை; அம்பாளின் உதடு என்பதை உணர்ந்து; பின்பு மறுபடியும் அம்பாள் உதடு அருகில் சென்று மறுபடியும் திரும்பி வருகிறது. அதுபோல் நாமும் மாயையில் பல விதங்களில் சிக்கி; மாயை என்று தெரிந்தும் அதை விட முடியாமல் தவிக்கிறோம்.

அம்பாளை அனுதினமும் தொழுது நின்றால் அன்றைய பொழுது நன்றாக அமைந்து இரவு உறக்கத்தில் ஆனந்தத்தை கண்டு; பிறகு அவள் அருளினால் அடுத்த நாள் புதிய வாழ்க்கை பிறந்து அவளை பணிந்து கிடக்க அந்த நாள் பொழுதும் நல்ல விதமாக கழிந்து; இப்படி அனுதினமும் “நவவருஷா” புத்தம் புதிய வருடங்களாக தனது அருளை வழங்கி

நமது வாழ்க்கையில் ஆனந்தத்தை கடத்தும், நமது எண்ண குவியலை முறியடித்து;அவள் கட்டுக்குள் கொண்டுவந்து எந்தவித பாதிப்பும்;தடைகளும் இல்லாமல் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

அம்பாளை வணங்கிட அவள் அருகாமையில் செல்வதற்கு முன்பு அவளை சுற்றி அமர்ந்துள்ள அணிமா; லகிமா. ….போன்ற சித்திகள் நாம் கேட்கும் வரத்தை கொடுக்க அம்பாளின் மாளிகை வாசலிலேயே கொடுக்க தயாராய் இருந்தாலும்; பக்தன் தனக்கு இந்த சித்திகள் எல்லாம் வேண்டாம்;அம்பாளின் திருவடிகள் மட்டும் போதும் என்று சரணாகதி அடைந்தாலும்; மாளிகையை விட்டு வெளிவந்தவுடன் மறுபடியும் மாயையில் கிளி போல அம்பாளின் உதடுகளை பழம் என்று நினைத்து அதன் அருகில் சென்று பிறகு தெளிவு பெற்று மறுபடியும் மாயையில் சிக்கி உழன்று உழன்று   தெளிவு கிடைப்பது போல நாம் அம்பாளை உபாசிக்க உபாசிக்க அவள் நமக்கு தெளிவு தந்து ஞானத்தை அருளி மோட்ச பாதையை காண்பிப்பாள்.  

உத்தம துதிகள் மூன்று

அம்பிகையின் வைபோகம்.

ஜகன்மாதாவை லலிதாம்பிகை என்ற ரூபத்தில் அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்ரம் பாடி ஆராதித்திருக்கிறார்கள்.

ஜெய ஜெய காமாக்ஷி

துர்க்கை, காளி, அன்னபூர்ணேச்வரி, புவனேஸ்வரி, இன்னும் பல ரூபங்களும் அவளுக்கு உண்டு. லலிதாம்பாள் விஷயமாக மட்டுமே இப்போது சொல்கிறேன்.

ராஜராஜேச்வரி, காமாக்ஷி, காமேச்வரி, த்ரிபுரஸுந்தரி என்ற பெயர்களில் சொல்லப்படும் ஸ்ரீவித்யா தந்த்ர ப்ரதிபாத்யமான [ஸ்ரீவித்யை எனும் வழிபாட்டு நெறிமுறைப்படி ஆராதிக்கப்படும்]தேவதை இந்த லலிதாதான்.

லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி, லலிதா அஷ்டோத்தரம் என்றெல்லாம் அந்தப் பேரில்தான் ஸ்ரீவித்யையின் அதிதேவதைக்கு நாமாவளிகள் இருப்பதைப் பார்க்கிறோம்.

அவளைப் பற்றிய ஸ்தோத்ர நூல்களில் மூன்று மிகவும் ச்ரேஷ்டமானவை:

துர்வாஸர் பண்ணிய ‘ஆர்யா த்விசதி’, மூகர் பண்ணிய ‘பஞ்ச சதி’, ஆசார்யாளுடைய ‘ஸெளந்தர்ய லஹரி’என்று மூன்று.

கால க்ரமத்தில் வரிசைப்படுத்தினால் முதலில் துர்வாஸர் பண்ணியது, அப்புறம் ஆசார்யாள் பண்ணியது, கடைசியில் மூகருடையது. மூன்றுக்கும் நடுவாக, நடுநாயகம் என்று சொல்லும்படியாக ‘ஸெளந்தர்ய லஹரி’இருக்கிறது.

அந்த மூன்று ஸ்தோத்ர கர்த்தாக்களும் [சிரித்து] ‘நம்மவர்’கள்;நமக்கு ரொம்ப ஸொந்தமானவர்கள்! நம்முடைய பீட அதீச்வரியாக இருக்கப்பட்ட காமாக்ஷியிடம் மூன்று பேருக்கும் விசேஷ ஸம்பந்தமுண்டு.

துர்வாஸர்தான் [காமாக்ஷிஆலயமாகிய] காமகோஷ்டத்திற்கான பூஜா கல்பத்தைப் பண்ணிக் கொடுத்தவர். அந்தப் பிரகாரந்தான் இன்றைக்கும் அங்கே அம்பாளுக்குப் பூஜை நடக்கிறது. ஆசார்யாளுக்கு காமாக்ஷியிடம், அங்கேயுள்ள காமகோடி பீடத்திடம் உள்ள ஸம்பந்தம் எல்லாருக்கும் தெரிந்தது. மூகர் கவியானதே காமாக்ஷிஅநுக்ரஹத்தில் தான்;அவர் ‘பஞ்சசதி’யில் ஸ்தோத்திரித்திருப்பதும் அவளைத்தான்.

மூன்றில் ‘ஆர்யா த்விசதி’தான் மிகவும் புராதனமானது. த்வி-சதம் என்றால் இருநூறு. ‘ஆர்யா த்விசதி’யில் இருநூறு ச்லோகங்கள் இருப்பதால் அப்படிப் பெயர். ‘ஆர்யா’என்ற அபூர்வமான சந்தஸில் (மீட்டரில்) அது பண்ணப்பட்டிருக்கிறது. அதோடு அது ஸ்தோத்ரிப்பதும் ‘ஆர்யா’என்ற அம்பாள்.

இப்படிச் சொன்னால் அம்பாள் ஆர்யக் கடவுள், திராவிடக் கடவுளில்லை என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது!ஆர்யர் என்றால் உயர்வு பொருந்தியவர் என்று அர்த்தமேயழிய, அப்படி ஒரு ரேஸுக்கும் பேரில்லை. வெள்ளைக்காரர்கள் பண்ணிய விபரீதந்தான் ‘ஆர்யன் ரேஸ்’என்று ஆக்கியது.

அம்பிகை உயர்ந்ததிலெல்லாம் உயர்ந்தவளாதலால் ஆர்யா. தமிழ்மொழி வழக்கில் ‘ஆர்யை’. பழந்தமிழில் அதை இன்னும் நன்றாகத் தமிழ் பாஷை விதிகளின்படி ரூபம் கொடுத்து ஐயை என்று சொல்லியிருக்கிறது. ஆர்யன்-ஐயன்;ஆர்யை-ஐயை.

‘ஐயனே என்று எந்த ரேஸிலும், எந்த ஜாதியிலும் உயர்ந்தவர்களாக இருப்பவர்களைக் கூப்பிடுவதுண்டு தானே?இருந்தாலும், பொதுவாக ப்ராம்மணர்கள் கல்வி கேள்விகளாலும், ஆசார ஸம்பத்தினாலும், குண சீலங்களாலும் மற்றவர்கள் உயர்வு தரும்படி இருந்ததால் – [சிரித்து]அந்த நாளில் இருந்ததால் – அவர்களைக் குறிப்பாக ஐயர் என்று சொல்வதாக ஆயிற்று. அப்போதுங்கூட அது ஜாதிப் பேர்தானே ஒழிய ரேஸ் பேரில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். ஒரே ரேஸில்தான் நாலு ஜாதிகளும்;ஸரியாகச் சொன்னால் நாலு வர்ணங்கள். நான்கு வர்ணங்களிலிருந்து உண்டானவையே நூற்றுக் கணக்கான ஜாதிகள்.

ஐயர், ஐயங்கார், மாத்வர் ஆகிய மூன்று வர்ணங்களும் ஒரே பிராம்மண வர்ணத்தில் உண்டானவை. நாட்டுக்கோட்டை செட்டியார், தேவாங்கச் செட்டியார், பேரிச் செட்டியார், ஆர்ய வைச்யர்கள் என்று அநேக ஜாதிகள் ஒரே வைச்ய வர்ணத்திலே இருக்கின்றன.

கீதையிலும் தர்ம சாஸ்திரங்களிலும் ‘சாதுர்வர்ண்யம்’என்ற நாலு வர்ண ஏற்பாட்டைச் சொல்லியிருக்கும் எந்த இடத்திலுமே அதில் முதல் வர்ணம், அல்லது முதலிரண்டு அல்லது முதல் மூன்று வர்ணங்கள் ஒரு ரேஸ் (அதாவது ஆர்யன் ரேஸ்) என்றும், நாலாவது வர்ணம் வேறே ரேஸ் (த்ராவிட ரேஸ்) என்று சொல்லியிருக்கவேயில்லை…

ஆர்யா என்று அம்பாளின் பேர். ஆர்யாம்பா என்றே ஆசார்யாளின் தாயாருக்குப் பேர். துர்வாஸர் பண்ணிய இருநூறு ச்லோக ஸ்தோத்ரம் ஆர்ய மீட்டரில் இருப்பதோடு ஆர்யா என்ற அம்பாளைக் குறித்ததாக இருப்பது. அதனால் இருபொருள்பட ‘ஆர்யா த்விசதி’என்று அதற்குப் பெயரிருக்கிறது. அதற்கே இன்னொரு பேர் ‘லலிதா ஸ்தவ ரத்னம்’என்பது. ஸ்தவம் என்றாலும் ஸ்துதிதான். லலிதாம்பாளைப் பற்றிய ஸ்துதிகளுக்குள் ரத்னம் போலிருப்பது ‘லலிதா ஸ்தவ ரத்னம்’.

பட்டாரிகா என்று அம்பிகையைச் சொல்வது வழக்கம். தமிழில் பட்டாரிகை என்று ஆகும். பட்டாரகர் என்றால் பூஜிக்கத் தக்கவர். அதற்குப் பெண்பால் பட்டாரிகா. பட்டாரர், பட்டாரி என்றே சொன்னாலும் போதும். பழைய காலத்தில் இந்தத் தமிழ் தேசத்தில் பிடாரி கோவில்களுக்குச் செய்யப்பட்ட ‘என்டோமென்ட்’களை ‘பட்டாரிகா மான்யம்’என்றே சாஸனங்களில் குறித்திருக்கிறது. இதிலிருந்து பட்டாரிதான் பிடாரி ஆகியிருக்கிறதென்று தெரிகிறது.

அம்பாள் பட்டாரிகா. அதனால் ஒரு தனி அர்த்தத்தில் அவளுடைய தலை சிறந்த மூன்று உபாஸகர்களுக்கு ‘பட்டாரகர்’என்று பட்டம் கொடுத்திருக்கிறது. யார் யாரென்றால் ஒன்று ஸாக்ஷ£த் ஈச்வரனே அவரைப் ‘பரமசிவ பட்டாரகர்’என்று சொல்லியிருக்கிறது. இன்னொருவர் மஹாகவி காளிதாஸர். உஜ்ஜயினி மஹாகாளியின் அநுக்ரஹத்தாலேயே வாக் ஸித்தி, கவிதா சக்தி பெற்றவர். அம்பாள் ஸ்தோத்ரம் என்று எடுத்தவுடன் எல்லாரும் படிக்கும் ‘ச்யாமளா தண்டக’மும் ‘நவரத்ன மாலா’வும் பண்ணியவர். அவரை ‘ச்ருங்கார பட்டாரகர்’என்று சொல்லியிருக்கிறது.

ஒரு பட்டாரகர் மநுஷ்யர்களில் கவியாக இருந்தவர்… கனம், லகு என்று இரண்டு, கனமாயில்லாமல் லேசாக இருப்பது லகு. தெய்வம் கனம்;மநுஷ்யன் லகு. லகு பட்டாரகர் என்ற ஒருத்தர் ‘பஞ்ச ஸ்தவி’என்று அம்பாள் பேரில் செய்துள்ள ஐந்து ஸ்தோத்ரங்கள் இருக்கின்றன.

காளிதாஸரான மநுஷ்ய பட்டாரகருக்கே லகு பட்டாரகர் என்றும் பெயராக இருக்கலாம் என்று ஒரு அபிப்ராயமுண்டு….. தெய்வம், மநுஷ்யர் இரண்டோடும் சேர்க்காமல் KS என்ற வர்க்கத்தைத் தனியாகச் சொல்வது வழக்கம். தேவரிஷிகள் என்ற நாரதர் போன்றவர்கள் தேவ ஜாதியில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள். மநுஷ்ய ஜாதியில் பிறந்து பூலோகத்திலேயே அநேகம் ரிஷிகள் இருந்திருக்கிறார்கள். பிறந்தது எந்த ஜாதியிலானாலும் எவரொருவர் ஆகாசத்தில் அநாதியாக ஸ¨க்ஷ்ம ரூபத்தில் பரவியிருக்கும் மந்த்ரங்களை நாம் கேட்கக்கூடிய சப்த ரூபத்தில் பிடித்துக் கொடுக்கிறாரோ அவர் KS என்ற தனி ஜாதியாகி விடுகிறார். தர்ப்பணம் முதலான வைதிக கார்யங்களில் தேவர்களுக்குச் செய்வது, ரிஷிகளுக்குச் செய்வது, மநுஷ்யர்களான பித்ருகளுக்குச் செய்வது என்று இப்படி மூன்று வர்க்கமாகவே சொல்லியிருக்கிறது. மூன்று பட்டாரகர்களில் ஈச்வரன் தேவர், காளிதாஸர் மநுஷ்யர் என்பதால் மற்றவர் ரிஷியாயிருந்தால்தானே பொருத்தமாயிருக்கும்?அப்படிப்பட்ட மூன்றாவது பட்டாரகர் யாரென்றால் KS வர்க்கத்தைச் சேர்ந்த துர்வாஸர்தான். ரிஷிகளுக்குள் அம்பிகையின் ப்ரஸாதத்தைப் பரிபூர்ணமாக அடைந்தவர் அவர். அவருடைய கோபம் ப்ரஸித்தமானதல்லவா?அதனால் அவரை ‘க்ரோத பட்டாரகர்’என்றே சொல்வது. பரமசிவ பட்டாரகர், ச்ருங்கார பட்டாரகர், க்ரோத பட்டாரகர் என்றிப்படி மூன்று பேர்.

க்ரோத பட்டாரகரான துர்வாஸர்தான் முதன் முதலில் அம்பாளை ஸ்துதித்த பூலோகவாஸி. அவர் ‘த்விசதி’ பாடினதோடு ‘சக்தி மஹிம்ந ஸ்தோத்ரம்’ என்றும் அம்பாள் மஹிமை பற்றி ஒரு உத்தமமான ஸ்துதி செய்திருக்கிறார். இவற்றுக்கு அப்புறந்தான் மற்றக் கவிகளின் வாக்குகள் உண்டாயின. அவர் வாக்கிலேயே அம்பிகை ஆவிர்பாவித்திருப்பது ‘த்விசதி’யை அநுபவித்துப் படிப்பவர்களுக்குத் தெரியும்.

ஒரு மையப் புள்ளியைச் சுற்றி அடுக்கடுக்காக நாற்பத்து மூன்று கோணங்கள் கம்பாக – cone shape ல் – எழும்பி அமைந்த ஸ்ரீசக்ரம் என்ற யந்த்ரத்தில், ‘ஆவரண’ங்கள் என்னும் சுற்றுக்களில் (மூல ஸ்தானத்தைச் சுற்றி பஞ்ச ப்ராகாரம், ஸப்த ப்ராகாரம் என்றெல்லாம் இருப்பதுபோல ஸ்ரீசக்ரத்தில் உள்ள சுற்றுகளில்) அநேக தேவதைகள் சூழ்ந்திருக்க, அதன் உச்சியாக உள்ள மையப் புள்ளியான பிந்து ஸ்தானத்தில் காமேச்வரனுடைய வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கிற காமேச்வரியான ராஜராஜேச்வரியை அந்த எல்லா முக்கோணங்களையும், ஆவரண தேவதைகளையும் விவரமாகச் சொல்லி துர்வாஸர் ஸ்தோத்திரித்திருக்கிறார். இந்த உத்க்ருஷ்டமான கிரந்தத்தைப் பாராயணம் பண்ணினால் நல்ல அநுக்ரஹம் உண்டாகும்;குறிப்பாக நல்ல வாக்கு, கவித்வ சக்தி உண்டாகும்.

அம்பிகை பண்ணுகிற பெரிய அநுக்ரஹம் அவளை வர்ணித்து வர்ணித்து ஸ்துதிக்கிற ஆனந்தத்தைத் தரும் உயர்ந்த வாக்கு விசேஷம்தான். இந்த வாக்குதானே ஒரு பக்தர் பெற்ற அநுபவத்தை மற்றவர்களுக்கும் தெரிவித்து, அவர்களும் அதைப் பகிர்ந்து கொள்ளும்படிச் செய்கிறது? அதுதான் வாக் சக்தி அருள்வதன் விசேஷம்.

ஒரு ஊமைக்கு இப்படிப்பட்ட அபார வாக்குச் சக்தியை அவள் அநுக்ரஹம் பண்ணினாள். காஞ்சீபுரத்தில் காமாக்ஷிகோயிலில் இருந்த அவருக்கு [இயற்]பெயர் என்னவென்றே தெரியவில்லை. ‘மூகர்’என்று சொல்கிறோம். ‘மூகர்’என்றால் ஊமை என்று அர்த்தம். அந்த ஊமைக்கு அம்பாளின் அநுக்ரஹம் கிடைத்ததுதான் தாமதம், த்வி-சதி இல்லை, பஞ்ச-சதியாகவே ஐநூறு ச்லோகங்களை வர்ஷித்துவிட்டார்!துர்வாஸர் பண்ணினது ‘ஆர்யா த்விசதி’என்றால், மூகர் பண்ணின ‘பஞ்ச-சதி’யில் முதலாவதாக ‘ஆர்யா சதகம்’என்ற நூறு ச்லோகங்கள் இருக்கின்றன. இதுவும், ஆர்யா வ்ருத்தத்தில் [மீட்டரில்]தான் அமைந்தது. அடுத்ததாக அவளுடைய திருவடிகளின் அழகை மட்டுமே நூறு ச்லோகங்களில் சொல்கிற ‘பாதார விந்த சதகம்’, மூன்றாவதாக அவளுடைய பலவித மஹிமைகளைத் துதிக்கும் ‘ஸ்துதி சதகம்’, அதற்கப்புறம் அம்பாளின்கடாக்ஷவீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் ‘கடாக்ஷசதகம்’என்று நூறு ச்லோகங்கள், கடைசியில் அவளுடைய மந்தஹாஸத்தைப் பற்றியே ‘மந்தஸ்மித சதகம்’என்று நூறு – இப்படிப் ‘பஞ்ச சதி’யை மூகர் பண்ணியிருக்கிறார்.

‘ஆர்யா த்விசதி’யும் ‘மூக பஞ்சதி’யும் ஒரு நல்ல சைத்ரிகன் அம்பிகையின் ஸ்வரூபத்தை எழுதிகாட்டுகிற மாதிரி அவளை மனகண்ணுக்கு முன் தோன்றும்படிச் செய்கின்றன. கண்ணுக்கும் மனஸுக்கும் எட்டாதவளைக் கிட்டத்தில் காட்டிக் கொடுக்கின்றன.

மேலும் சிந்திப்போம்.

அஜபா மந்திரம் Part-2.

அம்பிகையின் வைபோகம்.

தேவி ஆறுசக்கரங்களிலும் விளங்குவது எப்படி என்று ஒரு எளிமையான சின்ன விளக்கம். 

நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலிலேயே பஞ்சபூதங்களும் அடங்கி உள்ளன என்பதைக் குறிக்கவே மூலாதாரம், ஸ்வாதிஷ்டாநம் , மணி பூரகம், அநாஹதம், விசுத்தி, போன்ற சக்கரங்களும் பஞ்சபூத தத்துவங்களைக் குறிப்பிடுகின்றன. கடைசியான ஆக்ஞா சக்கரம் நம் புருவ மத்தியைக் குறிக்கும் இடம். 

ஜீவாத்மாவிடம் ஈசனின் ஆக்ஞாயானது அங்கே பிரகாசிக்கின்றது. அதனாலேயே ஆக்ஞாசக்கரம் என்பார்கள். 

லலிதாசமேத காமேசுவர மகாலிங்கமானது அங்கே நிர்குண, ஸகுண சக்தியால் அலங்கரிக்கப்படும். இங்கே நிர்குண, ஸகுண சக்தியாக அம்பிகையே குறிக்கப் படுகிறாள். இப்படி குறிக்கப்படும் அம்பிகை ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகங்களோடு பிரகாசிக்கும் வெண்ணிறத்தோடு ஹாகினி என்னும் பெயரோடு எழுந்தருளி இருக்கிறாள்.

“ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!!”

“ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ-ரூப-தாரிணீ”

என்று ஸ்ரீலலிதையின் சஹஸ்ரநாமம் இவளைப் போற்றும்.

அடுத்து நம் நாட்டில் இப்படி ஆக்ஞா சக்கரஸ்தானமாய்க் கருதப்படும் இடம் காசி க்ஷேத்திரம் ஆகும். அம்பிகை இங்கே துர்க்கையாகவும் காசி விசாலாக்ஷியாகவும் இருவிதப் பிரதான சக்திகளாய்த் தோன்றுகிறாள். இந்த ஆக்ஞா சக்கரம் ஆத்மத்வம் என்றும் கூறுவார்கள். இங்கே ஸ்வயம்பிரகாசமான சக்தியைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்குமே தவிர அதற்காக சுயமான ஒளி இல்லை. சூரிய, சந்திரரும், மின்னல்களும், அக்னியுமே அந்தப் பிரகாசத்தில் தெரியாதெனில் மற்றவை எம்மட்டு?? இதைக் கடந்தே ஸஹஸ்ராரத்தில் பிரவேசிக்கவேண்டும். இப்படி ஆத்மாவை எதுவும் ஒட்டாது என்பதை இங்கே பார்த்தோம் அல்லவா??? (இனிமே ஆத்மா சாந்தி அடையட்டும்னு பிரார்த்திக்கும் முன்னே கொஞ்சம் யோசிங்க)

நாம தான் கீழே தானே போவோம்?? ஆகவே கீழேயே போய்ப் பார்ப்போமே! ஆத்மாவிலிருந்து கீழே வந்தால் மனசு தோன்றுகிறது. அதே போல் நம் புருவ மத்தியிலிருந்து கீழிறங்கினோமானால் நெஞ்சுக்குழி வருகிறது. இதுவே விசுத்தி சக்கரம். ஆகாயதத்துவம்.

“விசுத்தி –சக்ர- நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா

கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா

அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா டாகினீச்வரீ”

சிவந்த ரத்த நிறத்துடனும், மூன்று முகங்களுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை இங்கு பதினாறு தள கமலத்தில் டாகினீ என்னும் பெயரில் விளங்குகிறாள். இங்கு அம்பிகையும், ஈசனும், சூரியனையும், சந்திரனையும் போல் தண்மையும், வெம்மையும் கலந்து பூவோடு சேர்ந்த மணம் போலவும், கரும்பில் கலந்திருக்கும் இனிமை போலவும், தீபத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒளி போலவும் காட்சி அளிக்கின்றனர். சகல ஜீவர்களுக்கும் ஜீவாதாரமாய்ப் பிரகாசிப்பதே இவர்கள் இருவரின் ஆநந்தமயமான ஜோதிப் பிரகாசமே. நம் புண்ணிய பாரதத்தில் இப்படி ஆகாய க்ஷேத்திரமாய் விளங்கிப் பிரகாசிப்பது சிதம்பரம் க்ஷேத்திரமே. இங்கு ஆகாய தத்துவ உபாசனை. தஹராகாசம் செய்யப் படுகிறது. “தஹராகாச-ரூபிணீ” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும். இங்கு அம்பிகையும், ஈசனும் வ்யோமேஸ்வரனும், வ்யோமேஸ்வரியாகவுமோ அல்லது அர்த்தநாரீஸ்வரராகவோ வழிபடப் படுகின்றனர். பட்டர் இதை,

“பரிபுறச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்

திரிபுர சுந்தரி சிந்துரமேனியள் தீமை நெஞ்சில்

புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை

எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே!” என்கிறார்.

அடுத்து ஆகாய தத்துவத்திலிருந்து இன்னும் கீழே வரணும். ஆகாயத்திலிருந்து தோன்றியது வாயு.

“அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா

தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர –ஸம்ஸ்திதா

காலராத்ர்யாதி-ச்க்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா

மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா-ஸ்வரூபிணீ”

இங்கு பனிரண்டு தளக் கமலத்தில் வீற்றிருக்கும் அம்பிகை ச்யாமளையாக ராகினீ என்னும் பெயருடன் வீற்றிருக்கிறாள். இவளே கல்விக்கு அதிபதி. 

இவள் நம் இதயத்தில் ஞானத் தாமரையை மலர வைக்கும் ஹம்ஸங்களாக ஈசனோடு உலவுகிறாள். நம் மனத் தடாகத்தில், இதுவே மானசரோவர் எனப்படும். 

இந்த மானசரோவரில் பக்தர்களின் ஞாநத்தையே அநுபவித்து அதைப் பற்றியே தங்களுக்குள் இனிமையாகப் பேசிக்கொள்ளும் ஹம்சங்களான ஈசனும், அம்பிகையும் ஹம்சேஸ்வரனாகவும், ஹம்சேஸ்வரியாகவும் இருக்கின்றனர். இவர்களின் அருளாலேயே நமக்கு சகல வித்தைகளும் கிடைக்கப் பெறுகிறோம். இந்த ஹம்ஸங்களின் சம்பாஷணையே அனைத்து வித்தைகளும். உள்முகத் தியானத்தாலேயே இது கைகூடும். இதற்காக ஜபிக்கப் படும் மந்திரமும் அஜபா மந்திரமாகவே சொல்லப் படும். தக்க குரு மூலம் தீக்ஷை பெற்று மந்திர ஜபம் உபாசிக்க வழிமுறைகளை ஏற்று முறையாக ஜபிப்பவர்களுக்கு பிரத்யக்ஷமாகத் தரிசனம் கிட்டும். ச்யாமளையின் அருளும் கிடைக்கும்.

“கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியல்

பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்

மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்

பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!”

என்று இவளை வியந்து கூறுகிறார் பட்டர் பெருமான். கடம்பவனத்தில் பண்களால் களிக்கும் குரலோடு இசைந்த அழகான வீணையும் ஏந்திய வண்ணம் பச்சை நிறப் பேரழகியாகக் காட்சி அளிக்கிறாளாம் அம்பிகை. நம் நாட்டில் அநாஹதத்தில் உள்ள ஹம்ஸ்த்வந்த்வ உபாசனை முறைக்கு ஏற்பட்ட தலம் ஆவுடையார் கோவில் ஆகும். 

விநாயகர் அகவலில் இந்த அஜபா மந்திரத்தின் வெகு சிறப்பாக ஓளவையாரும், திருமூலர் திருமந்திரத்தில் திருமூலர் கூறும் அழகோ அழகு. அதை வர்ணிக்க பிறகு தனிப்பதிவு இடுகிறேன். ஓரு உதாரணத்திற்கு இங்கு சில  மேற்கோள்கள்.

மூலாதாரவாசி

41. குண்டலி யதனில் கூடிய அசபை

42. விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

பதவுரை:

குண்டலி அதனில் – குண்டலினி எனும் சக்தியுடன்,

கூடிய அசபை – கூடியிருக்கும் (உரைக்க முடியாத)

அம்ச மநுவை,

விண்டு எழு மந்திரம் – வாய் திறந்து சொல்லும் மந்திரமாக,

வெளிப்பட உரைத்து – வெளிப்படையாகக் கூறற்கு உரியதுபோல் கூறி (என்றவாறு).

வாய் திறந்து உரைக்க இயலாதது, அஜபா மந்திரம். இது குண்டலினியின் 

உள்ளொளியாய் அடங்கிப் ‘பேசாத மந்திரம்’ எனும் பெயரைப் பெற்றது.

அதனிலிருந்து பேசும் மந்திரம் பிறந்தது. இரண்டும் தனித்தனி ஓரெழுத்து மந்திரங்கள். இவைகளை வெளிப்படையாக எனக்குக் கணபதி விளங்க உபதேசித்தார் என்றபடி,

‘அசபை யறிந்துள்ள அனலெழ நோக்கில்

இசையாது மண்ணில் பிறப்பு’

– எனும் ஔவை குறளும்.

‘ஓங்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளை

நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்

ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு 

ரீங்காரத் துள்ளே யினிதிருந் தாளே!’

– என்கிறார், மூலம் உணர்ந்த திருமூலர். அவர் மந்திரமும் இங்கு மனனம் கொள்ளற்கு உரியன. இனிய மூச்சை இழுப்பர்; நிறுத்துவர்; பின் வெளிவிடுவர். அக்காலத்தில் பிறக்கும் மகத்தான நுண்மை ஒலியே அசபா மந்திரம் என்பதை, மீட்டும் நினைவுறுத்துகிறோம். ஊமை மந்திரம் என்றும் இதற்குப் பெயர் உண்டு. 

மேலும் இது குறித்து,

‘ஐந்தக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து’

– எனும் 69’ம் அடியிலும் விளக்கப் பெற்றுள்ளது; ஆண்டும் அதையறிதல் நலம்.

துடிப்பில் இன்பம். ஆஹா! ஊன்றி அதை உணர்! பலகாலப் பயிற்சியில், தானே இயல்பாக எழும் குண்டலினி, ஆதார கமலங்களையடைந்து, சஹஸ்ராரத்தைச் சாரும்.

‘நற்றவா! உனை நான் மறக்கினும்

சொல்லும் நா நமச்சி வாயவே’

– என்கிறார் சுந்தரமூர்த்திகள்.

‘நற்றுணையாவது நமச்சிவாயவே!’

– என்கிறார் அப்பர் பெருமான்.

ந – மறைக்கும் சக்தி,

ம – மலம்,

சி – சிவம்,

வ – அருள்,

ய – ஆன்மா

– என்பது பொதுவாகக் குறிப்பிடும் புனித நடை.

ஆன்மா மறைப்பு நீங்கி, மலமகன்று, தானேயாய், வகர அருளை எய்தி, சிவத்தைச் சார்ந்து வீடு பெறல், ஐந்தக்கர நுட்பம். இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

இனி ஸ்ரீலலிதையின் சோபனப் பாடல்களில் ஸ்ரீவித்தை ஜபத்தின் மஹிமை கூறுதல்.

மந்திரங்களுக்கெல்லாம் பெரிதான ஸ்ரீவித்தை

மஹாகுருவினிடத்தில் வேண்டிக்கொண்டு

மந்திரத்திற்குச் சொன்ன ஜபஹோமங்கள் செய்து

மஹிமை தேவாளுக்குப் போஜனமளித்த்துப்

பின்னர் தேவியை பரமாத்மாவாய்த் தியானித்து

பிறகு நிஷ்காம்ய ஜபம் செய்தபேர்க்கு

எண்ணின காரியம் கைகூடும் ஜகத்திலே

இவர்கள் எங்கும் பூஜ்யர்-சோபனம் சோபனம்

அசுத்தத்துடன் சோபனத்தைச் சொன்னபேர்க்கும்

அசங்கித்த பேர்க்கும் பிணிகளுண்டு

அசுத்தமில்லாமலும் அசங்கையில்லாமலும்

அம்மன் சோபனமென்றும் பக்தியுடன்

விச்வாஸமாய்ச் சொன்னபேர்க்கும் கேட்டவர்க்கும்

வியாதியில்லை சத்ரு பாதையில்லை

நிஜமாய் ஜ்வரம் வியாதி ரோகாதிகளில்லை

நித்ய ஸம்பத்துண்டு- சோபனம் சோபனம்

இந்தச் சோபனம் பாடும் வாழ்வரசிகள் எல்லாம்

தேவிகளென்று மனதிலெண்ணி

சந்தனத் தாம்பூலம் குங்குமம் பழம் புஷ்பம்

ஸந்தோஷமாய் எல்லார்க்குங் கொடுத்து

எந்தெந்தக் கிருஹங்களில் சொல்ல வைத்துக் கேட்பாரோ

அந்தந்தக் கிருஹங்களில் அரிஷ்டம் நீங்கும்

ஸுந்தரி கிருபையாலே ஸந்ததி விருத்திக்கும்

தீர்க்காயுஸுமுண்டு –சோபனம் சோபனம்.

மேலும் சிந்திப்போம் அம்பிகையின் அருளுடன்.

நமோ  தேவ்யை.

Best Regards / Meilleures Salutations / Mit freundlichen Gru3en
Kumar Ramanathan.

அஜபா ஜபம் Part -1

அம்பிகையின் வைபோகம்

ஒரு அற்புத ஞானி
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்


ஒரு கப்பல் விஷயம்

சேஷாத்திரி ஸ்வாமிகள்

வேலூரில் ஒரு சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தை. பெயர் சுந்தரம்மாள். ஒருநாள் அவள் ஸ்வாமிகளிடம் ”அஜபா” என்றால் என்ன என்று கேட்டுவிட்டாள் . அவளுக்கு நம் அனைவரின் ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். அவளால் நமக்கு ஒரு மிகப் பெரிய உபதேசம் எளிதாக கிட்டிவிட்டது. நீடூழி வாழ்க அந்த சுந்தரம்மாள் ஆத்மா.

சுவாமி இதற்கு பட்டென்று பதில் சொல்லிவிட்டார்:

”ஒரு பெரிய சமுத்திரம் இருக்கு. அதில் ஒரு பெரிய கப்பல் போகிறது. அந்த கப்பலில் ஐந்து பேர் சௌரியமாக உட்கார்ந்துண்டு போறா. இன்னொருத்தன் அதை ஓட்டறான். ரொம்ப ஜாக்கிரதையா ஓட்டணும்”

இது ஏதாவது புரிந்ததா? ஹுஹும்….. நிச்சயம் என்ன பேத்தல் இது என்று தான் நமக்கு தோன்றும். இப்போது கொஞ்சம் விபரம் சேகரிப்போம், அதை அறிவோம். பிறகு புரியும்.

ஸ்வாமிகள் சொன்னது அஜபா காயத்ரி மந்த்ர தாத்பர்யம்.

அஜபா காயத்ரி எந்த வித ப்ரயத்தனத்துடனும் உச்சரிக்கப் படாமல் தானாகவே நடைபெறுகிற ஒரு காயத்ரி ஜபம். ” ஜபா” என்றால் ஏதோ ஒரு ப்ரயத்தனத்துடன், முயற்சியுடன், ஈடுபாடுடன், முக்கியமான சில அக்ஷரங்களை உச்சரிப்பது அல்லவா. ”அ–ஜபா” என்றால் அப்படி எந்தவிதமான ப்ரயத்தனமும் முயற்சியும் ஈடுபாடும் இல்லாமல் தானாகவே நிறைவேறுவது என்று அர்த்தம். இது எப்படி சாத்தியம் ? என்று தலையை சொறியவேண்டாம்? கொஞ்சம் மெதுவாக யோசிப்போம்.

நமக்கும் தெரியாமலேயே நமது தேகத்துக்குள் ஏதோ ஒரு ஜபம் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதுதான் அஜபா காயத்ரி.

குறைந்தது ஒவ்வொருநாளும் நமது தேகத்தில் 21600 மூச்சு, ஸ்வாசம், நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது இதை படிக்கும்போது கூட மூச்சு விடும் உங்களுக்கு இதில் நமது முயற்சி ஒன்றுமே இல்லை என்று புரியும்.நாம் யோசித்து பார்த்து ஏதோ ஒரு பிளான் பண்ணியா சுவாசிக்கிறோம்?

. ”அஹம் ஸ: ஸோஹம்” ( நானே அவன் : அவனே நான்) என்ற மந்திரம் ஒவ்வொரு உஸ்வாஸ, நிஸ்வாஸத்திலும் உள்ளும் வெளியும் போய் கொண்டிருக்கிறது. இப்படி நடப்பது எல்லா தேகத்திலும். இதில் ஆண் பெண், குழந்தை, பெரியவன் என்று வித்யாசமே இல்லை. தானாகவே ஓடும் சுவாச மந்திரம். இதெல்லாம் தெரியாமலே நிறைய பேருக்கு ஜனனம் மரணம் சம்பவித்து வாழ்க்கையே முடிந்து போகிறது.

ஒரு நிமிஷம். ஒரு சின்ன அப்பீல். அறிக்கை :

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்வாசத்திலும் இப்படி ஒரு காயத்ரி ஜபம் நடந்து கொண்டிருக்கிறது என்று அறிந்தால் போதும். முடியுமானால் ஸ்வாசத்தை இனிமேலாவது கவனித்துக் கொண்டே வரலாம். அப்போது நாம் 21600 காயத்ரி ஜபம் பண்ணவர்களாக ஆகிவிடுவோம். அதனால் நமது தேகத்துள் அதி சூக்ஷ்மமாக இருந்து வரும் பரமாத்மாவை உணரமுடியும். இது தானய்யா ஆத்ம ஞானம் என்பது. ரொம்ப பெரிய பெரிய வார்த்தைகளால் இது புரிபடாமல் மழுங்குணி மாங்கொட்டையாக நாம் இருக்கவேண்டாம்.

மேலே நான் சொன்னது ஹம்ஸ உபநிஷத்தில் வருகிறது.

அஜபா காயத்ரி நமது தேகத்தில் நடப்பதை எப்படி அறிவது? எப்படி கவனிப்பது? என்பதை தான் ஸ்வாமிகள் பூடகமாக அவருக்கே உரித்தான பாஷையில் சொல்லியிருக்கிறார். மேலே சேஷாத்திரி ஸ்வாமிகள் சொன்னதை இன்னொரு முறை படியுங்கள்.

சமுத்திரம்: ஜனன மரண அலைகள் ஓயாது கொந்தளிக்கும் பிறப்பு-இறப்பு வாழ்க்கை.
கப்பல் : இந்த பவ சாகரத்தில் அவ்வப்போது நாம் எடுக்கும் தேகம். கப்பல் இல்லாமல் சமுத்திரம் எப்படி கடப்பது?

5 பேர் யார்? : சுரோத்திரம், த்வக், சக்ஷு, ஜிஹ்வா, க்ராணம் என்ற ஞானேந்திரியம் ஐந்திற்கும் உடைய அதிபதிகள் திக், வாயு, சூர்யன், வருணன், அஸ்வினி தேவர்கள்,

ஓட்டுபவன்: ஜீவன் – ஒவ்வொரு தேகத்திலும் உள்ளவன்.

ஜாக்கிரதையாக ஓட்டுவது: நானே அவன்: அவனே நான் என்ற எண்ணத்தால் மற்ற அனைத்தையும் விட்டொழித்து பரமாத்மா சிந்தனையில் ஸ்வரூப ஸ்திதியில் நிலைத்திருப்பது.

அஜாக்கிரதையாக, குடித்து விட்டு ஓட்டும் ட்ரைவர் வண்டியில் உட்கார்ந்தால் நம் கதி, வண்டியின் கதி ?? இந்த ட்ரைவர் தேக கப்பலை பவ சாகரத்தில் மூழ்கடித்து விடுவான். அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்வாமிகள்.

சரீர கப்பலை ஜாக்கிரதையாக ஓட்டுவது புரிந்தால் நான் எழுதினதில் பிரயோஜனம் இருக்கிறது என்று ஆகும்.

சிந்தனை வளரும்.

#ஶ்ரீ_மஹாத்ரிபுரஸுந்தரீ.

ஸ்ரீ.லலிதையின் வைபோகம்.

ஜெய ஜெய காமாக்ஷி

“லலிதா யார்??” எனும் இக்கேள்விக்கான பதிலை பாவனோபநிஷத் கூறும்!! “ஸ்வயமேவ ஆத்மா லலிதா!!” பளிச்!! என்று ஒரே வாக்யத்திலேயே பதில்!! உனது சொந்த ஆத்மனே ஶ்ரீலலிதா!! ஸத்யமிதுவே!!

தேவீ உபநிஷத்துக்களை தனிப்பதிவிலே சிந்திப்போம்!! அத்தேவீயின் மஹிமையானதை மஹாதேவனான பரமேச்வரனும் கூறவியலாது!! தூர்வாஸ மஹர்ஷி உரைப்பர்

“மாதஸ்தே மஹிமா வக்தும் சிவனோபி ந: சக்யதே”

“ஓ!! தாயே!! உன் மஹிமையை பரமசிவனாலும் கூற முடியாது!!”

ஒப்புயர்வில்லா ஶ்ரீராஜராஜேச்வரியின் வைபவம் யாராலும் உரைக்க முடியாதது. ஶ்ரீத்ரிபுரா மஹிம்ன ஸ்தவம் கூறும்!!

“ஶ்ரீசக்ரம் ச்ருதி மூலகோசமிதி தே ஸம்ஸார சக்ராத்மகம்

விக்க்யாதம் ததடிஷ்ட்டிதாக்ஷர சிவஜ்யோதிர் மயம் ஸர்வத:

ஏதன் மந்த்ரமயாத்மிகபிரருணம் ஶ்ரீஸுந்தரிபிர் வ்ருதம்

மத்யே பைந்தவ ஸிம்ஹ பீட லலிதே த்வம் ப்ரஹ்மவித்யா சிவே”

“பரமசிவன் பதினியே!! உனது வஸிப்பிடமான ஶ்ரீசக்ரம் வேதங்களுக்கும் மூலமானது!! ஓங்காரத்தின் உறைவிடமானது!! ஸம்ஸார சக்ராத்மகமாகவும் விளங்குவது!! ஶ்ரீசக்ரத்தில் விளங்கும் மாத்ருகாக்ஷரங்கள் சிவஜ்யோதி மயமானவை!! ஆவரண தேவதைகளால் சூழப்பெற்றது உனது ஶ்ரீசக்ரம்!! சிவந்த வர்ணமுடைய உனது ஒளிரூபத்திலிருந்து தோன்றிய ஸுந்தரிகளால் சூழப்பெற்றுள்ளது ஶ்ரீயந்த்ரம்!! அதன் மத்யத்தில், பைந்தவ பீடத்தில், ஸிம்ஹாஸனத்தில் ஜ்வலிக்கும் ஶ்ரீலலிதாம்பிகையே, நீயல்லவோ ப்ரஹ்ம வித்யை!!”

ஶ்ரீவித்யோபாஸனை ஸாக்ஷாத் ப்ரஹ்மவித்யோபாஸனையே!! வேதங்களின் ஸாரமான உபநிஷத்துக்கள் இதையே செப்புகின்றன!! நூற்றெட்டு உபநிஷதங்களில் இறுதியில் நூற்றேழாவதாக வருவது “பஹ்வ்ருசம்” எனும் உபநிஷத்தே!! நூற்றாறும் பஹ்வ்ருசீர்ஷோபநிஷத்தில் ஸங்கமமாகி விடுகின்றது!! நூற்றெட்டாவது உபநிஷதப் பட்டியல்!! ஆக வேத புருஷனும் இறுதியில் ஶ்ரீலலிதா பட்டாரிகையையே சரணமடைகின்றான்!!

ஜெய ஜெய பாலா

“இவளே ஶ்ரீவித்யை!! ஷோடஷீ!! பஞ்சதசாக்ஷரி!! பாலா!! பகளா!! மாதங்கி!! ஸ்வயம்வர கல்யாணி!! புவனேச்வரீ!! பைரவீ!! ப்ரசண்ட சண்டி!! வாராஹி!! திரஸ்கரிணி!! அச்வாரூடா!! ப்ரத்யங்கிரா!! தூமாவதி!! காயத்ரி!! ஸாவித்ரி!! ஸரஸ்வதி!! ப்ரஹ்மானந்த கலா!!” என இவ்வனைத்து வடிவங்களுமே த்ரிபுரஸுந்தரீ தான்!!

பஹ்வ்ருசம் அழகாக செப்பும் “லலிதையே ஸத்யம்!! இவளைத் தவிர்த்து ஸத்யம் உள்ளதென்பதே அஸத்யம்!!” என்று!!

இவ்வுபாஸனையின் பலன் என்ன!! மஹாமந்த்ரமான ஶ்ரீவித்யை ஆத்ம ஞானத்திற்கே!! ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கே!! அவ்வித ஆத்ம ஸாக்ஷாத்காரம் கிட்டியவன் ஸாக்ஷாத் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரீ பராபட்டாரிகையே!! ஸௌந்தர்யலஹரீ செப்பும்!!

“ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணிபிரணிமாத்யாபிரபிதோ

நிஷேவ்யே நித்யே த்வாமஹமிதி ஸதா பாவயதி ய:

கிமாஷ்சர்யம் தஸ்ய த்ரிநயநஸம்ருத்திம் த்ருணயதோ

மஹாஸம்வர்தாக்நிர்விரசயதி நீராஜன விதிம்”

“ஹே குலாசலேந்த்ர ராஜகன்யே!! உனது சரீரத்திலிருந்து வெளிப்பட்ட ஜ்யோதியில் தோன்றிய அணிமாதி சக்திகள் சூழ ஜ்வலிக்கும் உன்னை ஸதா ஸேவித்து, நித்யையான உன்னை எவன் தானே நீ என ஸதா பாவிக்கின்றானோ(அஹமித்யேவ விபாவயே பவானீம்!!)அவன் த்ரிநேத்ர தாரியாம் பரமசிவனது பதவியையும் அவரது ஐச்வர்யத்தையும் புல்லுக்கு ஸமமாய் மதிப்பான்!! ஸர்வ உலகங்களையும் அழித்து எரிக்கும் ப்ரளயகாலாக்னியும் அவனுக்கு கற்பூர நீராஜனம் செய்யும் எனில், அதில் என்ன ஆஸ்சர்யமுள்ளது அம்மா!!”

ஶ்ரீவித்யோபாஸனையின் பலன் இதுவே!! பவானித்வமே ஸத்யமான பலன்!! இவ்வித அஸாத்யமான அனுக்ரஹம் கிடைப்பதற்கான வழியை ஶ்ரீதத்தாத்ரேயர் கூறியுள்ளார்!!

Best Regards,
R.Kumar 
Mobile.9320283655
WhatsApp.9769166262.

ஸ்ரீ.கணபதி உபநிடதம்

ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத்து! விளக்கத்துடன்.
By. குமார் ராமநாதன்

கணபதியே வருவாய்; அருள்வாய்.

இந்து தர்மத்தில் வேதங்களும் உபநிஷத்துக்களும் உயர்ந்த படைப்புக்களாக பெரியவர்களால் போற்றிக் கூறப்படுகின்றன. இவற்றில் உபநிஷத்து என்பது நேரடியாக ஆன்மா பற்றியும் ப்ரும்மம் பற்றியும் எடுத்துக்கூறும் வேதம் ஆகும்.

உபநிஷத்துக்கள் நேரடியாக பிரம்மத்தைப் பற்றியும் படைப்பை பற்றியும் ஆன்மா பற்றியும் எடுத்துக் கூறி புரியவைக்க முயற்ச்சி செய்கிறது!.

அதென்ன முயற்ச்சி செய்கிறது? என்று கேட்கிறீர்களா? ஆம், ஆன்மா என்பது எந்த விதத்திலும் ஒரு அறிவியல் ஃபார்முலா போலவோ, ஒரு பொருளைக் காட்டிவிடுவது போலவோ உருவகித்தோ எடுத்துச் சொல்லியோ காட்டிவிட முடியாது, புரியவைத்து விட முடியாது.

எனவே பலவிதமான வழிகளில் அவற்றை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
உதாரணமாக கடஉபநிஷத்து என்பது நசிகேதன் என்கிற பாலகனுக்கும் எமதர்மனுக்கும் நடக்கும் உரையாடல் போல அமைத்து அதன் மூலம் எமதர்மனே ஆன்மா என்றால் என்ன? இறப்பிற்குப் பின்னால் ஆன்மா என்னவாகிறது என்பதை எடுத்துச் சொல்வது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

அது போல கணேச அதர்வசீர்ஷம் என்கிற இந்த உபநிஷத்தும் கூட முழுமுதற்க் பெருமானான கணேசப் பெருமானை துதிப்பது போல ‘நீ’என்கிற பதத்தைச் சொல்லி நம்முள் இருக்கும் ஆன்மாவை உணரச் செய்ய முயற்சிக்கிறது.

அது பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்ப்போம். இந்த உபநிஷத்தில் இருக்கும் ஸ்லோகங்கள் கணபதியைப் போற்றிக் கூறுவதே ஆகும்.

முழுக்க முழுக்க கணபதியை ப்ரும்மத்தின் ரூபமாகவே பாடல்கள் போற்றிக் கூறுகின்றன. அவ்வாறு கூறும்போது சர்வமும் ப்ரும்மம் என்கிற வகையில் அதனைப் படிக்கும் நாமும் அதுவாகவே இருந்து கேட்பது போல அமைக்கப்பட்டிருக்கும்.

உபநிடதம் சார்ந்த பிரம்ம தத்துவ பதிவு தனியாக பதிவிடுகிறேன். இது ஸ்லோகங்கள் ஆல்பம் என்பதினால் தனி பதிவு தொடரும்.

கணபதியைக் குறித்துச் சொல்லி கூடவே நம்முள் இருக்கும் ப்ரும்மத்தையும் உணரச் செய்யும் அற்புதமான உபநிஷத் இது! எனக்கு மிகவும் பிடிக்கும்.

அவற்றில் சில வரிகளைப் பற்றிப் பார்ப்போம்! இதே போல் தத்துவ குவியல் என்று கூறலாம் ஒளவையார் எழுதிய வினாயகர் அகவல்.

இந்த ஸ்லோகங்கள் இப்படித் துவங்குகின்றன.

முதலில் கணபதியை வணங்கித் துவங்குகிறது.

கணபதியை உருவகித்து இப்படி ஆரம்பிக்கிறது.

த்வம் ஏவ ப்ரத்யக்ஷம் தத்வம் அஸி! –

‘த்வம்’ என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘நீ’ என்று பொருள்!

‘அஸி’ என்றால் ‘இருக்கிறது’ அல்லது ‘இருக்கிறாய்’ என்று வாக்கியத்திற்கேற்ப பொருள்படும்!

நீ ஒருவனே கண்கண்ட தத்துவமாக இருக்கின்றாய்!

த்வம் ஏவ கேவலம் கர்த்தா அஸி!

நீ ஒருவன் மட்டுமே படைப்பவனாக இருக்கின்றாய்!

இப்படியாக…

நீ ஒருவன் மட்டுமே யாவற்றையும் தாங்குபவனாக இருக்கின்றாய்!

நீ ஒருவன் மட்டுமே அழிப்பவனாகவும் இருக்கின்றாய்!

நீ ஒருவனே எல்லாமாக இருக்கிற பிரம்மமாக இருக்கின்றாய்!

நீயேதான் நித்யமாக இருக்கும் ஆத்மாவாக இருக்கின்றாய்!

ஒழுங்குடன் பேசுகிறவன்!
ஸத்யம் பேசுகிறவன்!

நீ எல்லாவற்றையும் காப்பவன்!

நீயே வாக்கைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே கேட்பவற்றைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே செயல்களைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே சித்தத்தைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே குருவைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே சிஷ்யரைக் காப்பாற்றுகின்றவன்!

நீயே மேற்குதிசையிலிருந்து காப்பவன்!

நீயே கிழக்கு திசையிலிருந்து இருந்து காப்பவன்!

நீயே தெற்கிலிருந்துக் காப்பவன்!

நீயே வடக்கிலிருந்துக் காப்பவன்!

நீ மேலே இருந்துக் காப்பவன்!

நீ கீழே இருந்தும் காப்பவன்!

சர்வ திசையிலிருந்தும் சுற்றிச் சுற்றி எப்போதும் காப்பவன்!

நீ வாக்குமயமானவன்
நீ ஞானமயமானவன்
நீ ஆனந்தமயமானவன்
நீ ப்ரம்மமயமானவன்
நீ நித்யமானதும் ஆனந்தமானதும் இரண்டற்ற மூலப்பொருளாக இருக்கிறாய்!

கண்முன்னால் தெரியும் ப்ரம்மமாக இருப்பதும் நீயே!

ஞானத்தால் உணரக்கூடியவனும், விஞ்ஞானத்தால் அறியப்படுபவனும் நீயே!

ப்ரும்த்தின் ரூபத்தை உணரச்செய்யும் வாக்கியங்கள்!

எல்லா உலகங்களும் எல்லாம் உன்னிடமிருந்தே தோன்றின!

எல்லா உலகங்களும் எல்லாம் உன்னாலேயே நிலைபெற்று இயங்குகிவருகிறது!

எல்லா உலகங்களும் உனக்குள்ளேயே ஒரே பொருளாய் அடங்கி இருக்கிறது!

நீயே பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிறாய்!

நீ நான்கு நிலைகளான வாக்கின் படிகளாக ஆகிறாய்!

நீ மூன்று குனங்களுக்கும் பேலானவன்!

நீ மூன்று தேஹங்களுக்கும் மேலானவன்!

நீ மூன்று காலங்களுக்கும் மேலானவன்!

நீ மூலாதாரத்தில் நித்யமாக நிலைபெற்று இருக்கிறாய்!

(லிங்கம் மற்றும் குதத்திற்கு நடுவிலான குண்டலினியில் நிலைத்திருப்பவன்)

நீயே மூன்று சக்திகளுமாகிறாய்!

(படைத்தல், காத்தல், அழித்தல்)
உன்னை யோகிகள் நித்யமாக தியானம் செய்கிறார்கள்!

நீ ப்ரம்மா
நீ விஷ்ணு
நீ ருத்ரன்
நீ இந்திரன்
நீ அக்னி
நீ வாயு
நீ சூரியன்
நீ சந்திரன்
நீயே ப்ரம்மம், பூலோகம், புவர் லோகம், சுவர்க லோகம்:: ஓம்!

இவ்வாறு கணபதிக் கடவுளை ஆன்மா மற்றும் ப்ரும்மத்தை நம்மை நோக்கிச் சொல்லுவதைப் போல உபதேசித்துவிட்டு பின் கணேசரின் ஸ்வரூபம் குறித்து ஸ்லோகங்கள் செல்லுகிறது.

கீழே இருக்கும் இந்த அழகான ஸ்லோகத்தை ஒரு முறை படியுங்கள்.

ஸ்ரீ கணபதி அதர்வஸீர்ஷ உபநிஷத்:-

ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா: பத்ரம்
பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா; ஸ்திரைரங்கைஸ் துஷ்டுவா ஸஸ்துநூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்வ வேதா: ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

அத கணேஸ அதர்வஸீர்ஷம் வ்யாக்யாஸ்யாம்:-

ஓம் நமஸ்தே கணபதயே த்வமேவ ப்ரத்யக்ஷம் தத்த்வமஸி த்வமேவ
கேவலம் கர்தாஸி த்வமேவ கேவலம் தர்தாஸி த்வமேவ கேவலம்
ஹர்தாஸி த்வமேவ ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மாஸி த்வம்
ஸாக்ஷாதா த்மாஸி நித்யம்
ருதம் வச்மி ஸத்யம் வச்மி
அவ த்வம் மாம் அவ வக்தாரம் அவ ஸ்ரோதாரம் அவ தாதாரம்
அவ தாதாரம் அவாநூசானமவ ஸிஷ்யம் அவ பஸ்சாத்தாத் அவ
புரஸ்தாத் அவ உத்தராத்தாத் அவ தக்ஷிணாத்தாத் அவ சோர்த்வாத்தாத்
அவாதராத்தாத் ஸர்வதோ மாம் பாஹி பாஹி ஸமந்தாத்
த்வம் வாங்மயஸ் த்வம் சின்மய: த்வம் ஆநந்தமயஸ்த்வம்
ப்ரஹ்மமய: த்வம் ஸச்சிதாநந்தா த்விதீயோஸி த்வம் ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்மாஸி த்வம் ஜ்ஞாநமயோ விஜ்ஞானமயோஸி
ஸர்வம் ஜகதிதம் த்வத்தோ ஜாயதே ஸர்வம் ஜகதிதம்
த்வத்தஸ்திஷ்டதி ஸர்வம் ஜகதிதம் த்வயி லயமேஷ்யதி ஸர்வம்
ஜகதிதம் த்வயி ப்ரத்யேதி த்வம் பூமி ராபோ நலோ நிலோ நப:
த்வம் சத்வாரி வாக்பதாநி
த்வம் குணத்ரயாதீத: த்வம் அவஸ்தாத்ரயாதீத: த்வம்
தேஹத்ரயாதீத: த்வம் காலத்ரயாதீத: த்வம் மூலாதார ஸ்திதோஸி
நித்யம் த்வம் ஸக்தித்ரயாத்மக: த்வாம் யோகினோ த்யாயந்தி நித்யம்
த்வம் ப்ரஹ்மாஸ்த்வம் விஷ்ணுஸ்த்வம் ருத்ரஸ்த்வம் இந்த்ரஸ்த்வம்
அக்நிஸ்த்வம் வாயுஸ்த்வம் ஸூர்யஸ்த்வம் சந்த்ரமாஸ்த்வம் ப்ரஹ்ம
பூர்புவ: ஸுவரோம்
கணாதிம் பூர்வமுச்சார்ய வர்ணாதீம் ததநந்தரம் அனுஸ்வார: பரதர:
அர்தேந்து லஸிதம் தாரேண ருத்தம் ஏதத்தவ மநுஸ்வரூபம்
ககார: பூர்வ ரூபம் அகாரோ மத்யம ரூபம் அநுஸ்வாரஸ் சாந்த்ய
ரூபம் பிந்துருத்தர ரூபம் நாத: ஸந்தானம் ஸஹிதா ஸந்தி:
ஸைஷா கணேஸ வித்யா கணக ருஷி: நிச்ருத் காயத்ரீச் சந்த:
கணபதிர் தேவதா ஓம் கம் கணபதயே நம:
ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத் :
ஏக தந்தம் சதுர் ஹஸ்தம் பாஸமங்குஸ தாரிணம் ரதம் ச வரதம்
ஹஸ்தைர் பிப்ராணம் மூஷக த்வஜம் ரக்தம் லம்போதரம் ஸூர்ப
கர்ணகம் ரக்த வாஸஸம் ரக்த கந்தாநுலிப்தாங்கம் ரக்த புஷ்பை:
ஸுபூஜிதம் பக்தாநுகம்பிநம் தேவம் ஜகத் காரணமச்யுதம்
ஆவிர்பூதம் ச ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரக்ருதே; புருஷாத்பரம் ஏவம்
த்யாயதி யோ நித்யம் ஸ யோகீ யோகிநாம் வர:
நமோ வ்ராத பதயே நமோ கண பதயே நம: ப்ரமத பதயே
நமஸ்தே ஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்ந நாஸிநே
ஸிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நம:
ஏதததர்வஸீர்ஷம் யோ தீதே ஸ ப்ரஹ்மபூயாய கல்பதே ஸ
ஸர்வ விக்நைர் ந பாத்யதே ஸ ஸர்வத்ர ஸுகமேததே ஸ பஞ்ச
மஹா பாபாத் ப்ரமுச்யதே ஸாயமதீயானோ தி வஸக்ருதம் பாபம்
நாஸயதி ப்ராதரதீயானோ ராத்ரி க்ருதம் பாபம் நாஸயதி ஸாயம்
ப்ராத: ப்ரயுஞ்ஜானோ பாபோ பாபோ பவதி ஸர்வத்ராதீயானோ
பவிக்னோ பவதி தர்மார்தகாம மோக்ஷம் ச விந்ததி
இதமதர்வஸீர்ஷமஸிஷ்யாய ந தேயம் யோ யதி மோஹாத்
தாஸ்யதி ஸ பாபீயான் பவதி ஸஹஸ்ர ஆவர்தனாத் யம் யம்
காமமதீதே தம் தமநேன ஸாதயேத்
அநேந கணபதிமபிஷிஞ்சதி ஸ வாக்மீ பவதி சதுர்த்யா மநஸ்நன்
ஜபதி ஸ வித்யாவான் பவதி இத்யதர்வண வாக்யம்
ப்ரஹ்மாத்யாவரணம் வித்யாந் ந பிபேதி கதாசநேதி
யோ தூர்வாங்குரைர் யஜதி ஸ வைஸ்ரவணோபமோ பவதி யோ
லாஜைர் யஜதி ஸ யஸோவான் பவதி ஸ மேதாவான் பவதி யோ
மோதக ஸஹஸ்ரேண யஜதி ஸ வாஞ்சித பலமவாப்நோதி ய: ஸாஜ்ய
ஸமித் பிர் யஜதி ஸ ஸர்வம் லபதே ஸ ஸர்வம் லபதே
அஷ்டௌ ப்ராஹ்மணான் ஸம்யக் க்ராஹயித்வா ஸூர்ய வர்சஸ்வீ
பவதி ஸூர்ய க்ரஹே மஹா நத்யாம் ப்ரதிமா ஸந்திதௌ வா
ஜப்த்வா ஸித்த மந்த்ரோ பவதி ! மஹா விக்நாத் ப்ரமுச்யதே மஹா
தோஷாத் ப்ரமுச்யதே மஹா பாபாத் ப்ரமுச்யதே ஸ ஸர்வவித்
பவதி ஸ ஸர்வவித் பவதி ய ஏவம் வேத இத்யுபநிஷத்
ஸஹ நாவவது ஸஹ நௌ புநக்து ஸஹ
வீர்யங்கராவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:
ஓம் பத்ரம் கர்ணேபி: ஸ்ருணுயாம தேவா: பத்ரம்
பஸ்யேமாக்ஷபிர் யஜத்ரா; ஸ்திரைரங்கைஸ் துஷ்டுவா ஸஸ்துநூபி:
வ்யஸேம தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தஸ்ரவா:
ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்வ வேதாநு ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாது
ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

இந்த ஸ்லோகத்தை நாம் எதுவாக இருந்து படிக்கிறோமோ அதுவாகவே உணருவோம்!

நாம் எதுவாகவெல்லாம் உணரப்படுகிறோமோ அதுவெல்லாம் ப்ரும்மமே!

உணரப்படும் போது நான் என்கிற இருப்பை எப்போது மறக்கிறோமோ அப்போது ப்ரம்மமாகிறோம்!

குமார் ராமநாதன்.